Actress Trisha: ஷ்ஷப்பா.. டாக்சிக் மக்கள்.. கடுப்பான த்ரிஷா.. காரணம் தேடி அலையும் நெட்டிசன்ஸ்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Trisha: ஷ்ஷப்பா.. டாக்சிக் மக்கள்.. கடுப்பான த்ரிஷா.. காரணம் தேடி அலையும் நெட்டிசன்ஸ்..

Actress Trisha: ஷ்ஷப்பா.. டாக்சிக் மக்கள்.. கடுப்பான த்ரிஷா.. காரணம் தேடி அலையும் நெட்டிசன்ஸ்..

Malavica Natarajan HT Tamil
Published Apr 11, 2025 04:22 PM IST

Actress Trisha: நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் டாக்சிக் மக்கள் பற்றி தெரிவித்த கருத்துகள் சோசியல் மீடியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Actress Trisha: ஷ்ஷப்பா.. டாக்சிக் மக்கள்.. கடுப்பான த்ரிஷா.. காரணம் தேடி அலையும் நெட்டிசன்ஸ்..
Actress Trisha: ஷ்ஷப்பா.. டாக்சிக் மக்கள்.. கடுப்பான த்ரிஷா.. காரணம் தேடி அலையும் நெட்டிசன்ஸ்.. (instagram)

த்ரிஷாவால் பற்றி எரியும் சோசியல் மீடியா

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு காட்டமான கருத்தை பதிவிட்டதன் மூலம் த்ரிஷா சோசியல் மீடியா மத்தியில் பேசுபொருளாகியுள்ளார். அதுமட்டுமின்றி, த்ரிஷா தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் தெரிவித்த கருத்தால் நெட்டிசன்களே அவர் அவர் விருப்பத்திற்கும் யூகத்திற்கும் தகுந்தார் போல த்ரிஷாவை வைத்து பேசி வருகின்றது.

த்ரிஷா காட்டம்

சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய நடிகையாக வலம்வரும் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “ஷ்ஷப்பா… டாக்சிக் மக்களே... நீங்கள் எப்படி வாழ்க்கை நடத்துகிறீர்கள் அல்லது எப்படி உங்களால் நிம்மதியாக தூங்க முடிகிறது? சமூக வலைத்தளத்தில் அமர்ந்து மற்றவர்களைப் பற்றி அர்த்தமற்ற விஷயங்களைப் பதிவிடுவது தான் உங்கள் நாளைச் சிறப்பாக்குகிறதா?

த்ரிஷா இன்ஸ்டாகிராம் ஸ்டோரி
த்ரிஷா இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

உங்களுக்காகவும், உங்களுடன் வாழும் அல்லது உங்களைச் சுற்றி இருக்கும் மக்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கு மிகவும், மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதெல்லாம் துணிச்சலற்ற கோழைத்தனமான செயல்! கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்!” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

குட் பேட் அக்லி படத்தில் பிரச்சனையா?

இந்த பதிவு 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியான பின்னர் வந்துள்ளது. அஜித் தனது கதாப்பாத்திரத்திற்கு நியாயம் செய்திருப்பதாக பாராட்டுகளைப் பெற்றுள்ள நிலையில், த்ரிஷாவின் கதாப்பாத்திரத்தை சிலர் கிண்டல் செய்து விமர்சித்தனர், இதனால், அவர் சோசியல் மீடியாவில் கிண்டலும் செய்யப்பட்டார். இதனால் அவர் அப்படி பேசியிருக்கலாம் என ஒரு தரப்பு கூறுகிறது.

இஷ்டத்திற்கு பேசும் மக்கள்

த்ரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் 'குட் பேட் அக்லி' படத்தைப் பற்றி குறிப்பிடவில்லை என்றாலும் அந்தப் படத்தால் ஏற்பட்ட காரணம் தான் இது என கூறுகின்றனர். அத்துடன் இதில் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் இருப்பதால், பலரும் இஷ்டத்திற்கு ஒரு கதை கூறி த்ரிஷாவை பற்றி பேசி வருகின்றனர்.

'குட் பேட் அக்லி' பற்றி

அஜத் குமார், த்ரிஷா, சிம்ரன், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, கார்த்திகேயா தேவ், பிரபு, பிரியா பிரகாஷ் வாரியர், சுனில், ராகுல் தேவ், ரெடின் கிங்ஸ்லி மற்றும் ரகுராம் ஆகியோரும் 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். விஜய் வேலுகுட்டி மற்றும் அபினந்தன் ராமனுஜம் முறையே படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவுப் பணிகளைச் செய்துள்ளனர்.

6வது முறை கூட்டணி

'குட் பேட் அக்லி' த்ரிஷா அஜித் உடன் இணைந்து பணியாற்றும் ஆறாவது படம் ஆகும். இவர்கள் இருவரும் ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் மற்றும் விடாமுயற்சி போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.