தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vj Siddhu: ஆபாச பேச்சு.. விதிமீறல்.. இரட்டை அர்த்த வார்த்தைகள்… Vj சித்து மீது பெண் வழக்கறிஞர் புகார்!

VJ Siddhu: ஆபாச பேச்சு.. விதிமீறல்.. இரட்டை அர்த்த வார்த்தைகள்… VJ சித்து மீது பெண் வழக்கறிஞர் புகார்!

Kalyani Pandiyan S HT Tamil
May 31, 2024 07:45 PM IST

VJ Siddhu:" அவரது வீடியோவில் அவர் ஆபாச வார்த்தைகள், இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்று இருக்கிறது. ஆகையால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” - VJ சித்து மீது பெண் வழக்கறிஞர் புகார்!

VJ Siddhu: ஆபாச பேச்சு.. விதிமீறல்.. இரட்டை அர்த்த வார்த்தைகள்… VJ சித்து மீது பெண் வழக்கறிஞர் புகார்!
VJ Siddhu: ஆபாச பேச்சு.. விதிமீறல்.. இரட்டை அர்த்த வார்த்தைகள்… VJ சித்து மீது பெண் வழக்கறிஞர் புகார்!

ட்ரெண்டிங் செய்திகள்

யூடியூபர் VJ சித்து

அந்த புகாரில், “ யூடியூபர் VJ சித்து போக்குவரத்து விதிகளை மதிக்காமல் அஜாக்கிரதை நடந்து கொண்டு இருக்கிறார். குறிப்பாக செல்போனில் பேசிய படி வாகனத்தை இயக்கி இருக்கிறார். அதனை அவர் அவரது யூடியூப்பில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இதனை பார்க்கும் மாணவர்கள், இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வழிவகுக்கும். அதே போல அவரது வீடியோவில் அவர் ஆபாச வார்த்தைகள், இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்று இருக்கிறது. ஆகையால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

இது குறித்து அவரது சீனியர் வழக்கறிஞர் பேசும் போது, “ வி.ஜே. சித்து மீது நாங்கள் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம். அவர் வாகனத்தில் செல்லும் போது மொபைல் போன் பயன்படுத்தி இருக்கிறார். அவரது வீடியோவில் எல்லைமீறிய வார்த்தைகள் இடம் பெற்று இருக்கின்றன. அதை பார்க்கும் மாணவர்கள், மக்கள் உள்ளிட்டோர் கெட்டுப் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது யூடியூப்பை முடக்க வேண்டும்.” என்று பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர் இன்னும் பலரும் யூடியூப்பில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்களே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு வழக்கறிஞர் , “நாங்கள் இப்போது இதனை பார்த்திருக்கிறோம். புகார் கொடுத்திருக்கிறோம் என்றார். இன்னும் வேறு யூடியூப் சேனலில் இது போன்ற விதிமீறல் இருக்கும் பட்சத்தில், நிச்சயமாக அதன் மீதும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இது பொதுநல வழக்குதான்.” என்றார்.

இதனையடுத்து இது டிடிஎஃப் வாசனுக்கு ஆதரவாக நிற்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் சட்டம் இங்கு எல்லோருக்கும் ஒன்றுதான். ஆகையால் அவருக்காகவெல்லாம் நாங்கள் ஆதரவாக நிற்க வில்லை. இது முழுக்க முழுக்க சமூக அக்கறை” என்று பேசினார்.

அது என்ன பிரச்சினை?

முன்னதாக, டிடிஎஃப் வாசன் கடந்த 15 ஆம் தேதி தனது காரில் சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி சென்று உள்ளார். அப்போது அவர் செல்போன் பேசியபடி கார் ஓட்டியுள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் மணிபாரதி சார்பில் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இந்த புகாரை தொடர்ந்து கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், பொது மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கு வகையில் வாகனம் இயக்குதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதனையடுத்து மே 29 இரவு அண்ணாநகர் காவல் துறையினர் டிடிஎஃப் வாசனை அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில் மதுரை நீதிமன்றத்தில் JM 6 நீதிபதி சுப்புலெட்சுமி முன் டிடிஃஎப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது டிடிஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர் ஜூன் மாதம் முதல் வராத்தில் டிடிஃஎப் வாசனுக்கு திரைப்பட சூட்டிங் உள்ளது. இதனால் ஜாமின் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். போலீசார் தரப்பில் நீதிமன்ற காவலில் எடுக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. பின்னர் மதியத்திற்கு பிறகு வழக்கு விசாரணை நடைபெறும் என நீதிபதி ஒத்தி வைத்தார்.

கிடைத்த ஜாமின்

இந்நிலையில் யூடியூப் சேனல் நடத்தும் இவர் பிரபல படுத்துவதற்காகவே இது போன்ற வீடியோக்களை வெளியிடுகிறார். இவரை இளைஞர்கள் பின்பற்றும் வாய்ப்பு உள்ளது. இவருக்கு நீதிமன்ற காவல் விதிக்க வேண்டும் என்ற அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

அதற்கு மனுதாரர் தரப்பில் ரஜினிகாந்த் சிகரெட் குடிப்பது போல் சினிமா படங்கள் வெளியாவதால் இளைஞர்கள் கெட்டு போகிறார்களா என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி சுப்புலெட்சுமி இனிமேல் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட மாட்டேன் என உறுதி மொழி பத்திரம் தாக்கல் செய்ய வலியுறுத்தி உள்ளார். மேலும் வீடியோவும் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு ஜாமின் வழங்கி உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்