தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Sumathi Sree Latest Interview About How To Treat Those Who Misbehave In Kollywood Industry

Sumathi Sree: தப்பான இடத்துல கை வச்சா அவ்வளவுதான்… ரோஜாப்பூல குண்டூசி வச்சு’ - சுமதி ஸ்ரீ!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 24, 2024 06:00 AM IST

கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட வெளியூர்களில் நடிக்கும் பொழுது, அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் தான் வந்து நடிப்பார்கள். அவர்கள் நாடகத்தில் நடிக்கும் பொழுது இந்த கதாநாயகி தான் எனக்கு வேண்டும் என்று சொல்லி கேட்பார்கள்.

நடிகை சுமதி ஸ்ரீ
நடிகை சுமதி ஸ்ரீ

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “ சென்னையை பொறுத்த வரைக்கும் அப்போது நிறைய சபாக்கள் இருந்தன. அதில் என்னை அழைப்பார்கள். நான் அங்கு சென்று நடித்துக் கொடுப்பேன். 

ஆனால் கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட வெளியூர்களில் நடிக்கும் பொழுது, அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் தான் வந்து நடிப்பார்கள். அவர்கள் நாடகத்தில் நடிக்கும் பொழுது இந்த கதாநாயகி தான் எனக்கு வேண்டும் என்று சொல்லி கேட்பார்கள்.

அப்படி நடிப்பதற்காக வந்த ஒருவர், ஒரு குறிப்பிட்ட நடிகையை காண்பித்து, இவருடன் எனக்கு டூயட் சாங் வேண்டும் என்று சொல்லி 3000 ரூபாய் கட்டினார். நாடகம் முடிந்த பின்னர் தான் அந்த விஷயமே எங்களுக்கு தெரியும். 

சில பேர் மிகவும் டீசன்டாக வருவார்கள். நடித்து விட்டு செல்வார்கள். ஆனால் இன்னும் சில பேர் குறும்பு செய்வதற்காகவே நடிக்க வருவார்கள். அந்த மாதிரியான ஆட்களை நாங்கள் முன்னமே கண்டுபிடித்து விடுவோம். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சின்ன ரோஜா பூவில் குண்டூசியை வைத்து கையில் வைத்திருப்போம். 

ஆடுபவர் தவறாக நடந்து கொண்டால், அந்த குண்டூசியை வைத்து நறுக்கென்று குத்தி விடுவோம். அதன் பின்னர் அவர் எங்களிடம் வைத்துக் கொள்ள மாட்டார். 

இதனை நான் என்னுடைய அக்காவிடம் இருந்து கற்றுக் கொண்டேன். அக்கா படத்திற்குச் செல்லும் பொழுது கையில் குண்டு ஊசி அல்லது வேறு ஏதேனும் ஒரு சின்ன கூர்மையான பொருளை எடுத்துச் செல்வார். 

எதற்கு என்றால், தியேட்டரில் இருக்கும் பொழுது பின்னால் இருப்பவர்கள் ஏதாவது நம் மீது கை, காலை வைத்தால் அதை வைத்து குத்தி விட வேண்டியது தான் என்று சொல்வார். அவரிடம் இருந்துதான் நான் இந்த ஐடியாவை எடுத்துக் கொண்டேன்.” என்று பேசினார்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்