'என் வாழ்க்கையே ஜீரோ ஆகிடுச்சி.. ஒரு அம்மாவா என் இழப்பு ரொம்ப பெருசு' - சுக்குநூறாக உடைந்து போன த்ரிஷா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'என் வாழ்க்கையே ஜீரோ ஆகிடுச்சி.. ஒரு அம்மாவா என் இழப்பு ரொம்ப பெருசு' - சுக்குநூறாக உடைந்து போன த்ரிஷா

'என் வாழ்க்கையே ஜீரோ ஆகிடுச்சி.. ஒரு அம்மாவா என் இழப்பு ரொம்ப பெருசு' - சுக்குநூறாக உடைந்து போன த்ரிஷா

Malavica Natarajan HT Tamil
Dec 25, 2024 01:16 PM IST

தன் மகன் ஜோரோ, கிருத்துமஸ் தினமான இன்று உயிரிழந்ததாக த்ரிஷா தெரிவித்துள்ளார்.

'என் வாழ்க்கையே ஜீரோ ஆகிடுச்சி.. ஒரு அம்மாவா என் இழப்பு ரொம்ப பெருசு' - சுக்குநூறாக உடைந்து போன த்ரிஷா
'என் வாழ்க்கையே ஜீரோ ஆகிடுச்சி.. ஒரு அம்மாவா என் இழப்பு ரொம்ப பெருசு' - சுக்குநூறாக உடைந்து போன த்ரிஷா

பிஸியான நடிகை

நடிகர் விஜய்யின் லியோ, கோட் படத்தில் நடித்திருந்த த்ரிஷா அடுத்தபடியாக, நடிகர் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வந்தார். முன்னதாக இயக்குநர் மணிரத்தினத்தின் தக் லைஃப் படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்புகளை முடித்த பின் தற்போது நடிகர் சூர்யாவின் 45வது படத்தின் படப்பிடிப்புகளில் ஈடுபட்டுள்ளார். விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகன் இறந்துவிட்டான்

இந்நிலையில், த்ரிஷா கிருத்துமஸ் நாளான இன்று தன் மகன் இறந்துவிட்டதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். விலங்குள் மேல் மிகவும் பிரியம் கொண்ட த்ரிஷா பீட்டா அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். இதன் மூலம் பல விலங்குகளுக்கு மறுவாழ்வையும் அவர் கொடுத்துள்ளார்.

அப்படி இருக்கையில், த்ரிஷா கடந்த 2012ம் ஆண்டு முதல் ஜோரோ எனும் நாயை தன் செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார். அவ்வப்போது ஜோரோவுடன் இருக்கும் புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்.

வாழ்க்கையின் அர்த்தம் போய்விட்டது

இந்நிலையில், த்ரிஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனது மகன் ஜோரோ கிறிஸ்துமஸ் தினமான இன்று அதிகாலையில் காலமானார். இதன்மூலம் என்னை நன்கு அறிந்தவர்களுக்கு இனிமேல் என் வாழ்க்கையின் அர்த்தம் பூஜ்ஜியம் என்று தெரியும். ஜோரோவின் மறைவால் நானும் எனது குடும்பமும் உடைந்து அதிர்ச்சியில் உள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, ஜோராவின் புகைப்படங்களை எல்லாம் பதிவிட்டார். அந்தப் புகைப்படங்களுடன் ஜோரோவின் இறுதி அஞ்சலி செலுத்திய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த த்ரிஷாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். த்ரிஷாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்றும். கவலைப்பட வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது காதலர் ஆண்டனி தட்டிலை கடந்த டிசம்பர் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் கோவாவில் இந்து முறைப்படி நடைபெற்றது

கீர்த்தி திருமணத்தில் த்ரிஷா

கோவாவில் நடைபெற்ற கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரவிக்கப்பட்ட நிலையில், இந்த திருமணத்தில் நடிகர் விஜய்யும் த்ரிஷாவும் பங்கேற்றனர். இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளான நிலையில், தற்போது இவர்கள் இருவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்தது தான் எங்கு பார்த்தாலும் செய்தியாக இருந்துவந்தது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.