Vijay Sethupathi: ‘அன்று தொழிலாளியாக.. இன்று ராஜாவாக’ - ‘கமலுக்கு பிறகு சேதுபதி’ - புர்ஜ் கலீபாவில் சாதனை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Sethupathi: ‘அன்று தொழிலாளியாக.. இன்று ராஜாவாக’ - ‘கமலுக்கு பிறகு சேதுபதி’ - புர்ஜ் கலீபாவில் சாதனை!

Vijay Sethupathi: ‘அன்று தொழிலாளியாக.. இன்று ராஜாவாக’ - ‘கமலுக்கு பிறகு சேதுபதி’ - புர்ஜ் கலீபாவில் சாதனை!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 11, 2024 03:54 PM IST

Vijay Sethupathi: கமல்ஹாசனுக்கு பிறகு புர்ஜ் கலீபாவில் இடம் பெற்ற நடிகராக விஜய் சேதுபதி மாறியிருக்கிறார். - புர்ஜ் கலீபாவில் சாதனை!

Vijay Sethupathi: ‘அன்று தொழிலாளியாக.. இன்று ராஜாவாக’ - ‘கமலுக்கு பிறகு சேதுபதி’ - புர்ஜ் கலீபாவில் சாதனை!
Vijay Sethupathi: ‘அன்று தொழிலாளியாக.. இன்று ராஜாவாக’ - ‘கமலுக்கு பிறகு சேதுபதி’ - புர்ஜ் கலீபாவில் சாதனை!

தலைமை செயல் அதிகாரி மெர்லின் தலைமையில் இயங்கும் விட் ஈவன்ட்ஸ் குழு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மாவீரன்', 'போர் தொழில்', 'ஃபர்ஹானா', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', கார்த்தியின் 'ஜப்பான்' உள்ளிட்ட படங்களுக்கு அமீரகத்தில் புரோமஷனல் நிகழ்ச்சிகளை நடத்தி கொடுத்துள்ளது.

மகாராஜா புரோமோஷன்

அந்த வகையில், உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில், விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான 'மகாராஜா' ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதில் விட் ஈவன்ட்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோ நிறுவனங்கள் ஏற்பாட்டில் போஸ்டரும் வெளியிடப்பட்டது. தமிழ் திரைப்பட நிகழ்வுகள் புர்ஜ் கலீபாவில் அரிதாகவே நடைபெறும் நிலையில், இந்த பிரமாண்ட கட்டிடத்தில் முன்னோட்டம் திரையிடப்பட்ட இரண்டாவது தமிழ் திரைப்படம் என்ற பெருமையை 'மகாராஜா பெற்று இருக்கிறதாம். இதற்கு முன் 'விக்ரம்' படத்தின் முன்னோட்டம் இங்கு வெளியானது. இரண்டு திரைப்படங்களிலும் விஜய் சேதுபதி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சம் பிழைக்க வந்தேன்

முன்னதாக,நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், இயக்குநர் நித்திலன் சாமிநாதன், தயாரிப்பாளர்கள் சுதன், ஜெகதீஷ் பழனிச்சாமி மற்றும் எடிட்டர் பிலோமின் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய விஜய் சேதுபதி, ஒரு காலத்தில் நான் இந்த நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வந்தேன். அதே ஊரில் இன்று பாராட்டு கிடைக்கிறது என வேடிக்கையாக இருக்கிறது என்று பேசினார். 

முன்னோட்ட வெளியீட்டை தொடர்ந்து துபாய் லூலூ சிலிகான் சென்டிரல் மால் வளாகத்தில், இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரை நட்சத்திரங்களின் முன்னிலையில், தந்தை-மகள் இடையே பாசத்தை கூறும் தாயே தாயே பாடலுக்கு W.I.T குழுவை சேர்ந்த தந்தை-மகள் என 10 ஜோடியினர் பங்குபெற்று பார்வையாளர்களின் பாராட்டை பெற்றது.

விஜய் சேதுபதிக்கு கெளரவம்

நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதிக்கு துபாய் பொருளாதாரத் துறையின் முன்னாள் இயக்குநரும், தற்போதைய ஆலோசகருமான வலீத் அப்துல்மாலிக் முகம்மது அஹ்லி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். ஏற்றம் குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தினேஷ்குமார் குருசுவாமி, கே.ஆர்.ஜி குழும நிறுவனங்களின் தலைவர் கண்ணன் ரவி, லைன் முதலீட்டு நிறுவனத்தை சேர்ந்த சிராஜ், ஃபர்தான் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மேலாளர் முருகன் செல்லையா, துபாய் பெண்கள் கல்லூரியின் பேராசிரியை லக்‌ஷ்மி பிரியா உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

தமிழின் பெருமையை சொல்லும் கலை நிகழ்ச்சிகளையும், பல முன்னனி நடிகர்களின் படங்களுக்கு புரோமோஷன் நிகழ்ச்சிகளையும் அமீரகத்தில் தொடர்ந்து நடத்த விட் ஈவன்ட்ஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றனர். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.