'40 பென்ச்மார்க்ல 4 கூட வரல' கல்யாண விஷயத்துல என்ன அசிங்கப்படுத்துறீங்க- நச் ரிப்ளை தந்த வனிதா
நான் 40 கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிருக்கேன். ஆனா என் பென்ச் மார்க்ல இன்னும் 4 கூட வரல என நடிகை வனிதா விஜயகுமார் நக்கல் கேள்விக்கு நச்சென பதில் அளித்துள்ளார்.

அலெர்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் நிகழ்வு இன்று பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் தூய்மை பணியாளர்களை வைத்து போஸ்டர் வெளியிட்டுள்ளனர். பின், வனிதா, பிரஜன் உள்ளிட்ட நடிகர் பட்டாளங்கள் இந்தப் படம் குறித்த புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பெண்கள் செய்யும் தவறுகளும் சுட்டிக்காட்ட வேண்டும்
அப்போது, செய்தியாளர்களை சந்தித்து வனிதா விஜய குமார் பேசியுள்ளார். அதில், "பொதுவாக பெண்கள் முன்னேற்றம், பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், பெண்களுக்கான பாதுகாப்பு பற்றி தான் படங்கள் வருகிறது. இங்கு நிறைய பேர் பெண் என்ற அடையாளத்தை பயன்படுத்தி தவறுகளும் செய்கிறார்கள். அவர்களை மையப்படுத்தி தான் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. என் வாழ்க்கையில் நானே எத்தனையோ பெண்களை இதுபோல் சந்தித்திருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்கு கோபம் வரும். பெண்களா இருந்தாலும் தப்பு பண்ணா தண்டனை கிடைக்கனும்.