Urvashi: 700+ படங்கள் நடிச்சிட்டேன்.. அப்போ படத்தை 15 நாள்களில் எடுத்திருவாங்க; இப்பதான் லேட்டாகுது.. ஊர்வசி பேட்டி
700 படங்களுக்குமேல் நடிச்சிட்டேன்.. மலையாளப் படத்தை 15 நாள்களில் எடுத்திருவாங்க.. இப்பதான் லேட்டாகுது.. நடிகை ஊர்வசி

Urvashi: 700+ படங்கள் நடிச்சிட்டேன் என்றும்; அப்போது படத்தை 15 நாள்களில் எடுத்திருவாங்க என்றும்; இப்பதான் லேட்டாகுது எனவும் நடிகை ஊர்வசி பேட்டியளித்திருக்கிறார்.
இதுதொடர்பாக நடிகை ஊர்வசி வசந்த் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறைய செல்லப் பெயர் இருக்கிற மாதிரி தெரியுதே?
குட்டி மோள், பொடி மோள்னு கூப்பிடுவாங்க. ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியுமே என்னை அப்படிதான் கூப்பிட்டுட்டு இருந்தாங்க. நான் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சதில் இருந்து இன்னிக்கு நிறைய அவார்ட்ஸ் ஷோ வரை அப்படி தான் கூப்பிடுறாங்க.
ஊர்வசி மேடத்துடைய குழந்தைப் பருவம் எப்படி இருந்தது?
இல்லம்மா. நான் குழந்தையில் ஒரு பிஸியான ஆர்ட்டிஸ்ட் கிடையாது. என்னுடைய சிஸ்டர் கல்பனா தான் ரொம்ப திறமையானவங்க. அவங்களை ஒரு படத்துக்கு கூப்பிட்டாங்க, அப்போது தான் நாங்க சென்னை வந்தோம். நானும் சென்னை பார்க்கணும்னு அடம்பிடிச்சு வந்தேன்.
அப்போது என் அக்கா கல்பனாவை பார்த்திட்டு, இந்தப் பெண் பெரிய பொண்ணாக இருக்காங்க. கதைப்படி, அம்மா இல்லாத குழந்தையை வளர்க்கிற ஒரு அக்காவா தான் வேணும்னு சொன்னாங்க. அப்போதுதான், என்னைப் பார்த்துட்டு நடிக்க வைச்சாங்க.
பிடிக்காமல் தான் நடிக்க வந்தேன். என் அப்பாவைப் பார்த்திட்டு தான் நடிப்பேன். என் முதல் படத்தில் க்ளோஸப் ஷாட்ஸ்ஸே இருக்காது. அப்போது எல்லாம் கேமரா ஓட ஆரம்பிச்சதும் சத்தம் வரும். நான் அழுகை ஆரம்பிச்சிருவேன். என் வீட்டில் எல்லாருமே நடிகர்கள். அதைப் பார்த்திட்டு ஒருத்தர், என் அப்பாகிட்ட, ‘எப்படி சேட்டா.. உங்கள் குடும்பத்தில் இப்படி ஒரு பொண்ணு’னு கேட்பாங்க. அப்பாவுக்கு நடிப்பு பேக்ரவுண்ட் தான். அப்பாவுக்கு டிராமா ட்ரூப் எல்லாம் இருந்துச்சு. ஆரம்பத்தில் எனக்கு எழுத்து ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. நடிக்கப் பிடிக்காமல் இருந்துச்சு.
உங்கள் தாத்தா பெரிய எழுத்தாளர்னு கேள்விப்பட்டேன்?
ஆமா. என் தாத்தா(சூரநாட்டு குஞ்சன் பிள்ளை - Sooranad Kunjan Pillai) சினிமா சம்பந்தப்பட்ட ரைட்டர் இல்ல. டைப் ரைட்டிங் லெட்டர்ஸை கொண்டு வந்திருக்கார். நிறையப் புத்தகங்கள் பண்ணியிருக்கார். கல்வித்துறை சார்ந்த நிறையப் புத்தகங்களை எழுதியிருக்கிறார். டைப் ரைட்டிங்கில் எப்படி புது மொழியை உருவாக்கணும்னு கொண்டுவந்தவர் அவர் தான்.
700+ படங்கள் பண்ணியிருக்கீங்கன்னு சொல்றதை நம்ப முடியலையே?
ஏனென்றால், அப்போது மலையாளப் படங்கள் 15 நாட்களில் எடுத்து முடிச்சிடுவாங்க. தமிழ்ப்படமே சின்ன சின்ன செட்யூலாக அதிகபட்சம் ஒரு 35 நாளுக்குள்ள தான் இருக்கும். இப்ப இருக்கிற மாதிரி கிடையாது. நிறைய டைம் எடுக்கிறது அதெல்லாம் அப்போது கிடையாது. இப்போது மலையாளப்படம் மினிமம் 3 மாதம்னு ஆகிப்போய்டுச்சு.
அப்போது அது இல்லை. அதனால் தான் அவ்வளவு படங்கள் நடிக்க முடிஞ்சது. நான் பிஸியாகவே இருந்திட்டேன். குறிப்பாக, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்னு பிஸியாக இருந்ததால் அவ்வளவு நம்பர்ஸ் வந்துச்சு. இன்றும் நான் எவ்வளவு படம் நடிச்சேன் எண்ணல. நூறு சதவீதம் அது சரின்னு கூட எனக்குத் தெரியாது. பிரியதர்ஷன் படத்தில் நடிக்கும்போது, ஊடகத்தினர் தான் போட்டாங்க, இது ஊர்வசிக்கு 700ஆவது படம் என்று. அப்போது தான் வியந்தேன். அப்போது அந்த வாய்ப்பே இல்லை. இப்போது தான் நீங்க போனிலேயே பார்க்கலாம். நமக்கு நாம் நடிச்ச படத்தை எண்ண நேரமில்லாததால் அப்பவும் எண்ணல. இப்பவும் எண்ணல.
எப்படி சின்ன வயதில் அத்தனை மொழிகளைக் கத்துக்கிட்டு படம் நடிக்க முடிஞ்சது?
தமிழ் எப்போதுமே சரளமாகப் பேசுவேன். ஏனென்றால், இங்கு தானே படிச்சேன். சின்ன வயசாக இருந்ததால் எனக்குத் தெரிஞ்ச கன்னடத்தில் தப்பாக இருந்தாலும் பேசுவேன். விழுந்து விழுந்து சிரிப்பாங்க. அப்படி தான் கத்துக்கிட்டேன். இப்படி தான் தெலுங்கு பேசுவேன். ஆனால், இப்போது வந்து அப்படி பேசமுடியாது. கஷ்டம். இப்போது யாரும் தப்பாக நினைப்பாங்களோன்னு எண்ணம் வரும்.
அப்படி நாங்க வந்தப்போ, வடமாநிலங்களில் இருந்து வரும் நடிகைகள் ப்ராம்டிக் பண்ணுனா கூட, வசனம் சரியாகப் பேசாமல் இருக்கும்போது நமக்குக் கோபம் வருது. சர்வசாதாரணமாக வசனம் பேசும்போதே, போனை பார்த்திட்டு இருக்காங்க. அதனால் கோபம் வருது’’ என்று முடித்தார், நடிகை ஊர்வசி.
நன்றி: வசந்த் டிவி!

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்