Actress Trisha: “உங்களால ஒன்னு முடியலன்னா” .. விஜய் ரிலேஷன்ஷிப் வதந்திக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா!-actress trisha reply to suchitra and relationship rumours with thalapathy vijay - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Trisha: “உங்களால ஒன்னு முடியலன்னா” .. விஜய் ரிலேஷன்ஷிப் வதந்திக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா!

Actress Trisha: “உங்களால ஒன்னு முடியலன்னா” .. விஜய் ரிலேஷன்ஷிப் வதந்திக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 04, 2024 09:02 AM IST

Actress Trisha: விஜய், த்ரிஷா குறித்து பல்வேறு வதந்திகள் உலா வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக த்ரிஷா பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்

Actress Trisha: “உங்களால ஒன்னு  முடியலன்னா” .. விஜய் ரிலேஷன்ஷிப் வதந்திக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா!
Actress Trisha: “உங்களால ஒன்னு முடியலன்னா” .. விஜய் ரிலேஷன்ஷிப் வதந்திக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா!

பிறந்த நாள் வாழ்த்து

இதற்கிடையே த்ரிஷா விஜயுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னார். கூடவே, த்ரிஷாவின் இன்னொரு புகைப்படமும் வைரல் ஆனது. அதில் ஒருவரின் ஷூ இடம் பெற்று இருந்தது. இந்த நிலையில், அந்த ஷுவானது நடிகர் விஜய் உடையதுதான் என வட்டமிட்டு போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. 

இதற்கு கூடவே பாடகியான சுசித்ரா, விஜய் த்ரிஷாவிடம் இருந்து விலகி, சங்கீதாவிடம் இணைந்து வாழ வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த கருத்து கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறைமுக பதிலடி 

இந்த நிலையில் இதற்கெல்லாம் மறைமுக பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை திரிஷா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவிட்டு, பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார் 

அந்த பதிவில், "  உங்களை ஏதாவது ஒன்று,அணிய முடியாமல் தடுத்தால், அது முழுக்க முழுக்க பிற மக்களின் கருத்துகள் கொண்ட எடைதான்" என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

விஜய் த்ரிஷா உறவு உண்மையா? என்பது குறித்துபத்திரிகையாளர் ராஜகம்பீரன் ஆகாயம் சினிமாஸ் சேனலுக்கு பேசினார்.

 

இது குறித்து அவர் பேசும் போது, “இன்றைய தினத்திற்கு த்ரிஷாவிற்கு 41 வயது ஆகிவிட்டது. நம்ம ஊர்களில், சராசரியாக இந்த வயது பெண்களுக்கு, 20 வயதில் ஒரு மகள் இருப்பார். ஆனால் இங்கு சினிமா கலைஞர்கள், தங்களது இளமையை பாதுகாத்துக் கொள்ள, தங்களது நட்சத்திர அந்தஸ்தை நிலை நிறுத்திக் கொள்ள குறைந்த அளவில் உணவு எடுத்துக்கொண்டு, மிகப்பெரிய விலை கொடுத்து, தங்களுடைய இளமையை பாதுகாத்து வருகின்றனர்.

விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டார். அவர் எம்ஜிஆர் ஆக உருவெடுப்பார் என்று ரசிகர்கள் கூறிவரும் நிலையில், எம்ஜிஆருக்கு எப்படி ஒரு ஜெயலலிதா இருந்தாரோ, அப்படியான இடத்தில் திரிஷா வருவார் என்று, மிகவும் கற்பனை வளத்தோடு கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் நடிகர்,நடிகைகளுக்கு காதல் கிசுகிசுக்களை தயாரிப்பாளர்கள்தான் பரப்புவார்கள். காரணம் என்னவென்றால், அந்த செய்தி உண்மைதானா என்று தெரிந்து கொள்ள, ரசிகர்கள் மீண்டும் மீண்டும் அந்த நடிகர்கள் நடித்த படத்தை பார்க்க வருவார்கள்.

தயாரிப்பாளர்களின் உத்தி

படத்தை பார்க்கும் அவர்கள், உண்மையிலேயே இவர்கள் காதலிக்கிறார்களோ என்று நினைத்து, மீண்டும் படத்தை பார்ப்பார்கள். இது பலமுறை, பல படங்களின் வெற்றிக்கு உதவி இருக்கிறது. விஜய்க்கு தற்போது 20 வயதில் மகன் இருக்கிறார். அவருக்கும் 50 வயது ஆகிவிட்டது. 50 வயது என்பது இந்த காலகட்டத்தில், ஆயுள் காலத்தில், இரண்டு பாகங்களின் முடிவு என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி பார்க்கும் பொழுது விஜய் இன்னும் ஒரு பாக வாழ்க்கை மட்டுமே வாழ இருக்கிறார்.

கோட் படத்தில் திரிஷா ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அதனால், அவர் அடிக்கடி விஜயுடன் ஸ்டில்ஸ் எடுக்கிறார். பொதுவாகவே, படப்பிடிப்பில் கண்டினியூட்டி மிஸ்ஸாக கூடாது என்பதற்காக, கால், முகம் கை என பல இடங்களை போட்டோகிராஃபர்கள் படம் எடுத்து வைத்துக் கொள்வார்கள். அப்படி எடுத்த படங்களை, நடிகர் நடிகைகளிடமும் கொடுப்பார்கள். அதை வைத்து இவர்கள் கேம் ஆடுகிறார்கள். அதை, இந்த சமூக வலைதள வாசிகளும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது அவரவர்களின் சந்தோஷம்” என்று பேசினார்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.