Cuddalore Garudan: நரிக்குறவர்களுக்கு டிக்கெட் இல்லையா?..ஓடி வந்த வட்டாட்சியர்; காலரை தூக்கி விட்ட மக்கள்!-நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cuddalore Garudan: நரிக்குறவர்களுக்கு டிக்கெட் இல்லையா?..ஓடி வந்த வட்டாட்சியர்; காலரை தூக்கி விட்ட மக்கள்!-நடந்தது என்ன?

Cuddalore Garudan: நரிக்குறவர்களுக்கு டிக்கெட் இல்லையா?..ஓடி வந்த வட்டாட்சியர்; காலரை தூக்கி விட்ட மக்கள்!-நடந்தது என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Jun 01, 2024 04:49 PM IST

Cuddalore Garudan: நரிக்குறவர்களுக்கு திரையரங்க நிர்வாகம் டிக்கெட் தர மறுத்ததாகவும், திரையரங்கிற்குள் செல்ல அவர்களை அனுமதிக்க வில்லை என்றும் புகார் எழுந்தது. - நடந்தது என்ன?

Cuddalore Garudan: நரிக்குறவர்களுக்கு டிக்கெட் இல்லையா?..ஓடி வந்த வட்டாட்சியர்; காலரை தூக்கி விட்ட மக்கள்!-நடந்தது என்ன?
Cuddalore Garudan: நரிக்குறவர்களுக்கு டிக்கெட் இல்லையா?..ஓடி வந்த வட்டாட்சியர்; காலரை தூக்கி விட்ட மக்கள்!-நடந்தது என்ன?

அனுமதி மறுப்பு 

இந்த நிலையில் கடலூரில் உள்ள திரையரங்கு ஒன்றில் கருடன் படத்தை பார்க்க வந்த 20க்கும் மேற்பட்ட நரிகுறவர்களுக்கு திரையரங்க நிர்வாகம் டிக்கெட் தர மறுத்ததாகவும், திரையரங்கிற்குள் செல்ல அவர்களை அனுமதிக்க வில்லை என்றும் புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ வைரல் ஆன நிலையில், இது குறித்து நரிக்குறவ மக்கள் வட்டாட்சியரிடம் முறையிட்டதாக தெரிகிறது. 

இந்த நிலையில், வட்டாட்சியர் நடவடிக்கை எடுத்ததின் பேரில், நரிக்குறவர்கள் கருடன் டிக்கெட்டுகளை பெற்று தியேட்டருக்குள் சென்றனர். முன்னதாக சென்னை ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கருடன் குழு

நெடுஞ்சாலை படப்புகழ் ஷிவிதா நாயர், விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த ரோஷிணி ஹரிப்பிரியன், பிரகிடா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்து உள்ளார்கள்.படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், ரேவதி சர்மா, ஷிவதா நாயர், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து உள்ளனர். லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.

கருடன் கதை என்ன?

கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை தனக்கு சாதகமாக மாற்ற துடிக்கிறார் ஒரு அரசியல்வாதி. ஆனால், அந்த இடத்தின் மூலபத்திரம் கோயில் டிரஸ்டி வசம் இருக்கிறது. அந்த பத்திரத்தை கைப்பற்றி, இடத்தை எப்படியாவது தன்வசமாக்க வேண்டும் என திட்டமிடுகிறார் அரசியல்வாதியாக நடிக்கும் ஆர். வி. உதயக்குமார். அதே ஊரில் இரு நண்பர்கள் இணைபிரியா நட்புடன் இருக்கிறார்கள்.

அந்த இரு நண்பர்களில் ஒருவர் சசிக்குமார், மற்றொருவர் உன்னி முகுந்தன். உன்னியின் நிழலாக, அவருக்கு விஸ்வாசமாக இருப்பவர் தான் சொக்கன். அந்த சொக்கன் தான் சூரி. பத்திரத்தை கைப்பற்ற அரசியல்வாதியாக ஆர். வி. உதயக்குமார் என்னென்ன செய்கிறார். என்ன மாதிரி திட்டமிடுகிறார், அதற்காக என்ன மாதிரியாக சம்பவங்கள் நடக்கிறது என்பது தான் படத்தின் முழு கதை.

கருடன் முதல் நாள் வசூல்

இந்நிலையில் கருடன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி கருடன் படம் முதல் நாள் மட்டுமே 4 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இது உறுதியான தகவல் இல்லை. படத்திற்கு கிடைத்த பாசிட்டிவான வரவேற்பால் வார இறுதியில் கருடன் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.