Siddharth: ‘அழகியே..மேரி மீ மேரி மீ… ‘நீ தான் என்னுடைய சூரியன், சந்திரன்..’ - சித்தார்த் - அதிதி திருமணம்!
Siddharth: “நித்தியத்திற்கும் ஆத்ம தோழர்களாக இருப்பதற்கு.. சிரிப்பதற்கு, வளரமால் வாழ்வதற்கு.. நித்திய அன்பு, ஒளி மற்றும் மேஜிக்குடன்...” - சித்தார்த் - அதிதி திருமணம்!

Siddharth: நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகியோருக்கு ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அது தொடர்பான புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றனர்.
மேலும் அதில், " நீ தான் என்னுடைய சூரியன்..நீ தான் என்னுடைய சந்திரன்.. நீ தான் என்னுடைய எல்லா நட்சத்திரங்களும்.. நித்தியத்திற்கும் ஆத்ம தோழர்களாக இருப்பதற்கு.. சிரிப்பதற்கு, வளரமால் வாழ்வதற்கு.. நித்திய அன்பு, ஒளி மற்றும் மேஜிக்குடன்... சித்தார்த் மற்றும் அதிதி" என்று பதிவிட்டு இருக்கிறார்கள்.
இந்து முறைப்படி கல்யாணம்
இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொண்டு இருப்பதாக தெரிகிறதி. இவர்களது திருமணத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள், அவர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் சித்தார்த். அதேபோல் பாலிவுட் நடிகையாக இருந்து வந்த அதிதி ராவ், தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். கடந்த 2021ம் ஆண்டு வெளியான மஹா சமுத்திரம் படத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தனர்.
அப்போது இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டது. இது குறித்தான தகவல்கள் அங்குமிங்கும் அரசல் புரசலாக பரவி வந்த நிலையில், இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வந்து கொண்ருந்தது அவர்கள் காதலித்து வருவதை கிட்டத்தட்ட உறுதிபடுத்தியது.
இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களின் நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு தங்களது ரிலேஷன்ஷிப்பை சித்தார்த்தும் - அதிதியும் உறுதிபடுத்தினர். அதன் பின்னர் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்ற அவர்கள் அண்மையில் ஆப்பிள் நிறுவனத்தின் சி இ ஓவை சந்தித்தனர். அது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனது.
இந்த நிலையில் தெலங்கானா மாநிலம் வனபார்த்தி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீரங்கபுரம் கோயிலில் உறவினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அதிதி முன்பு நடிகர் சத்யதீப் மிஷ்ராவை திருமணம் செய்தார். ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்