தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Savukku Shankar: ஒன்றாக மீடியா தொடங்க போடப்பட்ட திட்டம்..சவுக்கு சங்கருக்கு அமீர் மீது என்ன வன்மம்? - ஆதம் பவா!

Savukku shankar: ஒன்றாக மீடியா தொடங்க போடப்பட்ட திட்டம்..சவுக்கு சங்கருக்கு அமீர் மீது என்ன வன்மம்? - ஆதம் பவா!

Kalyani Pandiyan S HT Tamil
May 15, 2024 06:00 AM IST

Savukku shankar: அப்போது யார் அவர் பக்கம் நின்றார்களோ இல்லையோ, நான் அவரின் சம்பந்தப்பட்டவர்களுக்கு போன் செய்து, சவுக்கு சங்கருக்கு ஏதும் உதவி செய்ய வேண்டும் என்றால் என்னை அணுகுங்கள். மக்கள் பிரச்சினையை பேசும் அவர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினேன். - ஆதம் பவா

Savukku shankar: ஒன்றாக மீடியா தொடங்க போடப்பட்ட திட்டம்..சவுக்கு சங்கருக்கு அமீர் மீது என்ன வன்மம்? - ஆதம் பவா!
Savukku shankar: ஒன்றாக மீடியா தொடங்க போடப்பட்ட திட்டம்..சவுக்கு சங்கருக்கு அமீர் மீது என்ன வன்மம்? - ஆதம் பவா!

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் பேசும் போது, “ சவுக்கு சங்கர் என்னுடைய நெருங்கிய நண்பராகத்தான் இருந்தார். அவருடைய பேட்டிகளை எல்லாம் நான் பார்த்தேன். மக்கள் சார்பாக நின்று, அவர் அவர்களின் பிரச்சினைகளை முன் வைக்கும் விதம், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

சவுக்கு சங்கருக்கு உதவி வேண்டுமா? 

என்னுடைய அலுவலகத்திற்கும் அவர் அடிக்கடி வர ஆரம்பித்தார். நாங்கள் இரண்டு பேரும் நிறைய விஷயங்களை பற்றி பேசிக்கொண்டிருப்போம். இந்த நிலையில்தான் அவர் ஒரு வழக்கு தொடர்பாக ஜெயிலுக்கு சென்றார். 

அப்போது யார் அவர் பக்கம் நின்றார்களோ இல்லையோ, நான் அவரின் சம்பந்தப்பட்டவர்களுக்கு போன் செய்து, சவுக்கு சங்கருக்கு ஏதும் உதவி செய்ய வேண்டும் என்றால் என்னை அணுகுங்கள். மக்கள் பிரச்சினையை பேசும் அவர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினேன். 

மேக்கப் செய்து விட்டேன்

அவர் ஜெயிலில் இருந்து வெளியே வரும் பொழுது, அவரும், நானும் மீடியா ஒன்றை ஆரம்பிப்பதாக இருந்தோம். ஒரு வாரத்தில் அவர் நான் வேறு ஒன்றை மேக்கப் செய்து விட்டேன் என்று கூறி கிளம்பி விட்டார்.  

இதையடுத்துதான் அவர் ஒரு சார்பை எடுக்க ஆரம்பித்தார். மக்கள் பிரச்சினைகளை பேசும்பொழுது கட்சி சார்பு எடுக்கக் கூடாது. ஆனால் அவர் எடுத்துவிட்டார். காரணம் என்னவென்றால், அந்த கட்சியிலும் எல்லோரும் யோக்கியவான்கள் கிடையாது.

அவர் இப்படி ஒரு சார்பாக போன உடன், அவரது நிலைப்பாடானது முற்றிலும் மாறிவிட்டது. இந்த நிலையில் தான் ஜாபர் சாதிக் சம்பந்தமான பிரச்சினை உருவெடுத்தது. அப்போது ஆதம் பவாதான் அமீருக்கு ஜாபர் சாதிக்கை அறிமுகப்படுத்தி வைத்தார் என்று வீடியோ ஒன்றில் கூறிவிட்டார். 

அவர் அப்படி கூறியதில் இருந்து எனக்கு கடன் கொடுக்கிறேன் என்று கூறியவர்கள், கடன் கொடுக்க மறுத்தார்கள். கடன் கொடுத்தவர்களும், பணத்தை திருப்பி கேட்க முன் வந்து விட்டார்கள். இதனால் நான் பெரும் அவஸ்தைக்கு உள்ளானேன். அமீர் திமுக சார்பாக தொடர்ந்து பேசி வருகிறார் . 

அமீரின் மீது சவுக்கிற்கு என்ன காழ்புணர்ச்சி என்று தெரியவில்லை. அவர் திமுக சார்பாக பேசி வருவதால், அதை உடைக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அதனால்தான் அவர் அப்படி பேச ஆரம்பித்தார். 

அரசியல் என்று வந்துவிட்டால் அங்கு நேர்மை அடிபட்டு விடும். நீங்கள் தற்போது பார்த்தீர்கள் என்றால், முன்பு சவுக்கு சங்கர் ஜெயிலுக்கு செல்லும் பொழுது, சுற்றி முற்றிலும் அவருக்கு அவ்வளவு ஆதரவு இருந்தது. ஆனால் இப்போது அவருக்கு அவ்வளவு ஆதரவு இல்லை. 

அவர் வீடியோக்களில் கலைஞர் மற்றும் முதல்வர் ஸ்டாலினை மிகவும் தரக்குறைவாக பேசியிருக்கிறார். இதுவே அம்மாவின் ஆட்சி காலத்தில் இப்படி எல்லாம் பேச முடியுமா?.. கடைசியாக அவர் பெண் காவலர்களை பற்றி பேசியதெல்லாம் மிக மிக தவறான விஷயமாகும். அதனால் தான் தற்போது அவரது முகம் வீங்கி போய் இருக்கிறது. பாவம் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்