Actress Vinodhini: ‘செக்ஸ்’ சமுதாயத்தில் இருப்பதுதானே.. கலைக்குள் சென்று அதை பார்ப்பது தேவையில்லாதது’- விநோதினி பேட்டி!
Actress Vinodhini: செல்வராகவனின் ‘துள்ளுவதோ இளமை’ படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் திரைப்படத்தில் அந்த வாலிபர்கள், தங்களுடைய தாம்பத்திய விஷயங்களை வெளிப்படுத்துவார்கள். இவை எல்லாமே தினசரி வாழ்க்கையில் நடக்கக்கூடிய விஷயங்கள் தான். - விநோதினி பேட்டி

Actress Vinodhini: Bad Girl:வெற்றி மாறனின் உதவி இயக்குநரான வர்ஷா பரத் ‘பேட் கேர்ள்’ எனும் படத்தை இயக்கி இருக்கிறார். வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹரிது ஹருண், டிஜே அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவான இந்தப் படம் பெண்கள் மீது கட்டவிழுத்து விடப்பட்ட கதாப்பாத்திர தன்மைக்கு எதிராக அமைந்துள்ளது. அண்மையில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் NETPAC விருதினை ‘பேட் கேர்ள்’ (Bad Girl) திரைப்படம் வென்றுள்ளது.
‘பேட் கேர்ள்’ திரைப்படம்
இந்த நிலையில், இந்தப்படம் குறித்து நடிகை விநோதினி வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார். அந்தப்பேட்டியில் அவர் பேசும் போது, ‘ ‘பேட் கேர்ள்’ திரைப்பட நிகழ்வில் வெற்றிமாறன் மற்றும் அந்த படத்தின் இயக்குநர் வர்ஷா பேசிய சில விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தின.
டீசரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த மாதிரியான ஒரு படத்தை நாம் அங்கீகரிக்கலாமா? இது நம் சமூகத்திற்கு ஏற்புடையதாக இருக்குமா? உள்ளிட்ட கேள்விகள் முன்வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நாம் செல்லும் முன்னர், முதலில் இதை ஒரு திரைப்படமாக அணுகலாமா?
தாம்பத்தியம் தொடர்பான விஷயங்களை வெளிப்படுத்தும் விதமாக நிறைய படங்கள் உலகளவில் நிறைய வந்திருக்கின்றன. ஆனால், அதுபோன்ற திரைப்படங்கள் தமிழில் பெரிதாக வந்ததில்லை. செல்வராகவனின் ‘துள்ளுவதோ இளமை’ படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் திரைப்படத்தில் அந்த வாலிபர்கள், தங்களுடைய தாம்பத்திய விஷயங்களை வெளிப்படுத்துவார்கள். இவை எல்லாமே தினசரி வாழ்க்கையில் நடக்கக்கூடிய விஷயங்கள் தான்.
2கே கிட்ஸ்
இன்றைய இளைஞர்களை நாம் எடுத்துக் கொள்வோம். 2கே கிட்ஸ் என்று சொல்லப்படக்கூடிய பிள்ளைகள் வாலிபர்களாக மாறிவிட்டார்கள். பேட் கேர்ள் படத்தில் வரக்கூடிய வாலிபர்கள் ஜென் சி வகை பிள்ளைகளாக இருக்கிறார்கள். இது ஒரு கதை அவ்வளவுதான். ஒரு கலை வடிவத்தில்
நாம் கலாச்சாரம் சம்பந்தமான விஷயங்கள், மதிப்புகள் உள்ளிட்டவற்றை தேடுவது என்பது தேவையில்லாதது. ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் கடைசியாக ஒரு வசனம் வரும். எது தேவையோ அதுவே தர்மம் என்று. அதனுடன் நீங்கள் ஒத்துப் போகிறீர்களா என்று கேட்டால், இல்லை என்று கூறுவேன். ஆனால் அதுதான் நிதர்சனமான உண்மை.
‘பேட் கேர்ள்’ படத்தின் டீசரை பார்க்கும்பொழுது, இரண்டு பேர் தங்களுடைய தாம்பத்திய உறவில் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இது சமூகத்தில் நடக்கிறதா என்றால் நிச்சயமாக நடக்கிறது. இந்த கதாபாத்திரத்திற்கு அந்த இயக்குநர் ‘பேட் கேர்ள்’ என்று பெயர் வைத்திருக்கிறார். படத்தில் அவள் நல்லவளாக மாறுகிறாரா இல்லை அப்படியே இருக்கிறாரா என்பது படத்தை பார்த்த பின்னர் தான் தெரியும்.’ என்று அவர் அதில் (வாவ் தமிழா) பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்