Rajinikanth: 'ரஜினி சார திட்டி டயலாக் பேச பயம்.. அவரு பாராட்டி செயின் குடுத்தாரு'- பூரித்த வடிவுக்கரசி
Rajinikanth: நடிகர் ரஜினிகாந்துடன் அருணாச்சலம் படத்தில் நடித்தது குறித்தும், அந்தப் படம் எடுக்கும் போது இருந்த மனநிலை குறித்தும் நடிகை வடிவுக்கரசி பூரிப்புடன் பேசியுள்ளார்.

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் திரையில் தோன்றினாலே போதும் அவரை கொண்டாட ஒரு கூட்டம் இருக்கும் சமயத்தில், அவரை ஒரு கூண் விழுந்த கிழவி திட்டித் தீர்ப்பதை கண்டால் அவரது ரசிகர்கள் கொதித்து விட மாட்டார்களா என்ன?. அப்படி நடக்கும் எனத் தெரிந்தே அருணாச்சலம் படத்தில் அந்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார் வடிவுக்கரசி. இதற்கு முன் அவர் பல படங்களில் நடித்திருந்தாலும், அருணாச்சலம் படம் அவர் நடிப்புக்கு மகுடம் சூட்டியது போன்று தான் அமைந்தது.
இந்நிலையில், அருணாசலம் படத்தில் நடித்தது எப்படி, அந்த வாய்ப்பு தன்னை தேடி வந்தது எப்படி, நடிக்கும் போது இருந்த மனநிலை என்ன என்பது குறித்து நடிகை வடிவுக்கரசி இந்தியா கிளிட்ஸ் யூடியூப் சேனலில் நடிகர் ராஜேஷ் குமாருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பார்.
தப்பு வரவே கூடாது
அந்தப் பேட்டியில், " நான் தூர்தர்ஷன்ல வேலை செய்யும் போது லைவ் புரோகிராம் போகனும். அந்த லைவ்ல மிஸ்டேக் வரவே கூடாது. ஸ்டூடியோவுல நானும் ப்ளோர் மேனேஜரும் தான் இருப்போம். அவர பாத்து நான் கதை சொல்லிட்டே இருப்பேன். அப்போ 2 நிமிஷம் தான் இருக்கு வைண்ட் அப் பண்ணன்னு சைக காட்டினாங்கன்னா நான் மொத்த கதையையும் கடகடன்னு சொல்லிட்டு அக்கா உங்களுக்கு அடுத்த வாரம் வேற கதை சொல்லுவனாம்ன்னு முடிக்கனும். அதுனால டயலாக்ல தப்பு வரக்கூடாதுன்னு எல்லாம் மனப்பாடம் பண்ண கத்துக்கிட்ட பழக்கம் தான் சினிமாவுல யூஸ் ஆச்சு.
பெரிய பிரச்சனை ஆகிடும்ன்னு சொன்னேன்
அருணாச்சலம் படத்துல நான் இங்கிலீஸ் படம் எல்லாம் பாத்துட்டு போய் கூண் விழுந்த கேரக்டர் கேக்கல. சினிமாவுல நாம சொல்லி ஏதாவது நடக்குமா? என்ன ரஜினி சார் மண்டபத்துக்கு கூப்டாங்க. அங்க தான் கதை சொன்னாங்க. அப்போ அத கேட்டதும் நான் எப்படி ரஜினி சார எதிர்த்து டயலாக் பேசுறது. அதெல்லாம் பெரிய பிரச்சனை ஆகிடும். ஏற்கனவே மனோரமா ஆச்சி எலெக்ஷன் டைம்ல பேசி எல்லாம் பிரச்சனை ஆகிடும்ன்னு சொன்னேன்.
வித்யாசமான கெட்டப்
அப்போ, அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை ஆகாது. கடைசியில நீங்க தான் அவர் கைக்கு காப்பு போடுவீங்கன்னு சொல்லி என்ன சமாதானம் செஞ்சாங்க. அப்போ வேற மாதிரி கெட்டப் வேணும்ன்னு கேட்டாங்க. அப்போ குடும்ப சங்கிலின்னு ஒரு படத்துக்காக மொட்டை அடிச்சிருந்தேன். அதே கெட்டப்ல தான் நான் கதை கேக்கவும் போனேன். அப்போ மொட்டையில முடி மொலைச்ச மாதிரி விக் வச்சிக்கலாம். அதோட கூண் விழுந்த மாரியும் நடிக்க சொன்னாங்க.
கூண் செட் ரொம்ப கஷ்டமா இருந்தது
உடனே, பஞ்சு அருணாச்சலம் அப்பாவுக்கு போன் பண்ணேன். இப்படி எல்லாம் என்ன நடிக்க சொல்றாங்களேன்னு. அப்போ நீ ஒன்னும் கவல படதா. நீ டயலாக் தான் பேசுற, ரஜினி சார திட்டலன்னு எல்லாருக்கும் தெரியும்ன்னு சொல்லி சமாதானம் பண்ணாரு.
அப்படியே ஒத்துக்கிட்டு படம் நடிக்க போனா, கூண் செட் பண்ணுனது எனக்கு ரொம்ப ஹெவியா பண்ணிட்டாங்க. மாவுகட்டுக்கு யூஸ் பண்ற பொருள வச்சு பண்ணிட்டாங்க. அதுக்குள்ள பஞ்சு.
ரஜினி சார் சப்போர்ட் பண்ணாரு
குனிஞ்சு இருக்கும் போது ஒன்னும் பண்ணாது. ஆனா, நிமிர்ந்து நின்னா ரொம்ப வலிக்கும். அத யாரோ ரஜினி சார்கிட்ட சொல்லிட்டாங்க. அப்போ இருந்து நான் கெட்டப் எல்லாம் போட்டு ரெடி ஆகிட்டேன்னா முதல்ல என்னோட ஷாட் எடுக்க சொல்லிடுவாரு. அப்படி தான் படம் முழுக்கவே எடுத்தாங்க.
ஸ்பெஷலா கிடைச்ச செயின்
படம் ரிலீஸ் ஆகி 100வது நாள் விழா எல்லாம் வைக்குறாங்க. எல்லாருக்கும் ஷீல்டு எல்லாம் குடுக்குறாங்க. யாரும் எனக்கு எதுவும் தரல. எனக்கு ரொம்ப கஷ்டமாகி எங்க அம்மாட்டா வாம்மா வீட்டுக்கு போகலாம்ன்னு சொல்றேன். அப்போ திடீர்ன்னு ரடஜினி சார் மைக்ல பேசுறாரு. நான் வடிவுக்கரசிக்கு ஸ்பெஷலா எதாவது பண்ணனும்ன்னு நெனக்குறேன்னு சொல்லி 2 பவுன் செயின் போட்டாரு. நான் ரெண்டே ஸ்டெப்ல ஸ்டேஜ்க்கு போய் வாங்குனேன். எனக்கு அது அவ்வளவு சந்தோஷமா இருந்தது" என பூரிப்புடன் பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்