தமன்னா பிரேக் அப்: காதலரை பிரிந்த தமன்னா! மிங்கிளில் இருந்து சிங்கிள் ஆன மில்கி ப்யூட்டி!
தமன்னா பிரேக் அப்: நடிகை தமன்னா, நடிகர் விஜய் வர்மாவுடனான காதலை முறித்துக் கொண்டார் என்ற தகவலை அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறி உள்ளதாக தகவல் வைரலாக பரவி வருகிறது.

தமன்னா பிரேக் அப்: சினிமா துறையில் மற்றொரு ஜோடி திருமணம் வரை செல்லாமல் தற்போது பிரிந்துள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. அதாவது நடிகை தமன்னா மற்றும் நடிகர் விஜய் வர்மா ஜோடி காதலித்து வந்த நிலையில், அவர்கள் பிரேக் அப் செய்ததாக மணி கண்ட்ரோல் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்த இவர்கள் இருவரும் பிரிந்துள்ளதாக அவர்களது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த ரிப்போர்ட் கூறுகிறது.
தமன்னா, விஜய் பிரேக் அப்
நடிகர்களான தமன்னா, விஜய் வர்மா காதல் கதை சில ஆண்டுகளாக சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் சில காலம் ரகசியமாக டேட்டிங் செய்த பின்னர், அவர்கள் காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர். அவர்களது திருமணம் விரைவில் நடைபெறும் என்று செய்திகளும் வெளியாகின. ஆனால் எதிர்பாராத விதமாக இவர்கள் இருவரும் பிரிந்துள்ளதாக செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க: ஆண்டி ஆன தமன்னா.. அடித்து அமைதியாக இருக்க அறிவுரை..