லவ் ஃபெயிலியர் ஆகியிருக்காது.. அழுகை வரும்.. யுவன் சார் பாட்டு அப்படி தான்.. எஸ்.கே. சார் எவ்வளவு டீசன்ட்.. அதிதி ஷங்கர்
லவ் ஃபெயிலியர் ஆகியிருக்காது.. அழுகை வரும்.. யுவன் சார் பாட்டு அப்படி தான்.. எஸ்.கே. சார் எவ்வளவு டீசன்ட்.. அதிதி ஷங்கர் பேசியுள்ளார்.
லவ் ஃபெயிலியர் ஆகியிருக்காது.. அழுகை வரும் எனவும், யுவன் சார் பாட்டு அப்படி தான் என்றும், எஸ்.கே. சார் எவ்வளவு டீசன்ட் எனவும் அதிதி ஷங்கர் பேசியிருக்கிறார்.
'நேசிப்பாயா' படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்த நடிகர் சிவகார்த்திகேயனை கலாய்த்த நடிகை அதிதி சங்கரின் செயல் பலரை ரசிக்க வைத்தது.
நேசிப்பாயா விழா மேடையில் பேசிய அதிதி ஷங்கர், ’’எல்லோருக்கும் வணக்கம். எப்போதும்போல் ரொம்ப ஸ்வீட்டாக அறிமுகம் கொடுத்தீங்க. நன்றி. நானும் ரொம்ப நாளாக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இந்தப் படம் எப்போது ரிலீஸாகும்ன்னு. இப்போது, நான் உற்சாகமாக இருக்கேன். ஏனென்றால், இன்னும் பத்து நாட்களில் படம் ரிலீஸ் ஆகப் போகுது. என்னுடைய ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ரொம்ப நல்ல அனுபவமாக இந்தப் படம் இருந்தது. மன்னிக்கனும். கண்ணீர் வந்துவிட்டது.
விஷ்ணு சார், உங்களுக்கு பெரிய பெரிய நன்றி. ஒரு போன் கால் வந்தது, விஷ்ணு சார் இப்படி ஒரு படம் எடுக்கிறார்னு சொல்லி. அவருக்காக தான் நான் எதையும் பார்க்காமல் குருட்டுத்தனமாக, இந்தப் படத்தில் நடிக்க கையெழுத்திட்டேன். என் மேல் அவ்வளவு நம்பிக்கை வைச்சதுக்கு நன்றி சார்.
ஸ்பாட்டில் சீன் சொன்ன விஷ்ணு வர்தன் சார்: அதிதி ஷங்கர்
முதல் படம் விருமன் பண்ணும்போது, ஃபுல் ஸ்கிரிப்ட் கையில் இருந்தது. இரண்டாவது படம் மாவீரன் பண்ணும்போது, ஒருநாளைக்கு முன்பு, பிடிஎஃப்பில் சீன் எல்லாம் அனுப்புவாங்க.
விஷ்ணு வர்தன் சாருக்கு என்மேல் எவ்வளவு நம்பிக்கை என்றால், எனக்காக இரண்டு தடவை கதை சொன்னார். அடுத்து நேரடியாக சூட் போயிட்டோம். கேரவனில் கூட இல்லைங்க. ஷாட் ரெடின்னு கூப்பிட்டு, இதுதான் சீன். இதுதான் உன் டயலாக், போன்னு சொல்லிடுவார். ஸ்பாட்டில் வசனங்கள் கொடுத்தது, எனக்கு வித்தியாசமான அனுபவம். அதில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
ஆகாஷ், உன்னுடைய முதல் படத்தில் நான் நடித்தது ரொம்ப மகிழ்ச்சி. அனு மேம் எனக்கு ஸ்டைலிங் செய்தமைக்கு நன்றி. எனக்கு உதவிய அத்தனை உதவி இயக்குநர்களுக்கும் நன்றி. எழுத்தாளர் நீலன் சாருக்கு நன்றி.
மீண்டும் யுவன் சார்- விஷ்ணு சார் காம்போ. இப்போது பேசிட்டு இருந்தோம். யுவன் சாருடைய விண்டேஜ் வைபிலேயே பாட்டெல்லாம் இருந்தது.
நான் எவ்வளவு டீசன்ட்டாக பேசுறேன் பார்த்தீங்களா: சிவகார்த்திகேயனை கலாய்த்த அதிதி ஷங்கர்
இந்தப் படம் பார்க்கிற எல்லாரும் என்ஜாய் செய்வாங்க. இன்னிக்கு கெஸ்ட்டாக வந்திருக்கும் எஸ்.கே. சார்கிட்ட தான், என்னுடைய முதல் அவார்டை வாங்குனேன். இன்னிக்கு என் படத்துடைய ஆடியோ லாஞ்ச்னு மறந்துட்டு, கடைசி டெஸ்கில் உட்கார்ந்து பேசிட்டிருப்போம்ல, அது மாதிரி பேசிட்டு இருந்தோம். என்னுடைய இரண்டாவது படத்தின் ஹீரோ அவர். அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு நன்றி. நான் எவ்வளவு டீசன்ட்டாக பேசுறேன் பார்த்தீங்களா. எங்கம்மா, என் தம்பி எல்லோரும் வந்திருக்காங்க. எல்லோருக்கும் நன்றி.
யுவன் சங்கர் சாருடைய லூஸு பெண்ணே, எவன்டி உன்னைப் பெத்தான் பாட்டு இதெல்லாம் அவருடைய கான்செர்ட்டில் போய் பாடி வைப் செய்திருக்கேன். அவருடைய லவ் சாங் கண்டிப்பாகப் பிடிக்கும்.
யுவன் சங்கர் சாருடைய ஒவ்வொரு பாட்டுமே, நமது சூழலுக்கு ஏத்தமாதிரி இருக்கும். ஒரு பார்ட்டியா இருக்கட்டும். ஒரு சோகமாக இருக்கட்டும். லவ்வாக இருக்கட்டும். லவ் ஃபெயிலியராக இருக்கட்டும். நீங்கள் கொடுத்த ஒவ்வொன்றும் எங்களை ஆட்கொள்வதுபோன்ற பாடல்கள். அதற்கு நன்றி.
உங்கள் பாட்டைக் கேட்கும்போது, லவ் பண்ணலைன்னா கூட லவ் பண்ற ஃபீலிங் வந்திடும். லவ் ஃபெயிலியர் ஆகியிருக்காது. அப்போதும் அழுகை அழுகையா வரும். ஏன் யுவன் சார்.
வரும்போது சொன்னங்க, என்னங்க இந்த தடவை பொங்கலுக்கு ஷங்கர் VS அதிதி ஷங்கரான்னு. இல்லைங்க. ரசிகர்களுக்கு ரசிக்க கூடுதல் படங்கள் கிடைச்சிருக்கு'' என முடித்தார், அதிதி ஷங்கர்.
டாபிக்ஸ்