‘அது நான் பார்த்த ஐஸ்வர்யாராய் இல்ல.. அவ அப்படி ஒரு பேரழகி.. ரொம்ப பெரிய புத்திசாலி..ஆனா’ - பாடகி பளார்!
மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்ற பின்னர் நான் பார்த்த ஐஸ்வர்யா, முன்னதாக தான் ஐஸ்வர்யாராய் இல்லை என்றும் அவள் பெரிய புத்திசாலி பெண்ணாக இருந்தாள் என்று பேசி இருக்கிறார்.
பாடகி சோனா மொஹாபத்ரா, மிஸ் வேர்ல்டு பட்டத்தை வெல்வதற்கு முன்னும், பின்னும் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் தான் உணர்ந்த மாற்றம் குறித்தும், அதற்குப் பிறகான அவரது வாழ்க்கை குறித்தும் மனம் திறந்து பேசினார்.
உதவியற்றவராக இருப்பதைப் பற்றி
அவர் பேசும் போது, ‘இங்கிருக்கும் சுற்றுச்சூழலோடு பொருந்திப்போகும் ஒரு மனிதர், உதவியற்றத்தன்மைக்கு தள்ளப்படுகிறார் என்று நினைக்கிறேன். பொதுவாக உதவியற்றத்தன்மை பாலினம் சார்ந்தது கிடையாது.
இதற்கிடையே தொகுப்பாளர் ‘நீங்கள் எப்போது முட்டாளாக உங்களை காண்பித்துக்கொள்ள வேண்டும்’ என்ற வாக்கியம் சோசியல் மீடியாவில் ஷேர் செய்யப்பட்டதை குறித்து கேள்வி எழுப்பினார்.
மிக மிக நேர்த்தியாக பேசினாள்
அதற்கு பதிலளித்த அவர், ‘நானும் அதனை பார்த்தேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. என். ஐ.டி நுழைவு தேர்வுகளை எழுத நான் அப்போது மும்பைக்கு வந்திருந்தேன். மும்பை கலவரத்திற்கு முன்னதாக நான் ட்ரெயினில் சென்று இருந்தேன்.
அப்போது ஐஸ்வர்யாராய் ஆர்க்கிடெக்ட் படிப்பு படித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு என்னை விட வயது குறைவு; அவளுக்கு ஒரு வகுப்புத்தோழி இருந்தாள். ஐஸ்வர்யாவுக்கு குடும்ப நண்பர்களும் இருந்தார்கள். அவர்கள் அவருக்கு நெருக்கமானவராக இருந்தனர். அவள் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தாள். அவள் மிகவும் புத்திசாலி பெண்ணாகவும் இருந்தாள். மிக மிக நேர்த்தியாக பேசினாள்.
மிஸ் வேர்ல்டு பட்டம் வென்ற பின்னதாக, இன்னொரு சமயத்தில் அவளின் பேட்டியை காண நேர்ந்தது. அதில் நான் பார்த்தது முன்பு பார்த்த ஐஸ்வர்யா ராய் இல்லை. அவளது பதில்கள் நேர்மையாக இல்லை. ஒரு வேளை அவர் வேண்டுமென்றே கூட அப்படி இருந்திருக்கலாம். அவள் அதில் நிறைய சிரித்தாள். ஒரு வேளை அவள் அவளது இடத்தில் இருந்து பேசி இருக்கலாம்.
ஆனால் உண்மையில் ஐஸ்வர்யா மிகவும் புத்திசாலியான பெண் என்று நினைத்து இருந்தேன். ஆனால், அவள் இருக்கும் இடம் அவளை அப்படி இருக்கக்கூடாது என்று கட்டாயப்படுத்தி இருக்கலாம். நான் சொல்வது தவறாக கூட இருக்கலாம். ஆனால் அதில் அவளை மிகவும் குறைத்துக்கொண்டு காண்பித்ததாக எனக்குத் தோன்றியது.
ஐஸ்வர்யா பற்றி
ஐஸ்வர்யாராய் ஒரு கட்டிடக் கலைஞராக விரும்பி ரச்சனா சன்சாத் அகாடமி ஆஃப் ஆர்க்கிடெக் படிப்பில் சேர்ந்தார். பின்னர் அந்த படிப்பை நிறுத்திவிட்டு மாடலிங்கில் சேர்ந்தார். 1994 ஆம் ஆண்டில், அவர் உலக அழகியாக முடிசூட்டப்பட்டார். 1997 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டு அவுர் பியார் ஹோ கயா படத்தின் மூலம் பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு பல படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக பொன்னியின் செல்வன்: II (2023) படத்தில் நடித்திருந்தார்.
டாபிக்ஸ்