Tejuashwini: ‘தொந்தரவை சந்திக்காத பெண் உண்டா.. அந்த லிஸ்ட் பெரிசு’ -தேஜஸ்வினி!
எனக்கு டான்ஸ் ரொம்ப பிடிக்கும். ‘அஸ்கு மாறோ’ எனக்கு பெயர் வாங்கித் தந்தது. எப்பவுமே தொடங்குனதை மறக்க கூடாது. அதனால், ஆல்பம் சாங்ஸ் பண்றேன்.
அழகு, நடனம், நடிப்பு என எல்லாம் கலந்த கலவையாக பேசப்படும் நடிகையாக இருப்பவர் தேஜஸ்வினி. ஆல்பம் பாடல்கள், படங்கள் என இரு குதிரை சவாரியில் பயணித்து வரும் அவர், இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி இதோ:
ட்ரெண்டிங் செய்திகள்
‘‘இந்த மாதிரி கதாபாத்திரம் பண்ணவே மாட்டேன் என்று எதுவுமே இல்லை. நடிப்பு தானே, அதில் இது, அது என்று என்ன இருக்கிறது. என்னை பொறுத்தவரை போல்டான கதாபாத்திரம் என்றால், அது போலீஸ் கதாபாத்திரம் தான். அதை நான் செய்வேன். ‘அடல்டு’ கன்டண்ட் கண்டிப்பா பண்ண மாட்டேன்.
எல்லாருக்குமே நல்லது, கெட்டது என்கிற இரு முகங்கள் இருக்கிறது. என் வாழ்க்கையில் எனக்கு எதுவுமே கஷ்டப்படாமல் கிடைக்கவில்லை. அதுக்கு ஒரு தனி இன்டர்வியூ வைத்தால், அந்த லிஸ்ட் பெரிதாக இருக்கும். எல்லாமே கஷ்டப்பட்டு தான் கிடைத்தது.
என்னிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவங்களை நான் சந்தித்திருக்கிறேன். நான் மட்டுமல்ல, எந்த பெண் தான் சந்திக்காமல் இருந்திருப்பாள்? நல்லவேளை, சினிமாவில் வந்து எனக்கு அந்த மாதிரி அனுபவம் ஏற்படவில்லை. அது கடவுள் அருள் தான்.
சினிமாவுக்குள் வந்தாலே அதை எதிர்கொள்ள வேண்டும் என்று பேச்சு உள்ளது. ஆனால், எனக்கு இதுவரை அந்த மாதிரி பிரச்னைகளை வரவில்லை. நான் இதுவரை நல்ல அணியுடன் பணியாற்றியிருக்கிறேன். எனக்கு எந்த பிரச்னையும் அவர்களால் வந்ததில்லை.
இதுக்கு முன் சின்ன சின்ன பணிகளை செய்திருக்கிறேன். அங்கு நான் நிறைய பிரச்னைகளை சந்தித்திருக்கிறேன். சினிமாவில் இல்லை. ப்ளாக்ஷிப்பில் இருந்த போது சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததால், அதன் பின் நான் அங்கு பணியாற்றவில்லை. ஃப்ரிலான்சராக தான் அங்கு பணியாற்றினேன். வாய்ப்பு வந்ததும், இங்கு வந்துவிட்டேன்.
எனக்கு பட வாய்ப்பு இல்லை என்று சொல்வது தவறு. என் படம் வெளியாகி ஒரு ஆண்டு தான் ஆகிறது. இப்போது இரண்டாவது படம். இன்னும் இரண்டு படங்கள் கையில் இருக்கிறது. எனக்கு எந்த பிரச்னையும் இல்லை, நான் நன்றாக தான் இருக்கிறேன். நானும் கத்துக்க வேண்டும் இல்லையா? ஒரு படம் முடித்தபின், நான் கற்றுக்கொண்டேன். அடுத்தடுத்து படங்களில் பண்ணுவதை விட, கற்றுக்கொண்டு பண்ண வேண்டும் என்பது என் பார்வை.
எனக்கு டான்ஸ் ரொம்ப பிடிக்கும். ‘அஸ்கு மாறோ’ எனக்கு பெயர் வாங்கித் தந்தது. எப்பவுமே தொடங்குனதை மறக்க கூடாது. அதனால், ஆல்பம் சாங்ஸ் பண்றேன். எனக்கு பிடித்த நடிகர் என்றால், அது அஜித் சார்’’
என்று அந்த பேட்டியில் தேஜஸ்வினி கூறியுள்ளார்.