தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Aishwarya Rai Refuse To Act With Rajinikanth In Four Films

Aishwarya Rai: கோடி ரூபாய் கொடுத்தாலும் வேண்டாம்.. ரஜினியுடன் நான்கு படங்களில் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்..காரணம் என்ன?

Aarthi Balaji HT Tamil
Feb 26, 2024 08:45 AM IST

ஐஸ்வர்யா ராய், ரஜினியுடன் இணைந்து நடிக்கவிருந்த 4 பட வாய்ப்புகளை நிராகரித்தார்.

ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய்

ட்ரெண்டிங் செய்திகள்

ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார். அதன் பிறகு அவரை சினிமாவிற்குள் கொண்டு வந்தவர் இயக்குநர் மணிரத்னம். 1997 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராய் மீண்டும் கோலிவுட்டில் நுழைந்தார். 

தொடர்ந்து ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த்திற்கு ஜோடியாக நடித்தார். அதுவும் இரட்டை வேடங்களில் அற்புதமாக நடித்து இருந்தார். கண்டு கொண்டானே கண்டு கொண்டானே, குரு, ராவணன், எந்திரன் படத்திற்கு பிறகு சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் வரை தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட். 

தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஒரே ஒரு தமிழ் படத்தில் மட்டுமே நடித்து உள்ளார் . ஷங்கர் இயக்கிய இந்த மெகா படத்தில் சனா என்ற கேரக்டரில் நடித்து கவனத்தை ஈர்த்தார். 

ஐஸ்வர்யா ராய், சூப்பர் ஸ்டாரின் விருப்பமான நடிகைகளில் ஒருவர், எனவே அவருக்கு ஜோடியாக நடிக்க பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார். 

எந்திரன் மூலம் அது நிறைவேறியது. எந்திரனுக்கு முன், ரஜினிக்கு ஜோடியாக நான்கு படங்களில் ஐஸ்வர்யா ராய்யை நடிக்குமாறு அணுகினர். பல்வேறு காரணங்களால் ஐஸ்வர்யா ராய் அந்த நான்கு படங்களில் நடிக்க மறுத்துவிட்டார். அந்த நான்கு படங்களின் பெயர்களை கேட்டால் அதிர்ந்து போவீர்கள். 

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அவரை அணுகிய முதல் படம் படையப்பா. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய்யை நாயகியாக நடிக்க இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முடிவு செய்து இருந்தார். ஆனால் அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க மறுத்துவிட்டார். அடுத்து அவர் பாபாவின் வாய்ப்பை நிராகரித்தார். அது மனிஷா கொய்ராலாவுக்குச் சென்றது. 

பின்னர் பி.வாசு இயக்கிய சந்திரமுகி, ஷங்கர் இயக்கிய சிவாஜி ஆகிய படங்களில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்க இருந்தார் . ஆனால் அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டார். அவர் மறுத்த இந்த நான்கு படங்களில் மூன்று பிளாக் பஸ்டர் ஹிட் என்பது  குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்