Tamannaah Bhatia: 'ஃபேஷன் தான் என் குறையை போக்கும் ஆயுதம்.. இது ஒரு அதிகாரத்தையும் தரும்'- தமன்னா
Tamannaah Bhatia: நடிகை தமன்னா தன்னை ஆளுமையாக காட்டிக் கொள்ளவும், தன்னிடம் உள்ள சில குறைகளை மறைக்கவும் ஃபேஷனை எப்படி பயன்படுத்துகிறார் என விளக்கமளித்துள்ளார்.

Tamannaah Bhatia: தென்னிந்திய சினிமா ரசிகர்களால் மட்டுமில்லாமல், பாலிவுட்டிலும் தனக்காந அடையாளத்தை பதித்து ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார் நடிகை தமன்னா. தற்போது இவர் தொடர் பாலிவுட் வாய்ப்புகளால் அதிகம் தென்மாநில மொழி படங்களில் நடிப்பதில்லை.
இந்நிலையில், தமன்னா தன்னுடைய பேஷன் பற்றியும், தனக்கான உடைகளையோ, மேக்கப்களையோ அவர் எப்படி தேர்ந்தெடுக்கிறார், அது அவருக்கு எவ்வாறு உத்வேகம் அளிக்கிறது என்றும் சமீபத்தில் நடந்த உரையாடல் நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.
எல்லாமே பொருத்தம் தான்
தமன்னாவை ஒரு அற்புதமான ஃபேஷன் ஐகான் என்று நிச்சயம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அழகிய புடவையில் இருந்தாலும் சரி, ஜீன்ஸில் இருந்தாலும் சரி, அல்லது ஸ்டைலிஷான மினி டிரஸில் இருந்தாலும் சரி, ஒவ்வொரு உடையும் அவருக்குப் பொருத்தமாக இருக்கும். அப்படி இருப்பவர் தி மாசூம் மினாவாலா ஷோவில் நடந்த சமீபத்திய உரையாடலில், என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்.
சுயத்தை கண்டுபிடிக்க தாமதமானது
தமன்னா தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கால வாழ்க்கையைப் பற்றி சிந்தித்து, தன் மீதே நம்பிக்கை வைக்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது என்றார். ஆரம்பத்தில், மற்றவர்களின் கருத்துகளால் தான் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், படிப்படியாக தன் சுய அடையாளங்களும் அதனை வெளிப்படுத்தும் திறனும் தான் உண்மையான தன்மையின் சாவி என்பதை உணர்ந்ததாகவும் அவர் கூறினார்.
ஃபேஷன் அதிகாரம் அளிக்கும்
“எனக்குள் நிறைய விஷயங்களை ஃபேஷன் மூலம் கண்டுபிடித்தேன். ஃபேஷன் மூலம் எனது பல குறைபாடுகளையும் சமாளித்தேன். இது என்னை நானே ஏற்றுக்கொள்ளவும் உதவியது. இதை நான் சொல்வதற்கு விசித்திரமாக இருக்கலாம், ஆனால் இது தான் எனக்கு மிகவும் அதிகாரமளிக்கும் தன்மையாக பார்க்கிறேன் என நினைக்கிறேன்.
நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் ஃபேஷன் தங்களுக்கு மிகவும் அதிகாரமளிக்கும். மற்றவர்களின் கருத்துகளை விட என் சொந்த எண்ணங்கள் மற்றும் யோசனைகளை நான் பயன்படுத்திய ஒவ்வொரு முறையும், நான் போதுமான அளவு நல்லவள் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியது” என்று அவர் கூறினார்.
ஃபேஷன் ஐகானாக தேவையில்லை
ஒவ்வொரு நடிகரும் ஒரு ஃபேஷன் ஐகானாகவும் இருக்க வேண்டும் என்ற பாரம்பரியக் கருத்தை நான் சொல்லவில்லை. ஸ்டைல் என்பது ஒருவரின் ஆளுமையின் நீட்சியாக இருக்க வேண்டும். இந்திய திரைப்படத் துறையில், எப்போதும் நன்கு அலங்காரம் செய்ய வேண்டிய அழுத்தம் அதிகமாக இருக்கிறது.
ஷ்ரத்தாவை கவனித்துக் கொண்டே இருப்பேன்
நம் அனைவருக்கும் வெவ்வேறு திறன்கள் உள்ளன, மேலும் ஃபேஷன் என்பது உங்களுக்கு உண்மையாகவே பிடித்த ஒன்றாக இல்லாவிட்டால், அது ஒரு கடமையாக ஆகிவிடும். அதனை நாம் அப்படி உணரக்கூடாது. ஷ்ரத்தா கபூரின் ஃபேஷன் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எப்படி உடை அணிகிறார் என்பதை நான் உன்னிப்பாக கவனிப்பேன்.
ஷ்ரத்தா கபூர் மிகவும் எளிமையானவர், ஒரு சாதாரண டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து அசத்தலாக இருப்பாள்; அது அவளுடைய ஆளுமை, ஃபேஷன் என்பது ஸ்டைலிஷான ஆடைகளை அணிவதை விட அதிகம்; அது சுய கண்டுபிடிப்பு, நம்பிக்கை மற்றும் தனிப்பட்ட அதிகாரமளிப்பு ஆகியவற்றின் பயணமாக இருக்கும் என்றார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்