Urvashi Rautela: 'என்னோட பாத்ரூம் வீடியோவ தெரிஞ்சே தான் ரிலீஸ் பண்ணாங்க'- ஊர்வசி ரௌத்தேலா
Urvashi Rautela: தனது குளியலறை காட்சி வேண்டுமென்றே வெளியிடப்பட்டதாக நடிகை ஊர்வசி ரௌத்தேலா கூறுகிறார்.

Urvashi Rautela: பாலிவுட் நடிகையான ஊர்வசி ரௌத்தேலா தமிழில் லெஜண்ட் சரவணாவின் லெஜண்ட் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து, அவர் தற்போது தெலுங்கு நடிகர் பாலைய்யாவின் தாக்கு மகராஜ் படத்தில் நடித்து தென்னிந்திய மக்களுக்கு மிகவும் பிரபலமானவராக மாறியுள்ளார். தாக்கு மரராஜ் படத்தில் இவர் பாலைய்யாவுடன் ஆடிய நடனம் அனைவராலும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குளியலறை வீடியோ லீக்
இந்நிலையில், ஊர்வசி ரௌத்தேலா, பாலிவுட் பப்புள் எனும் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், இதுவரை வெளியில் தெரியாத சில விஷயங்கள் குறித்தும் கூறியுள்ளார். அந்தப் பேட்டியில், " 2024 ஆம் ஆண்டில், குஸ்பைதியா திரைப்படத்திலிருந்து உர்வசி ரௌத்தேலாவின் குளியலறை காட்சி சமூக ஊடக தளங்களில் வெளியாகி அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வேண்டுமென்றே வெளியிடப்பட்டதாகவும், அதற்கு முன்னதாகவே தயாரிப்பாளர்கள் தனது அனுமதியைப் பெற்றதாகவும் நடிகை கூறி இருக்கிறார்.
இது அற்புதமான படம்
இந்த விவகாரம் குறித்து பேசிய ஊர்வசி ரௌத்தேலா, குஸ்பைதியா படத்தின் தயாரிப்பாளர்கள் குளியலறை காட்சிகளை வெளியிட எவ்வாறு தன்னிடம் அனுமதியைப் பெற்றார்கள் என்பது குறித்து நினைவு கூர்ந்தார். உர்வசி ரௌத்தேலா குஸ்பைதியாவை ஒரு அற்புதமான படம் என்று புகழ்ந்தார். அந்தப் படத்திலிருந்து தனது குளியலறை காட்சியை வெளியிட தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவுக்கான காரணத்தையும் வெளிப்படுத்தினார்.
என்னிடம் அழுதனர்
குஸ்பைதியா படத்தின் தயாரிப்பாளர்கள் தன்னிடம் வந்து அழுதனர். தங்கள் படத்தில் மக்களுக்கு பிடித்த பல அம்சங்கள் இல்லை என்றும் கூறினர். மேலும், தயாரிப்பாளர்கள் தங்கள் நிலத்தை விற்க வேண்டிய நிலையில் இருந்ததாகவும், ஒரு தீர்வுக்காக ஏங்கியதாகவும் அவர் கூறினார்.
அந்தக் காட்சியை வெளியிட தயாரிப்பாளர்கள் தன்னிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களுக்குக் கொஞ்சம் கடன் இருந்தது, கடன்களில் சிக்கியிருந்ததால் அவர்கள் தங்கள் நிலத்தையும் மற்றவற்றையும் விற்க வேண்டியதாக இருந்தது. இதனால், அவர்கள் அனைவரும் அவர்களது சொத்தை இழந்து தெருவிற்கு வரும் நிலையில் இருந்தனர். அதனால், அவர்கள் வந்து என்னுடைய வணிக மேலாளர், தலைவர் மற்றும் அனைவரிடமும் இதைப் பற்றி விவாதித்தனர்."
நாங்கள் அனுமதித்தோம்
“பின்னர், அவர்கள் எங்கள் அனுமதியைப் பெற்றனர், என்னுடைய குளியலறை காட்சி படத்தின் ஒரு பகுதி தான். மக்கள் கவனத்தை ஈர்க்க நாங்கள் சிறப்பாக எதுவும் இல்லை. அதனால் தயாரிப்பாளர்கள் அதை முன்கூட்டியே வெளியிடலாமா என்று கேட்டார்கள். இது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், குறிப்பாகப் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இருந்தது. அதனால், என் குளியலறை காட்சிகள் தெரிந்தே தான் ரிலீஸ் ஆனது என்றார்.
குஸ்பைதியா
குஸ்பைதியா படத்தை ஒரு குற்ற நாடகத் திரைப்படமாக சுசி கணேசன் எழுதி இயக்கினார். இது 2017 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான திருட்டுப் பயலே 2 இன் இந்தி ரீமேக் ஆகும், இதில் ஊர்வசி ரௌத்தேலா, வினீத் குமார் சிங், கோவிந்த் நாம்தேவ் மற்றும் அக்ஷய் ஓபராய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆகஸ்ட் 9, 2024 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
தாக்கு மகராஜ்
ஊர்வசி சமீபத்தில் தாக்கு மகாராஜ் படத்தில் நடித்தார். இதில் நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் பாபி தியோல் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தில் அவரது தோற்றம், குறிப்பாக தபிடி திபிடி பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதிலும், படம் வெறும் நான்கு நாட்களில் உலகளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். பாபி கோலி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஸ்ரதா ஸ்ரீநாத், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்