Madhagajaraja Box Office: சர்ரென குறைந்த வசூல்.. 15ம் நாளுக்கு பின் ஆஃப் ஆன மதகஜராஜா வசூல்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Madhagajaraja Box Office: சர்ரென குறைந்த வசூல்.. 15ம் நாளுக்கு பின் ஆஃப் ஆன மதகஜராஜா வசூல்..

Madhagajaraja Box Office: சர்ரென குறைந்த வசூல்.. 15ம் நாளுக்கு பின் ஆஃப் ஆன மதகஜராஜா வசூல்..

Malavica Natarajan HT Tamil
Jan 28, 2025 09:07 AM IST

Madhagajaraja Box Office: மதகஜராஜா படம் வெளியாகி 2 வாரங்களுக்கு பின், படத்தின் வசூல் மிக மோசமாக குறைந்துள்ளது.

Madhagajaraja Box Office: சர்ரென குறைந்த வசூல்.. 15ம் நாளுக்கு பின் ஆஃப் ஆன மதகஜராஜா வசூல்..
Madhagajaraja Box Office: சர்ரென குறைந்த வசூல்.. 15ம் நாளுக்கு பின் ஆஃப் ஆன மதகஜராஜா வசூல்..

படத்தின் கலெக்‌ஷன்

மதகஜராஜா திரைப்படம் வெளியாகி 17ம் நாளான நேற்று படம் 0.36 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மொத்தமாக இதுவரை 51.5 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை கணக்கிட்டு சொல்லும் சாக்னில்க் டாட் காம் இணையதளம் தெரிவித்துள்ளது.

படத்தை பார்த்த மக்கள் படம் குறித்து பாசிட்டிவான கருத்துக்களை வெளியிட்ட நிலையில், அதன் மூலமாக காலை, மாலை மற்றும் இரவு காட்சிகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையானது அதிகரித்தது. இதனால், அடுத்தடுத்த நாட்களில் படம் பார்க்க வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருந்தது.

அதுவும் விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மதகஜராஜா படத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது. இதனால், படத்தின் வசூலும் அதிகரித்தது. ஆனால், தற்போது படம் வெளியாகி 2 வாரங்கள் ஆன பிறகு படத்தின் வசூல் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

போட்டி படங்களை காலி செய்த சுந்தர்.சி

தமிழ்நாட்டில் இந்தப்படத்திற்கு போட்டியாக வேறு எந்தப்படங்களும் சோபிக்க வில்லை; தெலுங்கில் கேம் சேஞ்சர் மற்றும் டாகு மகாராஜ் போன்ற திரைப்படங்கள் போட்டிப்படங்களாக இருந்த போதும் மதகஜராஜா படத்திற்கு அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

வைப் ஆன விஷால் கான்செர்ட்

நடிகர் விஷால் மதகஜராஜா படத்தில் பாடிய மை டியர் லவ்வரு பாடல் 12 வருடங்களுக்கு முன்பே பெரிய ஹிட் கொடுத்தது. அந்த வைப் இன்றும் குறையாமல் இருப்பதால், விஷால் விஜய் ஆண்டனியின் கான்செர்டில் பாட இருக்கிறார். இவர் பாட ஆரம்பித்ததும் வந்த சத்தத்தை பார்த்தவர்களுக்கு இது விஜய் ஆண்டனி கான்செர்ட்டா இல்லை விஷால் கான்செர்ட்டா என கேட்கும் அளவுக்கு சந்தேகம் வந்தது.

தெலுங்கிலும் வெளியீடு

விஷாலின் மதகஜராஜா திரைப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு, ஜனவரி 31 அன்று வெளியாகவுள்ளது. இந்த நகைச்சுவைப் படத்திற்கு தமிழ் ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். இந்த பொங்கலுக்கு தமிழ்நாட்டிலும், தெலுங்கானாவிலும் வெளியான ஷங்கரின் கேம் சேஞ்சர் திரைப்படம் தோல்வியடைந்ததும் மதகஜராஜாவின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்ததாக பலரும் கூறி வருகின்றனர்.

வெற்றிப் படம்

தெலுங்கிலும் இந்தப் படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டினால், மதகஜராஜா மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும். இந்தப் படத்தில் விஷாலுடன் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.