தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Varalaxmi Sarathkumar Got Engaged To Art Gallery Owner Nicholai Sachdev

Varalaxmi Sarathkumar: திருமதி ஆகிறார் வரலட்சுமி சரத்குமார்! பிரபல தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 02, 2024 06:00 PM IST

நடிகர் சரத்குமாரின் மகளும், தமிழ் சினிமாவின் ஹீரோயினுமான வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

வருங்கால கணவருடன் வரலட்சுமி சரத்குமார்
வருங்கால கணவருடன் வரலட்சுமி சரத்குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 1ஆம் தேதி குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்க நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.  வரலட்சுமியின் வருங்கால கணவரானநிக்கோலாய் சச்தேவ் ஆர்ட் கேலரி நடத்தி வருகிறார். 

இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 14 ஆண்டுகள் பழக்கம் இருந்த நிலையில் தற்போது இருவரின் பெற்றோர்கள் சம்மதத்துடன் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது திருமணம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். சத்தமில்லாமல் நேற்று முன் தினம் வரலட்சுமியின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், இன்று தான் அது குறித்து முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வரலட்சுமியும், நடிகர் விஷாலும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவிய நிலையில், அதற்க இருவரும் மறுப்பு தெரிவித்தனர். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம் என்ற தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து 14 ஆண்டுகளாக தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுடன் பழகி வந்து, தற்போது திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் இந்த ஆண்டில் பொங்கல் ரிலீசாக ஹனுமன் என்ற தெலுங்கு படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தனுஷின் 50வது படமான ராயன் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அத்துடன் மலையாலத்தில் கலர்ஸ், தெலுங்கில் சபரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த ஆண்டில் திருமண பந்தத்தில் இணையும் அடுத்த ஹீரோயின்

பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோயினாகவும், தமிழ், தெலுங்கு சினிமாக்களிலும் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட் நடிகர் ஜாக்கி பக்னானியை கடந்த மாதம் 21ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இதற்கு முன்னர் தனது பிறந்தநாளான ஜனவரி 31ஆம் தேதி பிரிட்டீஷ் நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக அறிவித்தார் நடிகை எமி ஜாக்சன்.

இவர்களுக்கு அடுத்தபடியாக திருமண பந்தத்தில் இணையும் ஹீரோயினாகியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்