Actress Vanitha: இதெல்லாம் பாட்டா? காச போட்டு எடுத்து என்ன யூஸ்? வைரலாகும் வனிதா பேச்சு!
Actress Vanith: இப்போதுள்ள பெரிய ஹீரோ படங்களில் எல்லாம் பாடல்களின் நடனம் மிக மோசமாகவும். தேவையில்லாதாகவும் இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

Actress Vanitha: இயக்குநர் சூரியன்.ஜி இயக்கத்தில் ராஜீவ் கோவிந்த், அபிஷேக் ஜார்ஜ், யுக்தா பெர்வி, சித்தாரா விஜயன், ஹரிஷ் பெர்டி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கும் படம் டெக்ஸ்டர். இந்தப் படம் இம்மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்ப்ட்டிருக்கும் நிலையில், படத்தின் ஆடியோ மற்றும் டிரெயிலர் லான்ச் நேற்று நடந்தது.
குவாலிட்டி மேக்கிங்
க்ரைம் திரில்லர் படமாக உருவெடுத்துள்ள இப்படத்தின் நிகழ்ச்சியில் இயக்குநர், பேரரசு, உதயகுமார், ராஜன், நடிகையும் இயக்குநருமான வனிதா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இப்படம் குறித்து வனிதா பேசுகையில், இந்தப் படத்தின் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தோட மேக்கிங்ல அவ்ளோ குவாலிட்டி இருக்கு. நடிகர்கள் பேசும் போதும் அதெல்லாம் தெரிஞ்சது. படத்துல கேமரா பூந்து விளையாடி இருக்கு.
கிரைம் திரில்லர் படங்கள் எல்லாம் கோடி கோடியா போட்டு எத்தனை சைபர்ன்னே தெரியாத அளவு பணத்த போட்டு எடுக்குறாங்க. ஆனா, அதை எல்லாம் சில நேரம் ஒரு படமா கூட நம்மளால பாக்க முடியல.
இப்போ இருக்குறது எல்லாம் பாட்டா?
பாடல் காட்சிகளும் அப்படி தான் இருக்கு. 80,90களில் வெளியான படங்களில் பாடல்கள் அவ்வளவு அருமையாக இருக்கும். பாடலுக்கான காட்சி அமைப்பும் அழகா இருக்கும். இது 2000ம் வருஷம் வரைக்கும் அந்த மாதிரி தான் இருந்தது. ஆனா, இப்போ வர்ற படத்தை எல்லாம் பாத்தா, குறிப்பா பெரிய பெரிய நடிகர்கள் படத்தோட பாட்டு எல்லாம் கேட்டா, அதெல்லாம் டான்ஸ்ஸா, இல்ல அதெல்லாம் ஸ்டெப்பான்னே தெரியல. அதெல்லாம் ஸ்டெப்னே சொல்ல முடியாது, ரொம்ப வல்கரா இருக்கும். அதெல்லாம் தேவையே இல்ல.
நல்ல புரிதல் இருக்கு
ஆனா, இந்தப் படத்துல பாத்தா நெறைய சென்ஷூவாலிட்டி இருக்கு. ஆனா அது ஆபாசமா தெரியல. அதுக்காக நான் டான்ஸ் கொரியோகிராஃபர பாராட்டுறேன். பாட்டுல எங்கயும் சலிப்பு தன்மை இல்ல. சும்மா டான்ஸ் வைக்கணும், சும்மா பாட்டு வைக்கணும்ன்னு கமர்ஷியல் ஹிட் கொடுக்கணும்ன்னு இல்லாம அந்த சூழலுக்கு தகுந்த மாதிரி பாட்டு இருந்தது.இந்தப் படத்தோட மியூசிக் ரொம்ப அருமையா, கேக்கவே இனிமையா இருந்தது. இந்தப் படத்துல வேலை செஞ்ச அத்தனை பேருகிட்டயும் ஒரு நல்ல புரிதல் இருக்கு.
நல்ல சினிமாவுக்கு சப்போர்ட்
இங்க சின்ன படம், பெரிய படம்ன்னு எல்லாம் எதுவும் இல்ல. நல்ல படத்துக்கு சப்போக்ட் பண்ணுவீங்கன்னு நெனைக்குறேன். சினிமாவுல மொழிகள் இருக்கக் கூடாது. இங்க பேசதா பல ஊமை படங்களும் ஹிட் கொடுத்திருக்கு. உதாரணத்துக்கு சார்லி சாப்ளின் படம் கூட சொல்லலாம். சினிமாவ நம்பி வாழுற எத்தனையோ தமிழர்கள் இருக்காங்க. அவங்களுக்கு தயாரிப்பாளர்கள் முதல் முக்கியத்துவத்த கொடுக்கலாம். தமிழ் மொழி பேசுனா தான்னு இல்ல. இங்க நிறைய கலைஞர்கள் தமிழ்நாட்டை நம்பி இருக்காங்க. அவங்களும் வாழணும்ன்னு கொஞ்சம் படம் எடுக்கணும்.
தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பு
இப்போ வர்ற படங்கள்ல ஹீரோ மட்டும் தான் தமிழ் ஆளா இருக்காரு. ஆர்ட்டிஸ்ட் உட்பட பலரும் மற்ற மொழி பேசுறவங்க தான் இருக்காங்க. தமிழ்லயும் மிக அழகான கதாநாயகிகள் எல்லாம் இருக்காங்க. அவங்களுக்கும் வாய்ப்பை தொடர்ந்து கொடுங்க. நான் சொன்னதை கான்ட்ரோவெர்ஸியா வச்சு போட்டாவது ரீச் பண்ணுங்க எனக் கூறியுள்ளார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்