HT Exclusive Interview: ‘அவர்களை சமாதானப்படுத்துவது எனக்கு பட வாய்ப்பினைத் தராது’: நடிகை டாப்ஸி பானு என்ன சொல்கிறார்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ht Exclusive Interview: ‘அவர்களை சமாதானப்படுத்துவது எனக்கு பட வாய்ப்பினைத் தராது’: நடிகை டாப்ஸி பானு என்ன சொல்கிறார்?

HT Exclusive Interview: ‘அவர்களை சமாதானப்படுத்துவது எனக்கு பட வாய்ப்பினைத் தராது’: நடிகை டாப்ஸி பானு என்ன சொல்கிறார்?

Marimuthu M HT Tamil
Jul 30, 2024 01:53 PM IST

HT Exclusive Interview: ‘அவர்களை சமாதானப்படுத்துவது எனக்கு பட வாய்ப்பினைத் தராது’ என நடிகை டாப்ஸி பானு செலிபிரட்டி புகைப்படக்காரருக்கும் தனக்கும் இருக்கும் பிரச்னை குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

HT Exclusive Interview: ‘அவர்களை சமாதானப்படுத்துவது எனக்கு பட வாய்ப்பினைத் தராது’: நடிகை டாப்ஸி பானு என்ன சொல்கிறார்?
HT Exclusive Interview: ‘அவர்களை சமாதானப்படுத்துவது எனக்கு பட வாய்ப்பினைத் தராது’: நடிகை டாப்ஸி பானு என்ன சொல்கிறார்?

இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், நடிகை டாப்ஸி பானு, ஏன் அவர்களை சமாதானப்படுத்துவதில் நம்பிக்கை வைக்கவில்லை என்பது குறித்தும், புகைப்படக்காரர்கள் தனது அறிக்கைகளையும் வீடியோக்களையும் தங்கள் சொந்த வணிக ஆதாயத்திற்காக எவ்வாறு தவறாகப்பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து மனம் திறந்துபேசியுள்ளார், டாப்ஸி பானு. 

எதிர்மறையான செய்திகள் மூலம் அதிகம் கவனம்பெறும் டாப்ஸி:

தன் மீது வரும் எதிர்மறையான செய்திகள் குறித்து மனம் திறந்து பேசிய நடிகை டாப்ஸி பானு, ‘’ என் மீது எதிர்மறையான செய்திகள் வர்றதுவிடுங்க.  பாசிட்டிவ் செய்திகளை யார் கிளிக் செய்கிறார்கள் என்று சொல்லுங்கள்? நீங்கள் கடைசியாக எப்போது ஒரு நேர்மறையான செய்தியைக் கிளிக் செய்தீர்கள்? இப்போது, இந்த வகையான செய்திகள் மிகவும் பரபரப்பானவை. அப்புறம் எப்படி நியூஸ் க்ளிக் பண்ணுவாங்க. இப்படித்தான் பண்ணுவாங்க. 

எனக்கும் பிரபலங்களைப் பின்தொடர்ந்து புகைப்படம் எடுப்பவர்களுக்கும் பிரச்னை இல்லை. ஆனால், அவர்கள் என்னை மோசமானவர்களாகவும் முரட்டுத்தனமானவர்களாகவும் நினைக்கிறார்கள். என்ன நடந்தது. பார்ப்போம் எனக்கருதி என்னுடன் படம் கொடுக்க வாக்குவாதம் செய்கிறார்கள். எனவே,  இந்தக் காணொலிகள் பார்வையாளர்களுக்கு மிகவும் உற்சாகமாக இருக்கும்" என்று டாப்ஸி கூறினார்.

டாப்ஸி பானு ஏன் புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுப்பதில்லை?:

டாப்ஸி பானுவிடம் ஏன் புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுக்க விரும்பவில்லை என கேட்கப்பட்டபோது, ‘’இப்படி புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதால், எனக்கு நடிக்க எந்தப் படங்களும் வருவதில்லை. நான் நடித்த எனது படம் தான், என்னைப் பற்றி பிறரிடம் பேசவைக்கின்றது. எனவே, ஊடகங்கள் என்று அழைக்கப்படுபவர்களில் ஒரு பகுதியை நான் சமாதானப்படுத்தவேண்டியதில்லை. நான் அவர்களை நேரடி ஊடகம் என்று கூட அழைக்கமாட்டேன். ஏனென்றால் அவர்கள் தங்கள் சுயநலனுக்கு இப்படி செலிபிரட்டிகளை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்கிறார்கள். யாரோ ஒருவர் தன் இணையதளத்தில் புகைப்படங்களைப் பதிவிடுகின்றனர். நான் அவர்களை ஊடகங்கள் என்று சொல்லமாட்டேன். ஊடகங்கள் அவசர அவசரமாக வரிகளையோ அல்லது வீடியோக்களையோ வெளியிடாது" என்று டாப்ஸி மேலும் கூறினார்.

செலிபிரட்டிகளை இவ்வாறு புகைப்படம் எடுக்க வரும் புகைப்படக்காரர்கள், ‘ தன்னை இவ்வாறு உடல்ரீதியாக மிக நெருங்கும்போது, தனது காரைத் துரத்தும்போது நான் சொன்ன கருத்து சரியானது என்று உங்களுக்குத் தோன்றலாம்’’ என்று நடிகை டாப்ஸி பானு கூறினார்.  

 தனது நிலைப்பாடு குறித்து ஒருபோதும் மன்னிப்புக்கேட்க விரும்பவில்லை என்றும்; தான் ஒரு சாதாரண பெண் என்றும்; என்னுடைய தனியுரிமை மற்றும் உடல் உரிமையை அந்தப் புகைப்படக்காரர்கள் மதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று நடிகை டாப்ஸி பானு தெரிவித்தார். 

நடிகை டாப்ஸியின் அடுத்த படங்கள்:

நடிகை டாப்ஸி பானு, அடுத்து ’பிர் ஹசீன் தில்ருபா’ மற்றும் ’கேல் கேல் மெயின்’ ஆகியப் படங்களில் நடிக்கவுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஆண்கள் பேட்மிண்டன் இரட்டையர் அணியின் பயிற்சியாளராக இருக்கும் தனது கணவர் மத்தியாஸ் போவுக்கு ஆதரவாக அவர் பிஸியான விளம்பரங்களிலிருந்து சிறிது நேரம் ஒதுங்கி பாரிஸுக்குச் சென்றுள்ளார். 

நடிகை டாப்ஸி பானு ஜூலை 29ஆம் தேதி, இரவு தனது இன்ஸ்டாகிராம் கதைகளில் அவரும் அவரது சகோதரி ஷாகுன் பன்னுவும் பிரெஞ்சு தலைநகர் பாரிஸுக்குச் செல்லும் விஸ்தாரா விமானத்தில் அமர்ந்திருக்கும் படத்தைப் பகிர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

டாப்ஸி மற்றும் ஷகுன் பானு பாரிஸ் செல்லும் படம்
டாப்ஸி மற்றும் ஷகுன் பானு பாரிஸ் செல்லும் படம்
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.