Nayanthara Vs Tamannaah: நோ சொன்ன நயன்தாரா.. ரோட்டிலேயே ட்ரெஸ் மாற்றிய தமன்னா.. வெளிவந்த ஷாக் நியூஸ்..
Nayanthara Vs Tamannaah: நயன்தாரா நோ சொன்ன படத்தில் நடித்தது மட்டுமின்றி, அந்த படத்திற்காக ரோட்டிலேயே ட்ரெஸ் மாற்றி சம்பவம் செய்திருக்கிறாராம் நடிகை தமன்னா. இந்த விஷயத்தை கேட்டு ரசிகர்கள் தமன்னாவின் டெடிகேஷன் லெவலுக்கு ஹார்ட் விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Nayanthara Vs Tamannaah: தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் மில்கி பியூட்டி என ரசிகர்களால் கொண்டாடப்படும் தமன்னா. பாலிவுட்டிலும் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள இவர் தமிழில் 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பின், வியாபாரி, கல்லூரி படிக்காதவன், அயன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார். இதன் மூலம் தமன்னாவிற்கு தனது பயணத்தைத் தொடங்கி ஐந்து ஆண்டுகளிலேயே தமிழ் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகமாகினர்.
முன்னணி நடிகை
அயன் படத்தில் நடிகர் சூர்யாவுடன் சேர்ந்து ஹிட் கொடுத்த தமன்னா, அதன்பின் சில நாட்களிலேயே அவரது தம்பி கார்த்திக்கு ஜோடியானார். லிங்குசாமி இயக்கிய பையா திரைப்படம் தான் அது. இந்தப் படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னும், அப்படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் காட்சிகளும் எவ்வளவு ஹிட் ஆகின என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
நடிக்க மறுத்த நயன்தாரா
ஆனால், அந்த பையா திரைப்படத்தில் முதலில் தமன்னாவுக்கு பதிலாக நயன்தாராவை தான் தயாரிப்பாளர்கள் நினைத்தார்களாம். ஆனால், ஏற்கனவே முன்னணி நடிகையாக இருந்த நயன்தாரா அந்த திரைப்படத்தில் நடிக்க பல நிபந்தனைகளை விதித்தாராம். அதனால் தான் இந்த மாற்றம் ஏற்பட்டது நீண்ட நாட்களுக்கு பின் தெரியவந்தது.
நெடுஞ்சாலைகளில் படப்பிடிப்பு
ரொமாண்டிக் ஆக்ஷன் திரில்லராக உருவான பையா திரைப்படத்தில் சாலைகள், நெடுஞ்சாலைகளில் அதிக காட்சிகள் உள்ளன. எனவே, அவற்றை சாலைகள், நெடுஞ்சாலைகளில் படமாக்க வேண்டியிருந்தது. ஆனால், நயன்தாரா தனக்கு விலையுயர்ந்த ஹோட்டல்களில் தங்கும் வசதி, கேரவன் தேவை என்று கோரிக்கை வைத்தாராம். இது சாலைகளில் படமாக்கப்படும் திரைப்படம் என்பதால், அத்தகைய வசதிகளை ஏற்படுத்த முடியாது என்று தயாரிப்பாளர்கள் கூறினார்களாம்.
சாலையில் உடை மாற்றிய தமன்னா
ஹோட்டல்களில் தங்கினால் படப்பிடிப்புக்கு அதிக செலவாகும் என்பதால், நயன்தாராவுக்கு பதிலாக தமன்னாவை ஹீரோயினாக தேர்வு செய்தார்கள் பையா திரைப்படக்குழு. தமன்னா அவர்களை ஏமாற்றவில்ல. தயாரிப்பு தரப்புக்கு எந்த தொந்தரவும் தராமல் சாலையிலேயே உடை மாற்றினார் என்று ஒரு பேட்டியில் பையா படத்தின் இயக்குனர் லிங்குசாமி கூறினார்.
மூன்று சேலைகளால் சுவர்
சாலையில் படக்குழுவினர் தமன்னாவை மூன்று சேலைகளால் சுவர் கட்டி சூழ்ந்தார்களாம். அந்த சுவர்களுக்குள் உடை மாற்றி படப்பிடிப்புக்கு தயாரானாராம் தமன்னா. அந்த அளவுக்கு தமன்னா ஒத்துழைப்பு கொடுத்தார் என்று பேட்டியில் இயக்குனர் லிங்குசாமி தெரிவித்தார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தமன்னா எவ்வளவு சிறந்தவர் என்று கமெண்ட் செய்துள்ளனர்.
ஓடெலா 2
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமன்னா நடிக்கும் தெலுங்கு திரைப்படம் ஓடெலா 2 படத்தின் டீசர் வெளியாக பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இயக்குனர் சம்பத் நந்தி, அசோக் தேஜா இயக்கியுள்ள இந்தப் படம் ஏப்ரல் 17 அன்று ஓடெல 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில் தமன்னாவுடன் ஹெப்பா படேல், வசிஷ்டா என் சிம்ஹா, முரளி சர்மா, தயானந்த் ரெட்டி, ஸ்ரீகாந்த் அய்யங்கார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

டாபிக்ஸ்