'மாடு நாக்கு மூலம் என்னைத் தடவும்.. பிரதீப் ரங்கநாதன்கூட நடிக்க ஆசை’: ஓபனாக பேசிய நடிகை சுவாசிகா
லப்பர் பந்து மூலம் புகழ்பெற்ற நடிகை சுவாசிகா, பிரதீப் ரங்கநாதன்கூட நடிக்க ஆசைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படம் மூலம் அதிகம்பேரால் கவனிக்கப்பட்ட நடிகை சுவாசிகா. தனது வயதை மீறிய கதாபாத்திரத்தில் அநாயசமாக நடித்து இருந்தார். இதனிடையே அவர் இயக்குநர் பாலா சார் படத்தில் நடிக்க ஆசை என்றும்; சரண்யா மேம் கேரக்டரை ரெஃபரன்ஸ் எடுத்து நடித்தேன் என்றும் கூறியிருக்கிறார்.
நடிகை சுவாசிகா, சமீபத்தில் குமுதம் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டி, 2024ஆம் ஆண்டு, செப்டம்பர் 22ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. அதில் தமிழ் சினிமா பற்றி பல்வேறு விஷயங்களைப் பேசியிருக்கிறார்.
அதில், ‘’எனக்கு முதல் படம் 2009ஆம் ஆண்டு, தமிழில் ’வைகை’ தான். இது என்னோட செகண்ட் மேட்ச் மாதிரி தான். கோரிப்பாளையம், சாட்டை பண்ணி ரொம்ப நாள் கழிச்சு, தமிழ் சினிமாவில் நடிக்கிறேன். நினைக்கிற மாதிரி புராஜெக்ட்ஸ் எதுவும் வரலை. அதனால், தமிழில் நடிக்கிறதையே விட்டுட்டேன். அப்போது தான் டைரக்டர் தமிழ் சார் கால் பண்ணி, லப்பர் பந்து மாதிரி ஸ்டோரி இருக்குன்னு சொன்னார். அப்போது தான் என்னோட மலையாளம் மூவி ‘வாஸந்தி’ரிலீஸ் ஆகி இருந்தது.