"எனது அத்தனை விவாகரத்திற்கும் காரணம் எனது அப்பா தான்" வனிதா விஜயகுமார் சொன்ன விஷயம் என்ன தெரியுமா?
அனைத்து விஷயங்களையும் கையாளத் தெரிந்தவர் என் தந்தை. அதனால், அவரைப் போன்றே அனைத்து ஆண்களும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.
ஆண்கள் தினத்தை முன்னிட்டு ஐபிசி தமிழ் யூடியூப் சேனல், பெண்கள் கொண்டாடும் ஆண்கள் யார் என சிறப்பு வட்டமேஜே மாநாட்டை நடத்தினர். இதில், திரைப் பிரபலங்களான சுஜிதா, வனிதா விஜயகுமார், அறந்தாங்கி நிஷா, சாந்தி வில்லியம்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வனதா, தான் பார்த்து வியந்த தந்தையைப் போல் அனைத்து ஆண்களும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
பெண்களால் மறக்கவும் மன்னிக்கவும் முடியும்
இதுகுறித்து பேசிய வனிதா, பெண்களால் ஆண்களை விட மிகவும் எளிதாக ஒருவரை மறக்கவும் முடியும். மன்னிக்கவும் முடியும். என் குழந்தைப் பருவத்தில் எனது அப்பா தான் இருப்பதிலேயே சிறந்த தந்தை என நான் நினேத்தேன். அதுமட்டுமல்ல, அவர்கள் தான் உலகின் சிறந்த கணவர் என்றும் என்னால் சொல்ல முடியும். அவருக்கு இரண்டு மனைவிகள். இது சாதரண குடும்ப அமைப்பைக் காட்டிலும் மிகவும் சிக்கலானதாக இருக்கும்.
என் அப்பா 2 மனைவிகளை சமாளித்தார்
ஒரு மனைவியை வைத்திருக்கும் ஆண்களே மனைவியை சமாளிக்க மிகவும் போராடி வரும் நிலையில், எனது அப்பா ஒரே நேரத்தில் இரு மனைவிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடத்தியது எல்லாம் மிகவும் சாதாரண விஷயம் அல்ல.
என் அம்மா, என் அப்பாவிற்கு இரண்டாவது மனைவி. இவரை என் அப்பாவுடன் சேர்த்து அவரது முதல் மனைவியும் ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமல்ல, இவர்கள் இருவரும் ஓரே குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருவது இப்போது வரை நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. இவர்கள் இப்படி ஒற்றுமையாக இருக்க முக்கிய காரணமே என் அப்பா இருவரையும் சரிசமமாக நடத்துவது தான்.
மல்டி டாஸ்க் செய்யும் பெண்கள்
பெண்களுக்கு சில விஷயங்களைக் கையாளத் தெரியாமல் போகும் போது தான் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும். பெண்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய முடியும். உதாரணத்திற்கு ஒரு பெண்ணால் வீட்டையும் பார்த்துக் கொண்டு, வேலையும் பார்த்துக் கொண்டு, வண்டியும் ஓட்டிக் கொண்டு, அப்படி செல்லும்போது விபத்து ஏற்பட்டால் அதை சமாளிக்கவும் செய்து, அந்த சமயத்தில் வரும் போனை எடுத்து பதில் சொல்லவும் தெரியும். இதை என் கண்கூடாக நான் பார்த்திருக்கிறேன்.
ஆண்கள் கடிவாளம் கட்டிய குதிரைகள்
ஆனால், ஒரு ஆண் கடிவாளம் கட்டிய குதிரை. அவர்கள் ஒரே நேர்கோட்டில் தான் செல்வார்கள். ஒரு விஷயத்தின் மீது அவர்களின் கவனம் இருந்தால், அது வேறு விஷயத்திற்கு மாறாது. அவர்கள் ஒரு வேலையை விட்டு அடுத்த வேலைக்கு சென்றால் டென்ஷன் ஏறிவிடும்.
ஆனால், என் அப்பாவைப் போன்ற சில ஆண்கள் பல விஷயங்களை ஒரே நேரத்தில் கையாளத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். அவர் குடும்பத்தை மட்டுமல்ல, வீட்டில் பைப் ரிப்பேர் ஆகிருந்தா கூட அவர் அதை சரி பண்ண ஆள கூப்ட மாட்டார். ஒருவகையிஸ அவர் கஞ்சம். ஆனா, அவரால முடிஞ்ச எல்லாத்தையும் அவரே அவரோட கையால செஞ்சி முடிப்பார்.
எங்க அப்பா ஒரு ஆல்பா மேல்
அப்படி பாத்தா என் அப்பா ஒரு ஆல்பா மேல் என்பதைத் தாண்டி எங்களோட பிரச்சனைய பாக்குறது, குழந்தைங்கள கவனிக்குறது, ரெண்டு மனைவிங்கள கவனிக்குறது, வேலையிலயும் கரெக்டா இருக்குறதுன்னு பக்காவா இருப்பாரு. சோ ரொம்ப கம்மியான ஆளுங்க தான், அவங்களோட எல்லா விஷயத்தையும் கையாளத் தெரிஞ்சவங்களா இருப்பாங்க.
அப்பாவைப் போல ஆண்கள் வேணும்
நான் என் சின்ன வயசுல இருந்து ஒரு அப்பான்னா இப்படி தான் இருப்பாங்க அப்டின்னு நான் வளர்ந்ததால, என் வாழ்க்கையில் வர எல்லா ஆண்களும் அப்படித் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு சாதாரணமாகவே எழுகிறது.
என் அப்பா எப்படி இருக்கிறாரோ. அதே மாதிரி தான் என் சகோதரன் அருணும் இருக்கிறான். என் வாழ்வின் பல வருடம் இந்த சிந்தனை உள்ள ஆண்களுடனே என் வாழ்க்கை சென்றதால், நான் என்னுடைய கணவர்களிடமும் இதையே எதிர்பார்க்கிறேன். அது இல்லாததால், அந்த ஆண்களுடனான உறவை ஏற்றுக் கொள்ளவே மனம் மறுக்கிறது எனக் கூறியுள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்