நான் தமிழச்சிடா.. பள்ளி சான்றிதழ் ஆதாரத்தை எடுத்துக்காட்டிய நடிகை விஜயலட்சுமி.. மேலும் சீமானுக்கு எச்சரிக்கை
நான் தமிழச்சிடா.. பள்ளி சான்றிதழ் ஆதாரத்தை எடுத்துக்காட்டிய நடிகை விஜயலட்சுமி.. மேலும் சீமானுக்கு எச்சரிக்கை விடுத்து மீண்டும் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தான் தமிழச்சி என்று நடிகை விஜயலட்சுமி தனது பள்ளிக்கூட சான்றிதழைக் காட்டி வீடியோ பதிவிட்டிருக்கிறார்.
ப்ரண்ட்ஸ் படத்தில் நடிகர் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யின் தங்கையாக நடித்து பிரபலமடைந்தவர், நடிகை விஜயலட்சுமி. அதன்பின், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் நடித்தன்மூலம் மீண்டும் கவனிக்கப்பட்டார்.
இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 3 ஆண்டுகள் குடும்பம் நடத்தி, தன் வாழ்க்கையை சீரழித்தவர் என பல ஆண்டுகளாக சீமான் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார், நடிகை விஜயலட்சுமி. இதுதொடர்பாக பல வீடியோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் தன்னை கன்னடியர் என்றும், தன்னை கர்நாடகாவைச் சார்ந்தவள் எனவும், நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் விமர்சித்து வருவதற்குப் பதிலளிக்கும் வகையில், நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் பெங்களூருவில் பயின்ற பள்ளியில், தன் தாய்மொழி குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார்.
இதுதொடர்பாக நடிகை விஜயலட்சுமி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’எனக்கு தாய்மொழி வந்து தமிழே கிடையாதுன்னு சீமானும் நாம் தமிழர் கட்சியும் நிறைய இடத்தில் தவறாக சொல்லியிருப்பாங்க. இன்றைக்கு அந்த விஷயத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்னு நினைச்சேன்.
எனது தாய்மொழி தமிழ் - நடிகை விஜயலட்சுமி:
பெங்களூருவில் நான் படிச்ச க்ளூனி கான்வென்ட் ஹைஸ்கூலில் படிக்கும்போது வாங்கிய சர்டிஃபிகேட்டை தமிழ் ஊடகங்களுக்கு நான் ஷேர் பண்ணியிருக்கேன். அதில் ரொம்பத் தெளிவாகப் போட்டுருக்காங்க. விஜயலட்சுமி, தகப்பானர் பெயர் சுந்தரம், மதம் - இந்து, தாய்மொழி - தமிழ் அப்படின்னு தெளிவாக இந்த சர்டிபிகேட்டில் போட்டுருக்காங்க. இன்றைக்குப் போடல, 1986ஆம் ஆண்டிலேயே போட்டிருக்காங்க.
அந்த சர்டிஃபிகேட்டுடைய காப்பி, மீடியா எல்லாத்துக்கும் கொடுத்திருக்கேன். மீடியா இந்த ஆதாரங்களை வெளியிடுங்கள். சீமானுக்குக் கூட வாழ்ந்த பொண்டாட்டியுடைய சாதி, மொழியே என்னான்னு தெரியாது. அதனால், அவரும் குழப்பிக்கிட்டு மக்களையும் குழப்பிட்டு இருப்பார் இல்லையா. அதனால், இந்த வீடியோவை வெளியிட்டு நான் என்னைப் பற்றிய விஷயங்களை தெளிவுபடுத்துகிறேன்.
அதனால், சீமானும் நான் தமிழ்ப்பொண்ணு தான் தெரிஞ்சுகிறட்டும். தமிழ்நாட்டு மக்களும் விஜயலட்சுமி தமிழ்ப்பொண்ணு தான் தெரிஞ்சுக்கட்டும். ஓ.கே.யா. வணக்கம்’’ என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
இந்நிலையில் அண்மையில் கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய்யை, சீமான் கடுமையாகத் தாக்கிப் பேசியபோது, நடிகை விஜயலட்சுமி, இதேபோன்று சீமானை தாக்கி வீடியோ பதிவிட்டிருந்தார்.
விஜய்க்கு ஆதரவாக நடிகை விஜயலட்சுமி கடந்த முறை பேசியது இதுதான்!
அந்த வீடியோவில், " என்ன மிஸ்டர் சீமான் சாபம் எல்லாம் விடுறீங்க? விஜய் அண்ணனுக்கு ரோட்டோட அந்தப் பக்கம் இரு. இல்ல இந்தப் பக்கம் இரு. சென்டர்ல இருந்தா லாரி அடிச்சு செத்துப் போயிருவன்னு சாபம் எல்லாம் விடுறீங்க? நீங்க என்ன உத்தமனா மிஸ்டர் சீமான்? நான் உங்க ரூட்டுக்கே வரேன், அண்ணன் விஜய்யும் திமுகவும் கொள்கை ரீதியாகத் தானே தவறு பண்ணிருக்காங்க. இதை மக்கள் ஒன்னும் சொல்லல. நீங்க சொல்லிட்டு இருக்கீங்க. கொள்கை ரீதியாக தவறு பண்றவங்களே லாரி அடிச்சு சாவாங்க என்றால், எங்களை மாதிரி பெண்களின் வாழ்க்கையை சீரழிச்சு எங்களை நடு ரோட்டில் விட்டீங்களே நீங்க எது அடித்து சாவீங்க?.
முதலில் உங்கக் கட்சியில் நடக்கும் ஊழலை முதலில் சரி பண்ணுங்க. உங்க கட்சிக்குள்ள தான் நிறைய ஊழல் நடக்குதாம். அடுத்தாப்ல திருச்சி சூர்யா உங்களோட ஆபாச வீடியோக்களை ரிலீஸ் பண்ணி உங்க மானத்த வாங்கப் போறாராம்.
திமுகவிற்கு என்ன பண்ணனும்னு திமுகவுக்கு தெரியும், விஜய் அண்ணனுக்கு என்ன பண்ணனும்னு விஜய் அண்ணாவுக்குத் தெரியும். இப்படி எல்லாருக்கும் அவங்க அவங்க வேலை என்னான்னு தெரியும்.
உலகத்திலேயே உங்களுக்கு மட்டும் தான் பிரபாகரன் அண்ணன் கொடுத்த வேலையை செய்யத் தெரியாமல், காலையில் எழுந்தால் சும்மா பப்ளிசிட்டி பண்ணிட்டு மத்தவங்களை சபிச்சிட்டு, நீங்க தான் கூமுட்ட மாதிரி அலைஞ்சுட்டு இருக்கீங்க. அதனால் தான், பெரிய உத்தமர் மாதிரியோ கண்ணகி மாதிரியோ சாபம் எல்லாம் விடாதீங்க. 24 மணி நேரமும் பெண்களில் இருந்து நான்தான் சாபம் கொடுக்கிறேனே.
கொள்கை ரீதியா தவறு பண்ணுனவங்க லாரி அடிச்சு சாவாங்கன்னா, நீங்க தமிழ்நாட்டு மக்கள் செருப்பால அடிபட்டே சாவீங்க’’ எனப் பேசியிருப்பார், நடிகை விஜயலட்சுமி. இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
டாபிக்ஸ்