Madhagajaraja: விஷாலின் மதகஜரஜா தெலுங்கு வெர்ஷன்.. ஏற்றமா? ஏமாற்றமா?.. என்ன சொல்கிறது பாக்ஸ் ஆபிஸ்?
Madhagajaraja: நடிகர் விஷாலின் மதகஜராஜா படத்தின் தெலுங்கு வெர்ஷன் வெளியாகி 2 நாட்கள் ஆன நிலையில், படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி படக்குழுவிற்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

Madhagajaraja: விஷாலின் 'மதகஜராஜா' படம் தெலுங்கு வெர்ஷன் பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழில் 50 கோடி வசூலித்த இந்தப் படம், தெலுங்கில் முதல் நாளே வெறும் 20 லட்சம் வசூல் மட்டுமே ஈட்டியுள்ளது. தெலுங்கில் 2 கோடி 20 லட்சம் ரூபாய் லாபம் ஈட்ட வேண்டிய இலக்குடன் வெளியான இந்தப் படத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
மதகஜராஜா
பொங்கல் பண்டிகையில் கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற படமாக விஷாலின் 'மதகஜராஜா' திகழ்ந்தது. 2013ல் படப்பிடிப்பு முடிந்த இந்தப் படம், 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து, வர்த்தக வட்டாரங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆக்ஷன் காமெடி கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். சந்தானம், சோனு சூட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மதகஜராஜா வசூல்
கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) 'மதகஜராஜா' படத்தின் தெலுங்கு பதிப்பு தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில் வெளியானது. தமிழில் கோடிகளில் வசூலித்த இந்த ஆக்ஷன் காமெடி படம், தெலுங்கில் முதல் நாளே தோல்வியைத் தழுவியுள்ளது. வெள்ளிக்கிழமை 20 லட்ச ரூபாய் தான் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 கோடி 20 லட்சம் ரூபாய் லாப இலக்குடன் தெலுங்கில் வெளியான இந்தப் படம், முதல் நாள் வசூலைப் பார்க்கும்போது லாபம் ஈட்டுவது சந்தேகமாகவே உள்ளது. இருப்பினும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வசூல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கையில் தியேட்டர் நிர்வாகத்தினர் உள்ளனர். இந்தப் படம் தமிழில் முதல் நாளே 3 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
2013ல் படப்பிடிப்பு முடிவு
சுந்தர்.சி இயக்கத்தில் உருவான 'மதகஜராஜா' படத்தின் படப்பிடிப்பு 2013ல் முடிவடைந்தது. தயாரிப்பு சார்ந்த பிரச்சனைகளால் வெளியீடு தள்ளிப்போனது. விஷாலின் முயற்சியால் அனைத்து தடைகளையும் தாண்டி, பொங்கல் பண்டிகை பரிசாக ஜனவரி 12 அன்று வெளியானது. 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 51 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
மதகஜராஜா கதை
ராஜா என்கிற மதகஜராஜா (விஷால்) ஒரு கேபிள் ஆபரேட்டர். மாதவி (அஞ்சலி) என்ற பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால் அவளுடைய தந்தையால் அவர்களின் காதல் முறிந்து போகிறது. ஒரு பள்ளி ஆசிரியரின் மகளின் திருமணத்திற்கு ராஜா செல்கிறான். அங்கு தனது பழைய நண்பர்கள் பிரச்சனையில் சிக்கியிருப்பதை அறிந்து கொள்கிறான்.
அவர்களுக்காக டைக்கூன் காகர்லா விஸ்வநாத் (சோனு சூட்) உடன் போராட ராஜா தயாராகிறானா? அல்லது தனது புத்திசாலித்தனத்தால் விஸ்வநாத்தை ராஜா வீழ்த்துகிறானா? திருமணத்தில் ராஜாவுக்கு அறிமுகமான மாயா (வரலட்சுமி சரத்குமார்) யார்? ராஜாவின் திட்டங்களால் அமைச்சர் சத்திபாண்டு எப்படி வலிமையானவனாகிறான் என்பதுதான் மதகஜராஜா படத்தின் கதை.
விஜய் ஆண்டனி இசை
விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் உள்ள மை டியர் லவ்வரு பாடல் 12 ஆண்டுகளுக்கு முன்பே ஹிட் அடித்த நிலையில், தற்போது மீண்டும் வைப் குறையாமல் தமிழ் மக்கள் அதனை கொண்டாடி வந்தனர். அத்துடன் படத்திலுள்ள மற்ற பாடல்களையும் மக்கள் கொண்டாடினர். அதன் வெளிப்பாடாக விஜய் ஆண்டனி கான்செர்ட்டில் விஷால் பாடிய மை டியர் லவ்வரு பாடலுக்கு மக்கள் ஆராவாரம் செய்தனர். மதகஜராஜா வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் சுந்தர்.சி உடன் விஷால் மீண்டும் ஒரு படம் இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்