தமிழ் செய்திகள்  /  Entertainment  /  After Bigg Boss Season 7 Pradeep Antony Cheated On Maya

Pradeep Vs Maya: 'செக்மேட்.. அண்ணன்தாண்டி ராக் ஸ்டார்' - மாயாவை வம்பிழுத்த பிரதீப்

Marimuthu M HT Tamil
Jan 16, 2024 03:28 PM IST

பிக்பாஸ் சீசன் 7க்குப் பின் மாயாவை பிரதீப் ஆண்டனி எக்ஸ் தளத்தில் வம்பிழுத்த சம்பவம் வைரல் ஆகிவருகிறது.

'செக்மேட்.. அண்ணன்தாண்டி ராக்ஸ்டார்' - மாயாவை வம்பிழுத்த பிரதீப்
'செக்மேட்.. அண்ணன்தாண்டி ராக்ஸ்டார்' - மாயாவை வம்பிழுத்த பிரதீப்

ட்ரெண்டிங் செய்திகள்

மாயா 23,054 வாக்குகளைப்பெற்று மூன்றாவது இடத்தையும், மணிச்சந்திரா 35,184 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தையும், மறுபுறம், அர்ச்சனா 1,09,468 வாக்குகளையும் பெற்று முதல் இடத்தையும் பெற்று டைட்டில் வின்னர் ஆனார்.

அர்ச்சனாவின் வெற்றியைப் பலரும் கொண்டாடி வருகிறார்கள். மறுபக்கம் அவர் பிஆர் வைத்து தான் டைட்டில் பட்டத்தை வென்றார் என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் முடிந்தாலும் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. அதாவது மாயாவால் ரெட் கார்டு காட்டப்பட்டு, பின்னர் எவிக்ட் செய்யப்பட்ட பிரதீப் ஆண்டனி தற்போது ஒரு டிவீட் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

அந்த டிவீட் வைரல் ஆகி வருகிறது.

அந்தப் பதிவில், ''ஹாய் மாயா கிருஷ்ணன் லைஃப்லாம் எப்படி போகுது?. நீ நல்லா இருப்பேனு தெரியும். நான் இப்போது சொல்ல விரும்புறது என்னவென்றால், என்னுடைய ஃபிரண்ட்ஷிப்புக்கு 50 லட்ச ரூபாய் விலை இருக்கு. நான் அவ்வளவு எல்லாம் வொர்த் இல்லைன்னு நீ நினைச்சால், எனக்குப் புரியுது. நான் உன் கூட நல்லாவே விளையாண்டுருக்கேன் செக் மேட். அண்ணன்தாண்டி ராக்ஸ்டார்’’ என மாயாவும் பிரதீப் ஆண்டனியும் பாடிய வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் லெஸ்பியன் குறித்த ஒரு வரியை அழுத்தி, அழுத்தி மாயா பாடிக்காட்டினார்.

இதைப் பார்த்த ஒரு எக்ஸ் தளப் பதிவர், ’குற்றச்சாட்டு ஸ்பெஷலிஸ்ட் நச்சுத்தன்மைமிக்க மாயாவிடம் இருந்து பாதுகாப்பாக இருங்கள். அவளுக்கு 50 லட்சம் என்பதே அதிகம். வெளியில் இருந்து வந்த நண்பர்கள் சொன்ன குறிப்புகளை வைத்து தன்னை ஒரு புத்தரைப் போல் காட்ட நினைத்தார்,மாயா’ என மாயாவை விமர்சித்துள்ளனர்.

மேலும் இன்னொரு சமூக வலைதளவாசி, ’பிரதீப் நீங்கள் சில உணர்ச்சியற்ற நடத்தைக்காக மன்னிப்பு கேட்டிருந்தால் உங்களது பிக்பாஸ் வரலாறே மாறியிருக்கும். எனவே, தங்கள் தரப்பின் குறைபாடுகளையும் ஏற்றுக்கொண்டு பிற போட்டியாளர்களை தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு உங்கள் ரசிகர்களிடம் சொல்லுங்கள்’ எனப்பதிவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.