தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Aiadmk General Secretary Eps Wishes Actor Ajith Kumar To Get Well

EPS Congratulations to Ajith: அப்போல்லோவில் அஜித்! நலம்பெற கோரி ஈபிஎஸ் ட்வீட்!

Kathiravan V HT Tamil
Mar 08, 2024 03:02 PM IST

”இன்று இரவோ அல்லது நாளையோ அஜித் வீடு திரும்பாவர் என தகவல்”

நடிகர் அஜித் - அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்
நடிகர் அஜித் - அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் அஜித் குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்றைய தினம் (07-03-2024) அனுமதிக்கப்பட்டார்.

நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் சிறிய கட்டி இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நிபுணத்துவம் பெற்ற சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மதுரை, கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை வந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும், அவரது மூளையில் இருந்ததாக கூறப்பட்ட கட்டி அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அஜித்தின் உடல் நலம் குறித்து விளக்கம் அளித்துள்ள அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா, அஜித்திற்கு மூளையில் கட்டி என்ற செய்தியெல்லாம் உண்மை இல்லை. வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது காதுக்கு கீழே நரம்பு வீக்கம் இருந்தது கண்டறியப்பட்ட அரைமணி நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.  இன்று இரவோ அல்லது நாளையோ அஜித் வீடு திரும்பாவர் என சுரேஷ் சந்திரா கூறி உள்ளார். 

இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் பூரண உடல்நலம் பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நடிகர் அஜித்குமார் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

IPL_Entry_Point