Shrutika: 'வாழ்க்கையில நான் எடுத்த சூப்பர் முடிவு இது.. மோசமான முடிவு இது'- ஸ்ருதிகா ஷேரிங்ஸ்
Shrutika: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் நடிகை ஸ்ருதிகா பல்வேறு விஷயங்கள் குறித்து நடிகை ஷகிலாவிற்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

Shrutika: தமிழ் சினிமாவில் சிறு வயதிலேயே நடிகையாக அறிமுகமாகி, பின் விஜய் டிவியின் குக் வித் கோமாளி டைட்டில் வின்னராக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் ஸ்ருதிகா. இவர் தொழில் முனைவோராக சாதித்தவரும் கூட.
பிக்பாஸ் வீட்டில் ஸ்ருதிகா
இப்படி தன்னுள் பல திறமைகள் கொண்டுள்ள ஸ்ருதிகா தான் இந்தி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் தமிழ் பிரபலம். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த அத்தனை நாளும் தன்நை நோக்கி வந்த பால்களை சிக்ஸர்களாகவே அடித்து ஆடி வந்தார். அது சந்தோஷமாக இருந்தாலும் சரி, கோவமாக இருந்தாலும் சரி எல்லாமே ஃபுல் ஸ்பீடு தான். அப்படிப்பட்டவர், பிக்பாஸ் வீட்டில் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், திடீரென இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
எலிமினேஷன்
இவரது எலிமினேஷன் வார இறுதி நாட்களில் வைக்காமல், வாரத்தின் நடுவே வைத்து வெளியேற்றப்பட்டது பலருக்கும் சந்தேகத்தையே எழுப்பி வந்தது. இருப்பினும், ஸ்ருதிகா ஓட்டிங் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஸ்ருதிகா கலாட்டா யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி அளித்தார். இந்தப் பேட்டியை நடிகை ஷகீலா தொகுத்து வழங்கினார்.
பிக்பாஸில் ஓட்டிங் இல்லை
அந்தப் பேட்டியில், பிக்பாஸ் வீட்டில் ஓட்டிங் முறையில் என்னை வெளியேற்றினர் என ஸ்ருதிகா சொல்ல, பிக்பாஸ் வீட்டில் வோட்டிங் முறையே கிடையாது. எனக்கு யார் மீதும் பயம் கிடையாது என ஷகீலா கூறினார்.
தொடர்ந்து பேசிய ஸ்ருதிகா, நான் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற முதல் 40 நாள் என்ன வைத்து தான் ப்ரோமோ போட்டாங்க. எனக்கு சல்மான் சார் ரொம்ப சப்போர்ட்டா இருந்தாரு. நான் உள்ள இருந்த நாள்ல ஒருநாள் கூட என்னை அவரு திட்டினது கிடையாது என்றார்.
என் வாழ்க்கையின் சரியான முடிவு
பின், தன் கணவர் பற்றி பேசிய ஸ்ருதிகா, நான் வாழ்க்கையில் நான் எடுத்த சரியான முடிவுன்னா அது அர்ஜூன் தான். அவன் எனக்கு லக்குல தான் மாட்டுனான். நான் காலேஜ் படிக்கும்போது எனக்கு ஃபேஸ்புக்ல அக்கவுண்ட் இருக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அப்போ, நான் காலேஜ் ஃபைனல் இயர் படிக்கும் போது தான் அர்ஜூன் எனக்கு ஃபேஸ்புக்ல ரெக்வெஸ்ட் கொடுத்தாரு. அப்போ பேசினதுல தான் நான் எதிர்பார்த்ததையும் தாண்டி எனக்கு கெடச்சவருன்னு தெரிஞ்சது. நான் காலேஜ் படிக்கும் போது எல்லாம் எனக்கு பெருசா யாரும் புரபோஸ் பண்ணுனது இல்ல. அர்ஜூனோட கல்யாணம் ஆகியே 14 வருஷம் ஆகிடுச்சு. இப்போ வரைக்கும் நாங்க பயங்கரமா செட் ஆகிட்டோம். என்னோட சோசியல் மீடியா பாஸ்வேர்ட் எல்லாம் அவன் தான் செட் பண்ணுவான், அந்த அளவுக்கு எங்க நம்பிக்கை இருக்கு என்றார்.
என் வாழ்க்கையின் தப்பான முடிவு
அதேசமயம், என் வாழ்க்கையில நான் எடுத்த தப்பான முடிவு ரொம்ப சின்ன வயசுலயே நடிக்க வந்தது. நான் நடிக்க வந்த சமயத்துல 9வது தான் படிச்சிட்டு இருந்தேன். அப்போ எனக்கு எதுவுமே தெரியாது. ஒரு மேக்கப் சென்ஸ் இல்ல, டான்ஸ் தெரியாது, நடிக்க தெரியாது. இப்படி எதுவும் தெரியாம யார் எது சொன்னாலும் கேக்கனும். அந்த பெரிய வாய்ப்ப எல்லாம் ரொம்ப சாதாரணமா பயன்படுத்திட்டேன். ஸ்கூல் யூனிஃபார்ம்ல ஜாலியா சுத்திட்டு இருந்தேன். ஒருகட்டத்துல நான் சினிமாவ விட்டுட்டு போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது. நம்ம வாழ்க்கையில எத பண்ணுனாலும் முழு மனசோட பண்ணனும். இல்லன்னா அத பண்ணவே கூடாதுன்னு தெரிஞ்சுகிட்டேன்." என்றார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்