தென்னிந்திய சினிமாவின் நாயகி.. நடிப்பு மட்டும் தான்.. வெளியே பார்க்க முடியாத திரை ஓவியம் நடிகை சுஜாதா
நடிகை சுஜாதா உச்ச நடிகையாக இருந்த பொழுதும் அவரை எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பார்க்க முடியாது. தமிழில் அவர் நடித்த கடைசி திரைப்படம் வரலாறு. தெலுங்கில் ஸ்ரீ ராமதாசு என்ற திரைப்படத்தில் கடைசியாக இவர் நடித்திருந்தார். 2011 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார்.

நடிகை சுஜாதா
சினிமா பல புதையல் நிறைந்த வேற்று உலகம். அங்கு அவிழ்க்க முடியாத முடிச்சுகள் எத்தனையோ உள்ளன. பல நடிகர்களின் வாழ்க்கை மர்மமான கதையாக இருந்துள்ளது. அது இப்போதும் தொடர்வது சற்று வருத்தத்துக்குரிய செய்தியாகும்.
காலடி எடுத்து வைத்த முதல் திரைப்படத்தின் கதை போலவே நிஜ வாழ்க்கை ஒருவருக்கு அமைந்ததென்றால் அது நடிகை சுஜாதாவுக்கு மட்டும்தான். இவரைப் பற்றி சினிமா வட்டாரங்களில் உள்ள எவருக்கும் தெரியாது.
ஒரு சிலருக்கு அவரைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இருந்தாலும். அவர்கள் வாய் திறக்க வாய்ப்பே கிடையாது. அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகத்தில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சுஜாதா.