Adhik Ravichandran: ‘தோல்வியை வீட்டிற்குள் கொண்டு செல்லாதே..படம் ரிலீஸூக்கு பின்னர் அஜித் சொன்னது இதுதான்’ -ஆதிக் பேச்சு
Adhik Ravichandran: என்னுடைய கனவில் நான் உறைந்து நிற்கிறேன் என்று சொல்லலாம். 2015 ஆம் ஆண்டு முதன்முறையாக நான் ஹைதராபாத்திற்கு என்னுடைய முதல் திரைப்படமான ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படத்திற்காக வந்தேன். - ஆதிக் பேச்சு!

Adhik Ravichandran: ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றிக்கொண்டாட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், குட் பேட் அக்லி படத்தில் நடித்த திரைநட்சத்திரங்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஜிவி இசை பெரும் பலம்
அந்த நிகழ்வில் பேசிய படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ‘என்னுடைய கனவில் நான் உறைந்து நிற்கிறேன் என்று சொல்லலாம். 2015 ஆம் ஆண்டு முதன்முறையாக நான் ஹைதராபாத்திற்கு என்னுடைய முதல் திரைப்படமான ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படத்திற்காக வந்தேன். அந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் தான் ஹீரோவாக நடித்தார். அவருடன் என்னுடைய உறவானது மிகவும் உறுதியானதாக மாறியிருக்கிறது. குட் பேட் அக்லி திரைப்படத்தை பொருத்த அளவுக்கு ஜிவி பிரகாஷ் குமாரின் இசையானது ஒரு பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
இந்த திரைப்படத்தில் கமிட்டாகும் பொழுது அஜித் சார் குட் பேட் அட்லி திரைப்படத்தில், பரிந்துரையின் பேரில் யாருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டாம் என்றும் அப்படி வாய்ப்பு கொடுத்தால் உண்மையான திறமைசாலிகள் மறைய வாய்ப்பிருக்கிறது என்றும் கூறினார். அதனால் நாங்கள் பரிந்துரையின் பெயரில் யாருக்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை.
சாதரண ரசிகனாக
நான் ஒரு சாதாரண ரசிகனாக இருந்து அஜிசாருக்கு போஸ்டரையும் பேனரையும் வைத்தவன். படம் ரிலீசான அன்றைய தினம் நான் தியேட்டருக்கு செல்லும் பொழுது அங்கிருந்த பேனரில் அஜித் சாரின் பெயருக்கு பக்கத்தில் என்னுடைய பெயர் இருப்பதை பார்த்து மிகவும் எமோஷனலாக மாறிவிட்டேன்.
நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் சாருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு என் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிவிட்டது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரிடம் அஜித் சார், ‘என்னுடைய வார்த்தையை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ஆதிக் மிகப் பெரிய டைரக்டராக வருவார்’ என்றார். அந்த சமயத்தில் என்னுடைய திரை பயணத்தில் பெரிய வெற்றிப்படங்கள் எதுவும் கிடையாது. இதற்கும் என்னுடைய முந்தைய படம் தோல்வியை சந்தித்திருந்தது. அந்த சமயத்தில் அவர் எனக்கு படம் கொடுக்கிறேன் என்று கூறினார்.
சார் என்னை எப்படி அந்த இடத்தில் வைத்து பார்த்தார் என்று எனக்கு தெரியவில்லை. அவருக்கு நான் இந்த இடத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படம் ரிலீஸ் ஆன பின்னர் நான் அஜித் சாரிடம் பேசினேன். அப்போது அஜித் சார் என்னிடம் படம் வெற்றி பெற்றுவிட்டது. இந்த வெற்றியை உன்னுடைய தலைக்கு ஏற்றாதே. மறந்து விடு.. எப்போதும் உன்னுடைய வெற்றியை உன்னுடைய தலைக்கு ஏற்றாதே…உன்னுடைய தோல்வியை உன்னுடைய வீட்டிற்குள் கொண்டு செல்லாதே.. அடுத்த வேலையை பார் என்று கூறினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்