தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Suhasini Shared The Incident Of Rajinikanth Misbehaving With Her

Rajinikanth: ‘எடுத்தேன் பாரு ஓட்டம்’.. அக்காவிற்கு ரூட் விட்ட ரஜினி;கமல் பெயரை சொல்லி ஓட விட்ட சுஹாசினி-சுவாரசிய சம்பவம்

Kalyani Pandiyan S HT Tamil
Jan 03, 2024 07:14 PM IST

அந்த சமயத்தில் நானும், என்னுடைய அக்காவும் பார்க்கிற்கு நடைபயிற்சி செய்வது வழக்கமான ஒன்று. இந்த நிலையில், நானும் அக்காவும் வாக்கிங் செல்வதற்காக சென்று கொண்டிருந்தோம். அப்போது எங்கள் அருகில் கார் ஒன்று வந்தது. எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

சுஹாசினி பேட்டி!
சுஹாசினி பேட்டி!

ட்ரெண்டிங் செய்திகள்

ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பல துறைகளில் இயங்கி வருபவர் நடிகை சுஹாசினி. மணிரத்னத்தின் மனைவியான இவருக்கு கமல் சித்தப்பா என்பது அனைவரும் அறிந்ததே. 

இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர், சினி உலகம் யூடியூப் சேனலில் சீதாவுடானான உடையாடலில் பேசிய அவர் , “ நான் அப்போது 10 வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய அக்கா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். அக்கா மிகவும் அழகாக இருப்பாள்.

அந்த சமயத்தில் நானும், என்னுடைய அக்காவும் பார்க்கிற்கு நடைபயிற்சி செய்வது வழக்கமான ஒன்று. இந்த நிலையில், அங்கு வாக்கிங் சென்று கொண்டிருந்தோம். அப்போது எங்கள் அருகில் கார் ஒன்று வந்தது. எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. 

மெதுவாக கார் கண்ணாடி கீழ் இறங்கியது. உள்ளே நடிகர் ரஜினிகாந்த் இருந்தார். எங்களை யார் என்று தெரியாத அவர், லிப்ஃட் ஏதும் வேண்டுமா என்று கேட்டார். உடனே நான் கமல்ஹாசனின் அண்ணன் மகள் என்று சொன்னதும்தான் மிச்சம்.. விட்டால் போதும் என்று காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டார்.” என்று பேசினார்.

அப்படியே ரஜினிகாந்த் - லதா திருமணம் செய்து கொண்ட கதையையும் படியுங்கள் 

1981ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி லதா,ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணத்தின் போது நடந்த சுவாரசியமான சம்பவங்களை லதா ரஜினிகாந்தின் சகோதரி கணவரும், நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருந்தார். அந்த பேட்டி இங்கே!

அவர் பேசும் போது, “ஒரு நாள் திடீரென்று லதா என்னை அழைத்து, கல்லூரி இதழுக்கு ரஜினிகாந்த் நேர்காணல் வேண்டும் என்று கேட்டார். அந்த சமயத்தில் ரஜினி எனக்கு நல்ல பழக்கம்.

அப்போது தில்லுமுல்லு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போதுதான் நான் முதல் முறையாக லதாவை ரஜினியிடம் அறிமுகப்படுத்தினேன். லதா ரஜினிகாந்தை சந்திக்க வரும்பொழுதே, அவர்தான் தனக்கான கணவர் என்பதை தெளிவாக உறுதிப்படுத்தி விட்டு வந்திருக்கிறார். அதற்கான காரணம் தெரியவில்லை. ரஜினியை பார்க்கும் போது லதாவிற்கு அப்படியான உணர்வு வந்திருக்கிறது.

ரஜினிகாந்திற்கும், அந்த சமயத்தில் நாமும் ஒரு குடும்பமாக மாற வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. லதாவை சந்தித்த போது, அவர் போன்ற ஒரு பெண்தான் தனக்கு மனைவியாக வரவேண்டும் என்று நினைத்திருக்கிறார்.

லதாவும் ரஜினிகாந்தை கல்யாணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் தான் ரஜினிகாந்த் என்னை ஃபோனில் அழைத்து, லதாவை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் என்று சொன்னார்.

நானோ நடிகை லதாவை தான் சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டு, தாராளமாக கல்யாணம் செய்து கொள்ளுங்கள். அவர்களிடமே நேரடியாக பேசுங்கள் என்று சொன்னேன்.

உடனே அவர் கொஞ்சம் நிறுத்தி, நான் உங்களுடைய மனைவியின் சகோதரியான லதாவை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக சொன்னார். இதனையடுத்து இரு குடும்பத்தாரையும் நான் சந்திக்க வைத்தேன்.

இரு குடும்பத்தாரும், ஒருவரை ஒருவர் பேசி தெரிந்து கொண்டார்கள். ரஜினிகாந்த் அந்த சந்திப்பில் மிகவும் வெளிப்படையாக தன்னுடைய நிறை, குறை என அனைத்தையும் கூறினார். அதன் பின்னர் கல்யாணம் நடந்தது” இவ்வாறு அவர் பேசினார்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.