தவெக மாநாட்டில் விஜய்யின் பேச்சு..வெளியான முக்கிய தகவல்! தொண்டர்களுக்கு உதவி புரிய பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தவெக மாநாட்டில் விஜய்யின் பேச்சு..வெளியான முக்கிய தகவல்! தொண்டர்களுக்கு உதவி புரிய பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம்

தவெக மாநாட்டில் விஜய்யின் பேச்சு..வெளியான முக்கிய தகவல்! தொண்டர்களுக்கு உதவி புரிய பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 24, 2024 10:08 AM IST

தவெக மாநாட்டுக்கு வருபவர்களுக்கு சட்ட உதவியை அளிக்கும் விதமாக தொகுதி வாரியாக தற்காலிக பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநாட்டில் தளபதி விஜய் பேசுவது குறித்தும் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

தவெக மாநாட்டில் விஜய்யின் பேச்சு, தொண்டர்களுக்கு உதவி புரிய பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம்
தவெக மாநாட்டில் விஜய்யின் பேச்சு, தொண்டர்களுக்கு உதவி புரிய பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம்

மாநாட்டுக்கு இன்னும் இரு நாள்களே எஞ்சியருக்கும் நிலையில், இறுதிகட்ட பணிகள் விறுவிறுபாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் மாநாட்டு வரும் கட்சி உறுப்பினர்கள், தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு உதவிடும் விதமாக பொறுப்பு வழக்கறிஞர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாநாட்டில் தளபதி விஜய் எவ்வளவு நேரம் பேச இருக்கிறார் என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்காலிக தொகுதி பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம்

இதுதொடர்பாக தவெக என்று அழைக்கப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ள வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, மாநாட்டுப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

நமது கழகத்தின் சார்பில், கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு, மாநாட்டில் பங்கேற்கும் கழகத் தோழர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் சட்ட ரீதியில் உதவிடும் வகையில் தமிழகத்தின் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மாநாட்டுக்கான தற்காலிகத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

இந்தத் தற்காலிக தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை தொகுதிகளிலும், அதனை ஒட்டியுள்ள சட்டப்பேரவை தொகுதிகளிலும், மாநாட்டுக்கு வகும் கட்சி தோழர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் சட்ட ரீதியான உதவிகளை மேற்கொள்வார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் எவ்வளவு மணி நேரம் பேசுகிறார்

இந்த மாநாட்டில் விஜய் இரண்டு மணி நேரம் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும் என்றும், ஆறு மணிக்கு விஜய் தனது உரையை தொடங்குவார் என்றும், அவர் எட்டு மணி வரை 2 மணி நேரம் பேசுவார் என்றும் கூறப்படுகிறது. தனது கட்சியின் கொள்கையை முழுக்க பிரகடனப்படுத்தும் வகையில் அவருடைய பேச்சு இருக்கும் என தவெக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இந்த மாநாடு தொடங்கும் முன் மாநாட்டு திடலில் 100 அடி உயரத்தில் இருக்கும் கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றிய பின்னர் விஜய் மேடைக்கு வருவார். அவர் மேடைக்கு வருவதற்காகவே பிரத்யேக வழி அமைக்கப்பட்டுள்ளது எனவும் சொல்லப்படுகிறது.

தொண்டர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

கடந்த சில நாள்களுக்கு முன்னர் தவெக மாநாட்டுக்கு வருபவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி தெரிவிக்கப்பட்டது. அதில், மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் மாநாட்டுக்கு மது அருந்தி விட்டு வரக்கூடாது. மீறி மது அருந்தி விட்டு வந்தால் மாநாட்டு திடலுக்குள் வர அனுமதி மறுக்கப்படும்.

மூத்த குடிமக்கள், மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்புடன் அழைத்து வர வேண்டும். மாநாட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வருபவரோடு பின்னால் அமர்ந்திருப்பவரும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து வர வேண்டும். போக்குவரத்து விதிகளை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். காவல்துறையினருக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இது போல் சுமார் 10க்கும் மேற்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது அனைவர் மத்தியிலும் கவனத்தை பெற்றது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.