Siddharth: எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சுதா?..யார் சொன்னா? - உண்மையை போட்டுடைத்த சித்தார்த்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Siddharth: எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சுதா?..யார் சொன்னா? - உண்மையை போட்டுடைத்த சித்தார்த்!

Siddharth: எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சுதா?..யார் சொன்னா? - உண்மையை போட்டுடைத்த சித்தார்த்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 28, 2024 04:19 PM IST

நாளடைவில் பழக்கம் அதிகமாக, ரீல்ஸ் விடியோ பகிர்வது முதல் பார்டி, பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக வருவது என இருவரும் காதல் புறாக்களாக வலம் வந்தனர்.

சித்தார்த்
சித்தார்த்

இது குறித்து பதிவிட்டு இருக்கும் சித்தார்த், “ அவள் ஆம் என்று சொல்லி விட்டாள்.. எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து விட்டது” என்று பதிவிட்டு இருக்கிறார்.

 

இது குறித்து பதிவிட்டு இருக்கும் அதிதி, “ அவன் ஆம் என்று சொல்லி விட்டான். எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து விட்டது” என்று பதிவிட்டு இருக்கிறார்.

இதன் மூலம் இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ள வில்லை. நிச்சயதார்த்தம் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.

முன்னதாக, தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் சித்தார்த். அதேபோல் பாலிவுட் நடிகையாக இருந்து வந்த அதிதி ராவ், தமிழில் மணிரத்னம் இயக்கிய  ‘காற்று வெளியிடை’ திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையடுத்து, சித்தார்த் அதிதி ராவ் இடையே அறிமுகம் ஏற்பட்ட நிலையில், இருவரும் நட்பாக பழகி வந்தனர்.பின்னர் இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில், ஒன்றாகவும் ஊர் சுற்றியும் வந்தனர். 

நாளடைவில் பழக்கம் அதிகமாக, ரீல்ஸ் விடியோ பகிர்வது முதல் பார்டி, பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக வருவது என இருவரும் காதல் புறாக்களாக வலம் வந்தனர். 

இதனையடுத்து சித்தார்த், அதிதிராவ் ஆகிய இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுதொடர்பாக இருவருமே வாய் திறக்காமல் இருந்து வந்தனர். ஆனாலும் இவர்கள் தொடர்பான செய்திகள் அவ்வப்போது மீடியாக்களில் உலா வரும். 

உறவினர்கள் முன்னிலையில் திருமணம்

இந்த நிலையில் நேற்றைய தினம், தெலங்கானா மாநிலம் வனபார்த்தி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீரங்கபுரம் கோயிலில் உறவினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடைபெற்று முடிந்ததாக தகவல் வெளியானது. அந்த தகவல் தற்போது வெறும் வதந்தி என்பது தெரிய வந்திருக்கிறது. 

சித்தார்த் - அதிதி காதல்

தெலுங்கில் மகா சமுத்திரம் என்ற படத்தில் சித்தார்த் - அதிதி ராவ் ஆகியோர் இணைந்து நடித்தார்கள். இந்தப்படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரும் டேட்டிங்கில் இருந்த வந்தனர். 

கடந்த ஆண்டில், அதிதி பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த சித்தார்த், "ஹேப்பி பர்த்டே பார்ட்னர்" என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தார். இதற்கு அதிதியும் நன்றி தெரிவித்தார். இதனையடுத்து சித்தார்த் - அதிதி ஆகியோர் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.  

இரண்டாவது திருமணம்

சித்தார்த், அதிதி ராவ் ஆகிய இருவரும் முறையே இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். சத்யதீப் மிஷ்ரா என்பவரை திருமணம் செய்திருந்த அதீதி ராவ், அவரை விவாகரத்து செய்தார்.

இதன்பின்னர் இந்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த நிலையில், தற்போது சித்தார்த்தை அவர் கரம் பிடித்துள்ளார்.

அதிதி ராவ் படங்கள்

அதிதி ராவ் நடிப்பில் கடைசியாக தமிழில் கடந்த 2022இல் ஹே சினாமிகா என்ற படம் வெளியானது. இந்தப்படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக அவர் நடித்திருந்தார். தற்போது காந்தி டாக்ஸ் என்ற சைலண்ட் படத்திலும், லையனஸ் என்ற ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார்.

சித்தார்த் படங்கள்

சித்தார்த் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான சித்தா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று விமர்சக ரீதியாக பாராட்டுகளையும் பெற்றது. இதைத்தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.