Vichithra Latest Interview: ‘ஆபத்தை உணர்ந்துதான்’ - பாலியல் துன்புறுத்தலை பிக்பாஸில் சொன்னது ஏன்? - விசித்ரா ஓப்பன் டாக்
என்னுடைய விஷயத்தில் அந்த மாதிரியான ஒரு சம்பவத்தை என்ன மாதிரியான ஒரு தளத்தில் சொல்கிறோம் என்பது முக்கியம். அந்த சம்பவத்தை நான் ஏதாவது யூடியூப்பில் அல்லது பேஸ்புக்கில் சொல்லி இருந்தால் அது இந்த அளவுக்கு ரீச் ஆகி இருக்காது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சம்பவத்தை இவ்வளவு ஆண்டுகள் கழித்து சொன்னதற்கான காரணம் குறித்து அண்மையில் டெலி விகடன் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ பிக்பாஸில் இடம் பெறும் கதை டாஸ்க்கானது, போட்டியாளர்கள் தங்களுடைய பர்சனலான, தங்களது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய விஷயங்களை பேசுவதற்காக கொடுக்கப்பட்டது.
அந்த டாஸ்க்கில் நாம் சொல்லும் கதையின் வழியாக, அந்த நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் இடையே உள்ள பாதையானது ஒன்றாகும். அந்த டாஸ்க்கில் நாம் நம்முடைய கஷ்டங்களை சொல்லும் பொழுது, மக்கள் ஒரு படி மேலே சென்று நம்மை ஏற்றுக் கொள்வார்கள்.
அப்படி மக்கள் நம்மை ஏற்றுக் கொள்ளும் பொழுது அவர்கள் நம் மீது வைக்கும் அன்பானது, அடுத்தக்கட்டத்திற்கு செல்லும். அந்த இடத்தில் நாம் ஒரு போட்டியாளராக நடந்து கொள்ளாமல், நமக்கு உண்மையிலேயே என்ன நடந்தது என்பது குறித்து நாம் பேசும் பொழுது, அதைப்பார்க்கும் போட்டியாளர்கள் அதே போல நமக்கும் நடந்திருக்கிறதே என்று கனெக்ட் செய்து கொள்வார்கள்.
என்னுடைய விஷயத்தில் அந்த மாதிரியான ஒரு சம்பவத்தை என்ன மாதிரியான ஒரு தளத்தில் சொல்கிறோம் என்பது முக்கியம். அந்த சம்பவத்தை நான் ஏதாவது யூடியூப்பில் அல்லது பேஸ்புக்கில் சொல்லி இருந்தால் அது இந்த அளவுக்கு ரீச் ஆகி இருக்காது.
லட்சக்கணக்கான மக்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சியில் இதை வெளிப்படுத்தும் போது அது பெரும்பான்மையான மக்களிடம் சென்று சேரும். இன்னொன்று, இதை அங்கு சொல்வதால் ஒரு விதமான விழிப்புணர்வு உருவாகும். அதனால்தான் ஆபத்தை உணர்ந்தும், அந்த விஷயத்தை சொன்னேன்.
அந்த விஷயத்தை நான் சொல்லிய பிறகு திரைத்துறையில் இருந்த பலர் ஏன் இந்த விஷயத்தை நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சொன்னீர்கள். நீங்கள் தொடர்ந்து இந்த திரைத்துறையில் வேலை செய்ய வேண்டும் அல்லவா? என்று கேட்டார்கள்.. ” என்று பேசினார்.
விசித்ராவின் காதல் கதை!
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசும் போது, “தெலுங்கு படம் ஒன்றிற்காக, நான் கேரளாவில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தேன். அந்த ஹோட்டலில் இவர் மேனஜராக இருந்தார். அந்த ஹோட்டலில், அதிகாலை நான் வாக்கிங் செல்ல வேண்டும் என்று சொன்ன போது, அங்கிருந்த பாதுகாவலர் அனுமதிக்கவில்லை.
அந்த சமயத்தில் இவர் ஜாக்கிங் சென்று வந்தார். இதைப்பார்த்து எனக்கு கோபம் வந்து விட்டது. உடனே நான் அங்கிருந்தவர்களுடன் சண்டை போட ஆரம்பித்து விட்டேன். அதே போல ஹோட்டலில் டீ சரியில்லை என்று தினமும் சண்டை போட்டேன். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நான், ஹோட்டல் கிச்சனுக்குள் ஏறிவிட்டேன். இவர் மேனஜர் என்பதால் பிரச்சினைகளில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்படித்தான் எங்களின் அறிமுகம் இருந்தது.
பிறகு என்னுடன் அவர் ஜாக்கிங் வந்தார். அப்படியே நாங்கள் பழகினோம். என்னுடைய பிறந்தநாள் அன்று இவர் பூங்கொத்து கொடுத்து திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்றார். எங்களுடைய திருமணம் காதல் திருமணம் என்பதால் அவருடைய வீட்டில் இருந்து எல்லாவற்றையும் விட்டு விட்டு எனக்காக வந்தார்.
திருமணம் நடந்தது. அப்போது வரை நான் கிளாமரான நடிகை என்று இவருக்குத் தெரியாது. நாங்கள் கொடைக்கானலுக்கு ஹனிமூன் சென்று இருந்தோம். அப்போது ஒரு ரசிகர் என்னை கண்டுபிடித்து, என்னிடம் ஒருமாதிரியாக நடந்துகொண்டார். அப்போதுதான் நான் என்ன மாதிரியான நடிகை என்பதை தெரிந்து கொண்டார். அன்றிலிருந்து இவர் மிகவும் பாதுகாப்பாக பார்த்துக்கொண்டார். எனக்காக வந்த இவருக்காக நான் சினிமாத்துறையை விட முடிவெடுத்தேன்.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்