தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Adhu Idhu Yedhu Season 3 A Fun Filled Game Show Launches On 31 March Sunday 1.30 Pm

Adhu Idhu Yedhu: மீண்டும் வரும் ‘அது எது இது’ - தொகுப்பாளர் யார் தெரியுமா? - விஜய் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 29, 2024 07:05 PM IST

2009 இல் தொடங்கப்பட்ட அது இது எது நிகழ்ச்சி முதல் முதலில் நடிகர் சிவகார்த்திகேயனால் தொகுத்து வழங்கப்பட்டது, அவரின் சிறந்த நகைச்சுவை உணர்விற்காக மிகவும் பாராட்டப்பட்டார்.

மீண்டும் வரும் அது இது எது நிகழ்ச்சி!
மீண்டும் வரும் அது இது எது நிகழ்ச்சி!

ட்ரெண்டிங் செய்திகள்

2009 - ல் தொடங்கப்பட்ட  ‘அது இது எது’ நிகழ்ச்சி முதன் முதலில் நடிகர் சிவகார்த்திகேயனால் தொகுத்து வழங்கப்பட்டது. அதில் அவர் சிறந்த நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியதற்காக வெகுவாக பாராட்டப்பட்டார். அந்த நிகழ்ச்சி மூன்று சுற்றுகளைக் கொண்டிருந்தது.

அவற்றில் ஒன்று ‘சிரிச்சா போச்சு’. அதில், தற்போதைய நகைச்சுவை நடிகர்கள் ரோபோ ஷங்கர் மற்றும் ராமர் அவர்களின் நகைச்சுவை உணர்வு பெரிதும் பாராட்டப்பட்டது.

 குறிப்பாக, ‘என்னம்மா இப்படி பண்ணறியே மா’ என்ற மிகவும் பிரபலமான டயலாக், சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வரி சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படத்திலும் தனி பாடலாக இடம் பெற்று இருந்தது. 

இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்த நிலையில், தற்போது நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்புடன் மீடியா மற்றும் திரைப்படத் துறையின் சிறந்த நட்சத்திரங்கள் பங்குபெற, இந்த நிகழ்ச்சி 31 மார்ச் 2024 அன்று ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த அது இது எது மூன்றாவது சீசனை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது வேறு யாருமல்ல, ம.கா.பா ஆனந்த் தான்.

நிகழ்ச்சி பற்றி!

பங்கேற்பாளர்கள் கருத்து:

மூன்று பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்,

ஒவ்வொரு போட்டியாளருக்கும் விளையாட்டின் தொடக்கத்தில் 1000 புள்ளிகள் வழங்கப்படும். மேலும் நான்கு சுற்றுகளில் ஸ்கோரைப் பாதுகாப்பதே இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சவாலாகும். போட்டியின் இறுதியில் அதிக பாயிண்டுகள் வைத்திருப்பவர் வெற்றிபெறுவார்.

சுற்றுக்கள்:

க்ரூப்ல டூப்பு: இந்தச்சுற்று மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இதில் மூன்று நபர்கள் ஒரு துறையை சார்ந்தவர்கள். அவர்களின் ஆற்றலை காட்டவேண்டும். அதில் ஒருவர் 'போலி', பங்கேற்பாளர். அவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

லக்கி ரூம்: முதல் சுற்றில் வெற்றி பெறுபவர், அதிர்ஷ்ட அறைக்குள் நுழைந்தவுடன், அவர்கள் ADHU, IDHU மற்றும் YEDHU என பெயரிடப்பட்ட மூன்று லிஃப்ட்களில் ஏதேனும் ஒன்றை திறக்க வேண்டும். 

ஒவ்வொரு லிஃப்டிலும் ஒரு தேவதை, ஒரு ஜீனி அல்லது ஒரு பிச்சைக்காரர் இருப்பார்.  ஒவ்வொரு லிஃப்ட் கதவுக்கும் பின்னால் இருக்கும் ஆச்சரியங்கள், விளையாட்டின் இந்த பகுதிக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

சிங் இன் தி ரெயின்: இந்தச் சுற்றில் தமிழ் பேசத் தெரியாத பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அவர்கள் ஹெட்ஃபோன்களை அணிந்துகொள்வார்கள். 

அவர்களுக்கு தமிழ் பாடல்கள் அதில் ஒலிபரப்பப்படும். அவர்கள் அந்த பாடலைப் பாட முயலும் போது, பங்கேற்பாளர்கள் சரியான பாடலைக் கண்டுபிடிக்க வேண்டும்.

சிரிச்சாப்போச்சு: பிரபல காமெடியர்கள் ஒரு நகைச்சுவை ஸ்கிரிப்டை பங்கேற்பாளருக்கு முன் செய்து அவர்களை சிரிக்க வைக்க வேண்டும். ஆனால் பங்கேற்பாளர்கள் அந்த நகைச்சுவைக்கு சிரிக்கக்கூடாது. இதுவே போட்டி. இறுதிவரை சிரிக்காமல் மிஞ்சுபவர் சுற்றில் வெற்றி பெறுவார்.

டூ வாட் ஐ சே: ஒரு பிரபலம் ஒரு பிரபலமான திரைப்பட கதாபாத்திரத்தை ஏற்று அந்த போட்டியாளர்களை அதேபோல் செய்யவைக்க விடும் இதுவே போட்டி.

31 மார்ச் 2024 அன்று ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ADHU IDHU YEDHU நிகழ்ச்சியை ஸ்டார் விஜய்யில் காணாத்தவறாதீர்கள். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்