'எனக்கு என்னை மீண்டும் நிரூபிக்க ஒரு வாய்ப்பு.. இது எனக்கு ஒரு ரவுண்ட் 2 மாதிரி': நடிகை வித்யுலேகா உறுதி!
‘ தி வெர்டிக்ட்’ டீமிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. இது காமெடி கேரக்டர் கிடையாது. லைட் ஹார்ட்டட் ஒரு நல்ல கேரக்டர் தான்னு சொன்னாங்க’ என நடிகை வித்யுலேகா தி வெர்டிக்ட் திரைப்படத்தில் நடித்த அனுபவம் பற்றிப் பேசியிருக்கிறார்.

காமெடியில் கலக்கி வந்த நடிகை வித்யுலேகா, சமீபத்தில் தி வெர்டிக்ட் என்னும் படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் தொடர்பாகவும், சினிமாவில் தனது பயணம் பற்றியும் நடிகை வித்யுலேகா சினி உலகம் யூடியூப் சேனலில் பகிர்ந்து இருக்கிறார். அது, மே 15ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. அதன் தொகுப்பினைக் காணலாம்.
ரொம்ப நாளைக்கு அப்புறம் தி வெர்டிக்ட் திரைப்படத்தில் நடிச்சிருக்கீங்க? அந்தப் படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கு?
கரெக்ட்டாகத் தான் சொன்னீங்க. அது ரொம்ப நாளைக்கு அப்புறம் நடிச்ச படம் தான். கோவிட் டைம், என் திருமணம் எல்லாமே ஒரு சமயத்தில் 2021ஆம் ஆண்டு தான் நடந்தது. இடையில் சில வதந்திகளைக் கிளப்புனாங்க. நான் தமிழ் சினிமாவை விட்டுட்டேன். தெலுங்கு சினிமாவைத்தான் ஃபோகஸ் செய்றேன்னு எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. தெலுங்கில் கேட்டால், இல்லை நீங்க சென்னையில் தான் செட்டில் ஆகிட்டதா சொன்னாங்கன்னு சொல்றாங்க. கடைசியில் நான் நடுவில் சிக்கிக்கிட்டேன். எனக்கு ஒட்டுமொத்தமாக விரக்தியான டைமாக இருந்தது. அப்போது இல்லை நான் நடிச்சிட்டுத்தான் இருந்தேன் அப்படின்னு பலர்கிட்ட சொல்லி, என் பெயரைக் காப்பாத்தினேன்.