அவருக்கும் இவருக்கும் லிங்கா?... "டேய் அந்த மனுஷன் குழந்தை டா.. எனக்கு பேச அருகதையே கிடையாது" - ஏடிகே பதிலடி!
ஏ.ஆர். ரஹ்மான் ஒரு குழந்தை என்று பேசி பாடகர் ஏடிகே வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்
ஏ.ஆர். ரஹ்மானையும் மோகினி டேவையும் இணைத்து வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அதற்கு ஏடிகே பதிலடி கொடுத்து இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி ஒரு மனிதனை என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்ததே கிடையாது. அவரைப் பற்றி பேசுவதற்கு எனக்கு அருகதையே கிடையாது. அவருடைய பர்சனல் லைஃபுக்குள் நான் செல்ல விரும்பவில்லை.
வதந்திகள் பணத்திற்காகவும்,
ஆனாலும் சொல்கிறேன்; தற்போது ஏ ஆர் ரஹ் மான் குறித்து வெளிவரும் வதந்திகள் பணத்திற்காகவும், பிரபலத்திற்காகவும், பரப்ப படுகிறது. ஆகையால் அதை எல்லாம் நம்பி கமெண்டுகளில் ஏ ஆர் ரஹ்மான் சாரை தாக்கி பேசுவது போன்றவற்றை செய்யாதீர்கள் என்று நான் சொல்ல முடியாது; அது உங்களுடைய இஷ்டம்; ஆனால், நான் இப்போது சொல்கிறேன். அவர் அவருடைய டெக்னீசியன்களை, அவரிடம் பணியாற்ற வருபவர்களை ஒரு கடவுள் போல நடத்துவார் அப்பேர்பட்ட மனிதனை நாம்…
அவர் எவ்வளவு கொடுத்து இருக்கிறார் என்பது இங்கு முக்கியமில்லை. அவர் எவ்வளவு ஒரு குழந்தைத்தனமான மனிதர் என்பது எங்களுக்கு தெரியும் எங்கள் சாரை பற்றி எங்களுக்கு தெரியும்" என்று பேசி இருக்கிறார்.
முன்னதாக, ஏ. ஆர். ரஹ்மானின் மனைவியான சாய்ரா, தன்னுடைய கணவரை பிரிவதாக கூறி, தன்னுடைய வக்கீல் மூலம் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. இது அடங்கி முடிவதற்குள், ரஹ்மானின் இசைக் குழுவில் பணியாற்றிய கிட்டாரிஸ்ட் மோகினி தன்னுடைய கணவரை பிரிவதாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். அவ்வளவுதான், இவரையும், ரஹ்மானையும் இணைத்து வைத்து பேச ஆரம்பித்து விட்டார்கள். இதனை ஏ.ஆர். ரஹ்மான் மகன் உட்பட பலர் கண்டித்து பதிவுகளை வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் ஏடிகேவும் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
சாய்ரா பானு அறிக்கை
சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வெளியிட்டு இருந்த அறிக்கை, “ ஏ. ஆர். ரஹ்மானுடன் பல வருடங்களாக மண வாழ்வில் இருந்த சாய்ரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார்.
இந்த முடிவை அவர், அவர்களது உறவில் ஏற்பட்ட ஒரு குறிப்பிட்ட பிரச்சினையால் ஏற்பட்ட அழுத்ததிற்கு பிறகு எடுத்துள்ளார். இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், தம்பதிகளுக்கு இடையே நிலவிய பதற்றமும், சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒரு சேர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளனர். அதை இனி எதனைக்கொண்டும் இணைக்க முடியாது. சாய்ரா பானு, இந்த முடிவை வலி மற்றும் வேதனையின் வழியாகவே எடுத்திருக்கிறார். ஆகையால் இந்த நேரத்தில் அவரின் விவாகரத்து முடிவிற்கு தனிப்பட்ட பிரைவசியை அளிக்க வேண்டும்” குறிப்பிடப்பட்டு இருந்தது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்