மறுபடியும் கிசுகிசுவை பற்ற வைத்த நடிகை.. கோர்க்கப்பட்ட கைகள்.. பறந்து வந்த ஹார்ட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மறுபடியும் கிசுகிசுவை பற்ற வைத்த நடிகை.. கோர்க்கப்பட்ட கைகள்.. பறந்து வந்த ஹார்ட்

மறுபடியும் கிசுகிசுவை பற்ற வைத்த நடிகை.. கோர்க்கப்பட்ட கைகள்.. பறந்து வந்த ஹார்ட்

Malavica Natarajan HT Tamil
Published Oct 30, 2024 07:34 PM IST

நடிகை சுனைனா பிரபல யூடியூரை காதலித்து வருவதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது, ஒருவரின் கையை இறுகப் பற்றிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை சுனைனா.

மறுபடியும் கிசுகிசுவை பற்ற வைத்த நடிகை.. கோர்க்கப்பட்ட கைகள்.. பறந்து வந்த ஹார்ட்
மறுபடியும் கிசுகிசுவை பற்ற வைத்த நடிகை.. கோர்க்கப்பட்ட கைகள்.. பறந்து வந்த ஹார்ட்

கதையை தேர்வு செய்து நடிக்கும் சுனைனா

இந்த படத்தையடுத்து அவர் தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார் சுனைனா. அதன் காரணமாக அவர், வம்சம், நீர்ப்பறவை, சமர், சில்லுக் கருப்பட்டி உள்ளிட்ட சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தார். 

இவர் கடைசியாக நடித்த சில்லுக் கருப்பட்டி திரைப்படத்தில் சிறு வயதிலேயே திருமணமாகி குடும்பம் குழந்தை என தனது வாழ்க்கை எல்லையை நிறுத்திய பெண்ணாக நடித்திருப்பார். அந்தப் படத்தில் அவர் பல குடும்பப் பெண்களின் எண்ண ஓட்டங்களின் பிரதிபலிப்பாகவே இருந்திருப்பார். இதனால், இவருக்கென சில ரசிகர்களையும் வைத்திருக்கிறார்.

இந்நிலையில், அவர் ஏபிஜே அப்துல் கலாம் குறித்த டைம் டிராவல் படமான ராக்கெட் டிரைவர் படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்தப் படத்தில் இவர், டிராபிக் போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

மீண்டும் கிசுகிசு

சில நாட்களுக்கு முன் நடிகை சுனைனாவிற்கும், துபாயைச் சேர்ந்த பிரபல யூடியூபர் காலித் அல் அமெரி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது என கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது நடிகை சுனைனா ஹோட்டல் ஒன்றில் ஒருவரின் கையைப் இறுக்கப் பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இதைக் கண்ட பலரும், சுனைனா பிடித்திருப்பது காலித்தின் கை தான் என கமெண்ட் செய்து வரும் நிலையில், காலித்தே அந்தப் பதிவிற்கு கமெண்ட் செய்துள்ளார்.

உறுதி செய்த மக்கள்

அதில் அவர், கைகள் கோர்த்துள்ள எமோஜியையும், ஹார்ட் எமோஜியையும் பதிவிட்டுள்ளார். இதனால், நிச்சயம் சுனைனா கையை பிடித்திருப்பது காலித் தான். இவர்கள் காதல் இதன்மூலமே தெரிகிறது. இவர்கள் பொது வெளியில் காதலை வெளிப்படுத்த தயங்கி வருகின்றனர் என தொடர்ந்து பேசி வருகின்றனர்.

சினிமா தான் முதல் காதல்

சிறுவயதாக இருந்தபோது, வீட்டிற்கு வரும் உறவினர் முன் நடித்து காட்டிய போது தான் எனக்குள் இருந்த திறமையை கண்டுபிடித்தேன். வாழ்க்கையின் மிக கடினமான சூழலிலும் நடிப்பு எனக்கு உதவியது எனக் கூறியிருந்த சுனைனா சினிமா தான் தன் முதல் காதல் என சமீபத்தில் பிஹைண்ட் உட்ஸ்ஸிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருப்பார்.

திருமணம் மீது ஆசை இல்லை

மேலும் அந்தப் பேட்டியில், காதல், திருமணம், லிவிங் டூ கெதர் என்பது அவரவர் தேவைக்கு ஏற்ப மாறுபடும். தனக்கு இப்போது திருமணம் குறித்த எந்த ஆசையும் இல்லை எனக் கூறியிருந்தார். வாழக்கையில் பல இக்கட்டான சூழலைக் கடந்து வந்துள்ளேன். பல துரோகங்களையும் சந்தித்துள்ளேன். தான் எடுக்கும் முடிவு தான் மிகவும் சரியானது எனக் கூறி அதனால் பல எதிர்வினைகளையும் சந்தித்துள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.