எல்லை மீறிய ட்ரோல்.. கோயில் குறித்த பேச்சுக்கு விளக்கமளித்த நடிகை ஊர்வசி ரவுத்தேலா..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எல்லை மீறிய ட்ரோல்.. கோயில் குறித்த பேச்சுக்கு விளக்கமளித்த நடிகை ஊர்வசி ரவுத்தேலா..

எல்லை மீறிய ட்ரோல்.. கோயில் குறித்த பேச்சுக்கு விளக்கமளித்த நடிகை ஊர்வசி ரவுத்தேலா..

Malavica Natarajan HT Tamil
Published Apr 20, 2025 09:53 AM IST

நடிகை ஊர்வசி ரவுத்தேலா உத்தரகாண்டில் தனது பெயரில் ஒரு கோயில் இருப்பதாகக் கூறியதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, தற்போது நடிகையின் குழு சார்பாக ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது.

எல்லை மீறிய ட்ரோல்.. கோயில் குறித்த பேச்சுக்கு விளக்கமளித்த நடிகை ஊர்வசி ரவுத்தேலா..
எல்லை மீறிய ட்ரோல்.. கோயில் குறித்த பேச்சுக்கு விளக்கமளித்த நடிகை ஊர்வசி ரவுத்தேலா..

விளக்கமளித்த நடிகை

இந்நிலையில், நேற்று நடிகை ஊர்வசியின் குழு சார்பாக ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது, அதில் நடிகை பேசியதை அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். அந்த அறிக்கையில் "உத்தரகாண்டில் என் பெயரில் ஒரு கோயில் இருக்கிறது என்று தான் ஊர்வசி ரவுத்தேலா கூறினார். அதை ஊர்வசி ரவுத்தேலாவின் கோயில் என்று அவர் கூறவில்லை. இப்போது மக்கள் யாரும் பிறர் கூறும் விஷயங்களை சரியாகக் கேட்கவில்லை.

சரியாக கேட்டுவிட்டு பேசுங்கள்

‘ஊர்வசி’ அல்லது ‘கோயில்’ என்று கேட்டவுடன், மக்கள் அதை ஊர்வசி ரவுத்தேலாவின் கோயில் என்றும் அவரை வழிபடுகிறார்கள் என்றும் நினைத்துக்கொள்கிறார்கள். விமர்சிக்கும் முன் இந்த வீடியோவை சரியாகக் கேட்டுவிட்டுப் பேசுங்கள்" என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

உண்மைகளை சரிபாருங்கள்

எந்தவிதமான குற்றச்சாட்டுகளையும் கூறுவதற்கு முன்பு, உண்மைகளைச் சரிபார்க்க வேண்டும் என்று நடிகை கூறினார். "எந்தவொரு நபர் மீதும் அடிப்படை அற்ற குற்றச்சாட்டுகளையோ அல்லது அவமானகரமான கருத்துகளையோ கூறுவதற்கு முன்பு, உண்மைகள் முழுமையாகச் சரிபார்க்கப்படுவது அவசியம். சமூகத்தில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் மரியாதையுடனும், புரிதலுடனும் நடந்துகொள்ள வேண்டும், இதனால் அனைவரின் உரிமைகளையும் பாதுகாக்க முடியும் " என்று அந்த அறிக்கை முடிவடைந்தது.

ஊர்வசி என்ன சொன்னார்?

முன்னதாக, சித்தார்த் கண்ணனுடன் நடந்த உரையாடலில் ஊர்வசி, "உத்தரகாண்டில் தனது பெயரில் ஒரு கோயில் இருப்பதாகவும், அது பத்ரிநாத் கோயிலுக்கு அருகில் இருப்பதாகவும் கூறினார். “உத்தரகாண்டில் என் பெயரில் ஒரு கோயில் இருக்கிறது. பத்ரிநாத் சென்றால், அதற்கு அருகில் ‘ஊர்வசி கோயில்’ இருக்கிறது” என்று கூறினார். மக்கள் அந்தக் கோயிலுக்கு ஆசிர்வாதம் பெறச் செல்கிறார்களா என்று தொகுப்பாளர் கேட்டபோது, ஊர்வசி சிரித்துக் கொண்டே, “கோயில் இருந்தா அதுதானே பண்ணுவாங்க” என்று பதிலளித்தார்.

பெருகும் எதிர்ப்புகள்

ஆனால், அந்தக் கோயிலை புனிதமாகக் கருதும் பூசாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள், நடிகையின் பேச்சுக்கு மகிழ்ச்சியடையவில்லை. பலர் அவரது மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.

ஊர்வசி கோயில் வரலாறு

ஊர்வசி கோயில், இந்து புராணங்களில் உள்ள ஒரு பாத்திரமான, மிகவும் மதிக்கப்படும் மற்றும் 108 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் சதி தேவியுடன் தொடர்புடையது. புராணத்தின்படி, சதி தேவியின் உடல் விழுந்த இடத்தில் அந்தக் கோயில் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.