Item Song: மீண்டும் ஐட்டம் பாடலில் தமன்னா.. ஆளைக் கொல்லும் நடனம்.. கொண்டாடும் ரசிகர்கள்..
Item Song: ரெய்ட் 2 படத்தின் ‘நஷா’ எனும் பாடலுக்காக தமன்னா மீண்டும் ஐட்டம் பாட்டு ஒன்றிற்கு நடனமாடியுள்ள நிலையில், அந்தப் பாடல் தான் யூடியூபிலும் எக்ஸ் தளத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Item Song: நடிகர்கள் அஜய் தேவ்கன் மற்றும் ரிதேஷ் தேஷ்முக் ஆகியோர் நடித்துள்ள படம் ரெய்ட் 2. இந்தப் படத்தில் நடிகை தமன்னா ஒரு பாடலுக்கு மட்டும் சிறப்பு நடனமாடி உள்ளார். ‘நஷா’ எனப் பெயரிடப்பட்ட அந்தப் பாடல் தற்போது ரெய்டு 2வில் இருந்து வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் தமன்னா தனது ரசிகர்களுக்காக அழகான நடனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
குடிகாரர்களுக்கு மத்தியில் ஆட்டம்
இந்தப் பாட்டில் அனைவரும் பாட்டிலைப் பிடித்து குடிப்பது போலவும், அவர்களுக்கு இடையில் தமன்னா அற்புதமாக நடனமாடுவது போலவும் பாடல் அமைந்துள்ளது. இந்தப் பாடல் வெளியானது முதலே இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், சிலர் இந்தப் பாடல் தமன்னாவின் முந்தைய ‘ஸ்ட்ரீ 2’ படத்தின் ‘ஆஜ் கி ராத்’ பாடலைப் போல இல்லை எனக் கூறினாலும் இந்தப் பாடலின் நடன அசைவுகள் மூலம் தமன்னா பலரையும் சுண்டி இழுத்துள்ளதாக பலரும் கூறுகின்றனர்.
யூடியூபில் ஆதிக்கம்
தமன்னாவின் இந்தப் பாடல் தான் இப்போது யூடியூப்பை ஆதிக்கம் செய்து வருகிறது. இந்தப் பாடலில் தமன்னாவின் கவர்ச்சியான நடனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அவரது பெல்லி டான்ஸ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்தப் பாடலுக்கு ஜானி வரிகள் எழுதியுள்ளார். ஜாஸ்மின் சாண்ட்லாஸ், சச்சேத் தண்டன், திவ்யா குமார் மற்றும் சுமோன்டோ முகர்ஜி ஆகியோர் பாடியுள்ளனர்.
ஐட்டம் பாடலுக்கு ஆடும் தமன்னா
கடந்த சில ஆண்டுகளில் தமன்னா பல வெற்றிகரமான ஐட்டம் சாங்குகளில் நடித்து பிரபலமடைந்துள்ளார். 2023ல் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடலில் தோன்றினார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இந்தப் பாடலின் ஹுக் ஸ்டெப் வைரலானது. சச்சின்-ஜிகர் இசையமைத்த ‘ஆஜ் கி ராத்’ ஐட்டம் சாங் இன்னும் பிரபலமாக உள்ளது.
முன்னதாக ஜெயிலர் படத்தில் தமன்னா ஐட்டம் பாடலுக்கு நடனமாடி ஹிட்டடித்த நிலையில், தொடர்ச்சியாக அவரை ஐட்டம் பாடலுக்கு மட்டும் அழைத்ததால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அன்னப்பறவை நடனம்
தற்போது வெளியாகியுள்ள ரெய்ட் 2 படத்தின் ‘நஷா’ பாடலுக்கு நெட்டிசன்கள் பலவிதமாகக் கருத்து தெரிவித்துள்ளனர். “அவரது நடனம் நம்மை கொன்றுவிடும்”, “நீங்கள் ஒரு அன்னப்பறவை போல நடனமாடுகிறீர்கள். இந்தப் பாடல் அருமையாக உள்ளது”, “அவரைப் பார்க்கும்போது நான் மயங்கிவிடுவேன். அவரது அழகு, நடனம்… அற்புதம்…” எனப் பலர் பாராட்டியுள்ளனர்.
பெரிதாக ஒன்றும் இல்லை
ஆனால், சிலருக்கு இந்த நடனம் அவ்வளவு சிறப்பாக இல்லை எனத் தோன்றுகிறது. தமன்னாவின் முந்தைய ‘ஆஜ் கி ராத்’ பாடலை விட இது சிறப்பாக இல்லை எனக் கூறுகின்றனர். “இந்த நடனத்தின் தோற்றமும், அவரது அசைவுகளும் ‘ஆஜ் கி ராத்’ பாடலைப் போலவே உள்ளது”, “தமன்னா எப்போதும் போல அழகாக இருக்கிறார். ஆனால், இந்தப் பாடல் மோசமாக உள்ளது. ‘ஆஜ் கி ராத்’ பாடல் தான் அருமையாக இருந்தது”, “‘ஆஜ் கி ராத்’ பாடலை விட சிறந்த நடனம் எதுவும் இல்லை” எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரெய்ட் 2 படம்
ரெய்ட் 2 படத்தின் முதல் பாடல் ‘நஷா’. இயக்குனர் ராஜ்குமார் குப்தா இயக்கியுள்ள இந்தக் குற்றத் திரில்லரில் அஜய் தேவ்கன் ஐஆர்எஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ரிதேஷ் தேஷ்முக் வில்லனாக நடித்துள்ளார். இலியானா டிகுரூஸுக்குப் பதிலாக அஜய் தேவ்கனின் மனைவியாக வாணி கபூர் நடித்துள்ளார். இந்தப் படம் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

டாபிக்ஸ்