Triangular Love Story: 16 ஆண்டுகளுக்கு பின் முக்கோண காதல் கதையுடன் களமிறங்கும் இயக்குநர்! ஹீரோயின் யார் தெரியுமா?
அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, வசந்த ரவி ஆகியோர் முக்கோண காதல் கதையின் மூலம் இணைகிறார்கள். பிரபல கிளாசிக் பாடலின் வரிகளில் படத்தின் தலைப்பு வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கண்ட நாள் முதல் படம் மூலம் பிரபலமான இயக்குநர் பிரியா 16 ஆண்டுகள் கழித்து முக்கோண காதல் கதையம்சத்தில் புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு பொன் ஒன்று கண்டேன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் படம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் மூலம் கம்பேக் கொடுக்கிறார் இயக்குநர் பிரியா.
இந்த படத்தின் தலைப்பான பொன் ஒன்று கண்டேன் என்ற பெயரில் சிவாஜி கணேசன் நடிப்பில் 1974இல் படம் வெளியானது. இதைத்தொடர்ந்து 2016இல் தெலுங்கு சினிமாவான பெல்லி சூப்லு ரீமேக்குக்கு இந்த தலைப்பை வைக்க படத்தயாரிப்பாளர்கல் முடிவு செய்தனர். ஆனால் அந்த படம் நிறுத்தப்பட்டது.
பின்னர் பெல்லி சூப்லு ரீமேக், 2019இல் ஹரீஷ் கல்யாண் - பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் ஓ மணப்பெண்ணே என்ற பெயரில் வெளியானது. இதையடுத்து பொன் ஒன்று கண்டேன் பட தலைப்பை பிரியா இயக்கும் படத்தும் மீண்டும் பயன்படுத்த முடிவு செய்துள்ளார்களாம்.
இயக்குநர் பிரியா கடைசியாக தமிழில் 2008இல் வெளியான ஹீரோவா?ஜீரோவா? படத்தை இயக்கியிருந்தார். இதன் பின்னர் கன்னட மொழியில் டாக்குமெண்டரி தொடர் ஒன்றை இயக்கிய பிரியா, கடந்த ஆண்டில் ஆனந்தம் என்ற வெப்சீரிஸை ஜீ5க்காக இயக்கினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்