Aishu: பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் ஐஸூ வெளியில் தோன்றி செய்த சேட்டை
பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் ஐசு வெளியில் செய்த சேட்டை குறித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 7ல் இருந்த வெளியேறியதும் அமைதியாக இருந்த ஐசு,தற்போத் நிகழ்ச்சி ஒன்றில் தோன்றி செம குத்தாட்டம் போட்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 என்னும் ரியாலிட்டி ஷோ, தமிழ் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அதிகம்பேரால் பார்க்கப்படும் நிகழ்ச்சியாகும்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்ற ஐசுவும் நிக்சனும் மிகவும் நெருங்கிப் பழகி வந்தனர். அப்போது, நிக்சன் சோர்வாக அறையின் மற்றொரு பகுதியில் இருந்தார். இடையில் கண்ணாடி இருந்தது. அருகில் வந்த ஐசு அவருக்கு முத்தம் கொடுப்பதுபோல், முக பாவனை செய்தார். இது தமிழ் பிக்பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாகப் பார்க்கப்பட்டது. சர்ச்சை வெடித்தது. இதனால் கொதிப்படைந்த ஐசுவின் பெற்றோர், பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நடக்கும் பகுதிக்கு வந்து குடும்ப மானம் போவதாக அழுதனர். இதனால், அடுத்தவாரமே ஐசு ஏதோ சில காரணங்களுக்காக எவிக்ட் செய்யப்பட்டார்.
அதன்பின் ஐசு வெளியில் வந்து போட்ட பதிவில்,' அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். என்னுடைய குடும்பத்துக்கு அவமானத்தை தேடி தந்துவிட்டேன். காதல், கோபம், நட்பு என் கண்ணை மறைத்துவிட்டது. என் குடும்பத்தை விட்டுவிடுங்கள். பிரதீப்பிற்கு எதிரான ரெட் கார்டிற்காக மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். 21 வயது பெண்ணுக்குண்டான முயற்சி தான் தனக்கும் இருந்தது. எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு வாழும் உதாரணம் தான் தான். தன்னை மன்னியுங்கள்’ என்று பதிவிட்டார்.
அதன்பின் எந்த ஒரு ஊடகத்திலும் அவர் பேட்டி தரவில்லை. இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக மேடையேறிய ஐசு, காவாலய்யா பாட்டுக்கு குத்தாட்டம் போட்டார். ஆனால், அங்கு முகமலர்ச்சியில்லாமல் ஐசு ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
