தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Sukanya Latest Interview About Ayothi Ramar Temple And Her Ramar Song

Actress Sukanya: ‘ராமர கொண்டாடலனாதான் அது தவறு’ - பாஜகவில் இணைகிறீர்களா? - விளக்கம் கொடுத்த சுகன்யா!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 24, 2024 10:10 AM IST

சிலர் கடவுளை பெரிதாக கும்பிடுவதில்லை என்று சொல்லி விட்டு வீட்டில் பெரிய பூஜை அறைகளை வைத்து கும்பிடுகிறார்கள். அதை பார்க்கும் போது, இவர்களைப் போல் நாமெல்லாம் பெரிதாக கடவுளை கும்பிட வில்லையே என்று தோன்றும்.

நடிகை சுகன்யா!
நடிகை சுகன்யா!

ட்ரெண்டிங் செய்திகள்

திடீரென்று இந்தப்பாடலை உருவாக்கியது ஏன்? என்பது குறித்து சுகன்யா கலாட்டா சேனலுக்கு அண்மையில் பேட்டி கொடுத்திருக்கிறார். 

அந்த பேட்டியில், “ சிறு வயதிலிருந்தே எல்லோரும் அவரது வீட்டில் சாமி கும்பிடுகிறார்கள். ஆகையால் இங்கு கடவுள் நம்பிக்கை என்பது எல்லோருக்கும் இருக்கிறது. இன்றும் சினிமா ஷூட்டிங்கில் முதல் ஷாட்டிற்கு முன்னதாக பூஜை போட்டு தான் தொடங்குகின்றனர். 

சிலர் கடவுளை பெரிதாக கும்பிடுவதில்லை என்று சொல்லி விட்டு வீட்டில் பெரிய பூஜை அறைகளை வைத்து கும்பிடுகிறார்கள். அதை பார்க்கும் போது, இவர்களைப் போல் நாமெல்லாம் பெரிதாக கடவுளை கும்பிட வில்லையே என்று தோன்றும். 

இங்கு அவரவர்களுக்கு தனித்தனி கடவுகள்கள் இருக்கின்றனர். இன்று 500 வருடங்களுக்குப் பிறகு ராமர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.இதை உலகமே கொண்டாடி வருகிறது. இதை நாம் கொண்டாடவில்லை என்றால்தான் தவறு. அதன் முன்னெடுப்புதான் இந்த பாட்டு.” என்றார்.

மேலும் பேசிய அவர்,  “ எனக்கு அரசியலுக்கும் சம்பந்தமில்லை. அரசியலுக்கு வரும் எண்ணம் இதுவரை பிறக்கவில்லை. இனி வருமா என தெரியவில்லை. ” என்று பேசினார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.