Trisha: ‘என்னை மீட்டெடுத்த காதலர்..என்றென்றும் நீதான் எனக்கு’ - காதலர் தினத்தில் த்ரிஷா நெகிழ்ச்சி பதிவு!
Trisha: இந்த நாள்தான் நான் இஸியை தத்தெடுத்தேன். ஆனால், அவள் என்னை மீட்டெடுத்தாள். - காதலர் தினத்தில் த்ரிஷா நெகிழ்ச்சி பதிவு!

Trisha: நடிகை த்ரிஷா காதலர் தினத்தில் தன்னுடைய செல்லப்பிராணியை காதலர் என்று குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
காதலி நீதான்
காதலர் தினமான இன்றைய தினம் நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில், ‘இந்த நாள்தான் நான் இஸியை தத்தெடுத்தேன். ஆனால், அவள் என்னை மீட்டெடுத்தாள். நன்றி லோகேஷ் பாலா; என் வாழ்க்கையில் எனக்கு வெளிச்சம் தேவைப்பட்ட போது எனக்கு அவளை கொடுத்தற்காக நன்றி! என்றென்றும் என் காதலர் இவள்தான்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
த்ரிஷாவின் கணக்கு முடக்கம்
அண்மையில் நடிகை த்ரிஷா கிருஷ்ணனின் எக்ஸ் தளத்தில் இருந்து திடீரென்று கிரிப்டோ கரன்சி தொடர்பான பதிவுகள் வெளியாகின. ஆனால், உடனே அவை டெலிட் செய்யப்பட்டன. இந்த பதிவு நீக்க நடவடிக்கைகளை த்ரிஷாவின் பர்சனல் குழு செய்திருக்கலாம் என்று தகவல் வெளியானது.
இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், த்ரிஷா இது குறித்தான விளக்கத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அதில் அவர், ‘ என்னுடைய எக்ஸ் தளம் ஹேக் செய்யப்பட்டு விட்டது. கணக்கு மீட்டெடுக்கப்படும் வரை, அந்த ஐடியில் இருந்து வெளியாகும் கருத்துக்கள் என்னிடம் இருந்து வந்தவையல்ல. நன்றி’ என்று பதிவிட்டு இருந்தார். தற்போது எக்ஸ் தளத்தில் இந்தப்பதிவை த்ரிஷா வெளியிட்டு இருக்கிறார். இதன் மூலம் அவரது எக்ஸ் தளம் மீட்டெடுக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது.
த்ரிஷா நடிப்பில் அண்மையில் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. அதில் த்ரிஷாவிற்கு குறைவான திரை நேரம் இருப்பினும் கூட, அவர் தன்னுடைய கதாபாத்திரத்தை எந்தளவு கடத்த வேண்டுமோ, அந்தளவு கடத்தி இருந்தார். இந்த ஜோடி இதற்கு முன்னர் கிரீடம், ஜீ, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்திருந்து. விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி வெளியானது.
கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், வசூல் ரீதியாக திரைப்படம் வெற்றி அடைந்து இருப்பதாக திரைவட்டாரத்தில் செய்திகள் வெளியாகி வருகின்றன. படம் வெளியான அன்றைய தினம் விடாமுயற்சி திரைப்படம் தமிழில் 21.50 கோடி ரூபாயும், தெலுங்கில் 50 லட்சமும் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் கிடையாது.
1997இல் வெளியான ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் தழுவலாக விடாமுயற்சி உருவாகியுள்ளது. அத்துடன் மற்றொரு ஹாலிவுட் படம் லாஸ்ட் சீன் அலைவ் என்ற படத்தின் சில காட்சிகளும் பட்டி டிங்கரிங் செய்திருப்பதாக தகவல்கள் பரவுகின்றன.
பழிவாங்கிய த்ரிஷா
இந்த படத்தில் கணவன் - மனைவியாக அஜித் - த்ரிஷா வரும் நிலையில், அஜித்திடம், த்ரிஷா விவாகரத்து கேட்பார். இதற்கு அர்ஜுன் உதவியை அவர் நாடியிருப்பது தெரிய வரும். இதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்ய திருப்பங்கள் படத்தின் கதையாக உள்ளது.
இந்த காட்சியை பார்த்த பலரும் இது மங்காத்தா பார்ட் 2 போல் இருப்பதாகவும், 13 வருடங்கள் கழித்து அஜித்தை ஒரு வழியாக த்ரிஷா பழிவாங்கிவிட்டதாகவும் பலரும் கருத்துகளை பகிர்ந்தனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா படத்தில் தனது பிரண்ட் அர்ஜுன் ஐடியாப்படி த்ரிஷாவை காதலிப்பது போல் நடிப்பார் அஜித். ஆனால் த்ரிஷா நிஜமாகவே அவர் காதலிப்பார்.
இதையடுத்து தற்போது விடாமுயற்சி படத்தில் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டதாக காட்டப்பட்டும் நிலையில், இந்த முறை மீண்டும் அர்ஜுன் உதவியுடன் அஜித்தை, த்ரிஷா ஏமாற்றுவது போல் காட்சி அமைந்துள்ளது. இதனை சோசியல் மீடியாவில் பதிவுகளாக வெளியிட்டு வந்தனர்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்