Varalaxmi About Vishal: 'விஷாலால 3 நாள் ரொம்ப கஷ்டப்பட்டோம்.. அவரு சீக்கிரம் சரி ஆகிடுவாறு'- வரலட்சுமி
Varalaxmi About Vishal: விஷால் மதகஜராஜா படத்தில் சாப்பிடாமல் கூட ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்தார். அவரது பாட்டால் நாங்கள் 3 நாள் கஷ்டப்பட்டோம் என நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.
Varalaxmi About Vishal: சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம், மணிவண்ணன், நிதின் சத்யா, மனோ பாலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் மத கஜ ராஜா. இந்தப் படம் 12 ஆண்டுகளுக்கு முன்பே ரிலீஸ் ஆகவேண்டியது. ஆால், தயாரிப்பாளர் தரப்பில் ஏற்பட்ட பிரச்சனையால் படம் அப்படியே முடங்கிவிட்டது. இருந்தாலும் இந்தப் படம் குறித்த பேச்சும், பாடல் குறித்த பேச்சும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது எழும்,
மத கஜ ராஜா வைப்
காரணம், அந்தப் படத்தில் நடித்தவர் மற்றும் விஷால் முதல்முறாயாக பாடிய மை டியர் லவ்வரு பாடல், இந்தப் பாடல் தமிழ் சினிமாவிவ் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சம் நஞ்சமல்ல, 12 வருடத்திற்கு முன்பும் சரி, இப்போது ரிலீஸ் அறிவிப்பு வெளியான சமயத்திலும் சரி அது தந்த வைப் மிகவும் அதிகம்.
விஷால் உடல்நிலை
இந்த சூழலில், மதகஜராஜா படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விஷால் மிகவும் உடல்நிலை முடியாமல் இருந்தார். சிவந்த கண்கள், நடுங்கும் கைகள், நிற்கக் கூட முடியாத நிலையில் இருந்தார். இதைக் கண்ட அவரது ரசிகர்கள் விஷாலின் உடல்நிலையை எண்ணி மிகவும் கவலை அடைந்தனர். அதே சமயத்தில், அவரது உடல்நிலை குறித்து பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
விஷால் விரைவில் குணமடைவார்
இந்நிலையில், மத கஜராஜா படம் குறித்து அப்படத்தின் நடிகை வரலட்சுமி பிஹைண்ட்உட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், நான் விஷாலிற்கு உடல்நிலை சரியில்லை எனக் கேள்விப்பட்டேன். அவர் விரைவில் குணமாகிவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
மத கஜ ராஜா படத்தின் வெளியீட்டிற்கு இப்படி எந்த புரொமோஷனும் இல்லாமல் தானாகவே வரவேற்பு கிடைத்தது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்திற்காக அனைவரும் அவ்வளவு உழைப்பைக் கொடுத்துள்ளோம்.
சுந்தர்.சியின் சிறந்த படம்
சுந்தர்.சி சாரின் படங்கள் எல்லாம் எப்போதும் காமெடியாக இருக்கும் என நமக்குத் தெரியும். இந்தப் படம் அவர் இயக்கியதிலேயே சிறந்த படமாக இருக்கும். இந்தப் படம் இத்தனை ஆண்டுகளுக்கு பின் வெளிவந்தாலும், இந்த காலத்திற்கு தகுந்தாற் போல இருக்கும்.
மத கஜ ராஜா எனது 2வது படம். அதனால் நான் இந்தப் படத்தில் எப்படி நடித்திருக்கிறேன் என்று தெரியவில்லை. சுந்தர்.சி சார் தான் என்னை எப்போது பார்த்தாலும் பெண் மாதிரி நடக்க வேண்டும். பெண் மாதிரி நடிக்க வேண்டும் என சொல்லிக் கொண்டே இருப்பார். எனது நடையையும் பேச்சையும் மாற்ற அவர் ரொம்பவே கஷ்டப்பட்டார்.
விஷாலால் கஷ்டப்பட்டோம்
விஷால் இந்தப் படத்திற்காக சாப்பிடாமல் எல்லாம் இருந்து 8 பேக்ஸ் வைத்திருப்பார். இந்தப் படத்தில் அவரது உழைப்பு நிச்சயம் பேசப்படும். அதே சமயம் அவர் பாடிய பாடல் எங்களை ஒரு வழி ஆக்கியது. அந்தப் பாடலை 3 நாள் ஷூட்டிங் செய்தோம். அப்போது ஒவ்வொரு முறை இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் எப்போது இந்த பாட்டின் ஷீட்டிங் முடியும் என்று இருக்கும்.
எனக்கும் விஷாலுக்கும் சோடா பாட்டில் சீன் ஒன்று இருக்கும். அதில் தான் நான் அதிக டேக் வாங்கினேன். அதை பார்த்த சுந்தர்.சி சார் எனக்கு டான்ஸ் ஸ்டெப் மாதிரி 4 அசைவுகளை சொல்லிக் கொடுத்தார். பின் அதை மட்டும் செய்து டேக் ஓகே செய்தேன்.
பிடித்த கதாபாத்திரங்கள்
அஞ்சலியுடன் எனக்கு இந்தப் படத்தில் தான் பழக்கம் ஏற்பட்டது. அது இப்போது வரை தொடர்கிறது. மேலும், தனக்கு காமெடி கதாப்பாத்திரங்களிலும், வாரியர் போன்ற கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசையாக உள்ளது. அந்த கதாப்பாத்திரம் கிடைத்தால் நடிப்பேன் என்றார்.
அத்துடன் சில கதாப்பாத்திரங்கள் மனதுத்து பிடித்த மாதிரி இருக்கும். அதற்காக நடிப்போம். சில கதாப்பாத்திரங்கள் எல்லாம் பிடிக்காவிட்டாலும் காசுக்காக நடிப்போம். படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை எல்லாம் நாம் தலையில் ஏற்றிக் கொள்ளவே கூடாது. நம் வேலையை மட்டும் நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்றார்.
ஸ்பெஷல் பொங்கல்
இந்தப் பொங்கல் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இந்த பொங்கல் எனது தல பொங்கல் அத்துடன் 12 ஆண்டுகளுக்கு பின் எனது படமும் வெளியாகிறது. அதுமட்டும் அல்லாது என் அம்மா நடித்த வணங்கான் படமும் திரைக்கு வந்துள்ளது என்றார்.
டாபிக்ஸ்