Sri Reddy: ஒலி எழுப்பக்கூடும் ஸ்பீக்கர் வைச்சு பிரார்த்தனை.. ஒரே சித்திரவதை.. வேறு நாட்டில் இல்லை.. ஸ்ரீரெட்டி ஆதங்கம்-actress srireddy felt that praying with a speaker that could make a sound was the only form of torture - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sri Reddy: ஒலி எழுப்பக்கூடும் ஸ்பீக்கர் வைச்சு பிரார்த்தனை.. ஒரே சித்திரவதை.. வேறு நாட்டில் இல்லை.. ஸ்ரீரெட்டி ஆதங்கம்

Sri Reddy: ஒலி எழுப்பக்கூடும் ஸ்பீக்கர் வைச்சு பிரார்த்தனை.. ஒரே சித்திரவதை.. வேறு நாட்டில் இல்லை.. ஸ்ரீரெட்டி ஆதங்கம்

Marimuthu M HT Tamil
Sep 23, 2024 10:25 PM IST

Sri Reddy: ஒலி எழுப்பக்கூடும் ஸ்பீக்கர் வைச்சு பிரார்த்தனை செய்வதால் ஒரே சித்திரவதை என்றும் வேறு நாட்டில் இல்லை எனவும் நடிகை ஸ்ரீரெட்டி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

Sri Reddy: ஒலி எழுப்பக்கூடும் ஸ்பீக்கர் வைச்சு பிரார்த்தனை.. ஒரே சித்திரவதை.. வேறு நாட்டில் இல்லை.. ஸ்ரீரெட்டி ஆதங்கம்
Sri Reddy: ஒலி எழுப்பக்கூடும் ஸ்பீக்கர் வைச்சு பிரார்த்தனை.. ஒரே சித்திரவதை.. வேறு நாட்டில் இல்லை.. ஸ்ரீரெட்டி ஆதங்கம்

ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்டவர், நடிகை ஸ்ரீரெட்டி. கடந்த 2011ஆம் ஆண்டு, 'நேனு நானா அபத்தம்’ என்னும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் ஆனார்.பின் அரவிந்த் 2 மற்றும் ஜிந்தகி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்திருந்தார்.

மிகக்குறைவான படங்களே நடித்தாலும் ஆந்திரா மற்றும் தமிழ் சினிமாவில் நடக்கும் உள்மறைவு வேலைகளை அம்பலப்படுத்தியதற்காக தமிழ் மற்றும் தெலுங்கு மக்களிடையே ரசிகர்களிடையே பரவலாக அறியப்படுகிறார்.

ஆடையைக் கழற்றி போராடிய ஸ்ரீரெட்டி:

கடந்த 2019ஆம் ஆண்டு, தெலுங்கு திரைப்பட சங்கமான, மா முன்பு, தனது மேலாடையைக் களைந்து, போராட்டத்தில் ஈடுபட்டார், ஸ்ரீரெட்டி. தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பல்வேறு தென்னிந்திய நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களைக் குற்றம்சாட்டினார்.

ஸ்ரீரெட்டியின் தொடர்குற்றச்சாட்டுகளால், மனித உரிமைகள் அமைப்பு, தெலங்கானா மாநிலத்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பியது.

நடிகர் விஷால், நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாகப் பல்வேறு புகார்களை வெளிப்படையாக அறிவித்தார்.

மேலும் தெலுங்கு நடிகர்களான நானி, நடிகர் ராணாவின் இளைய சகோதரர் அபிராம், தெலுங்கு இயக்குநர்களான சேகர் கம்முலு, கொரட்டல சிவா, கதாசிரியர் கோனா வெங்கட் உள்ளிட்டப் பலர் மீது செக்ஸ் புகாரை அள்ளி வீசினார், ஸ்ரீரெட்டி. இதற்கு, பலரும் மறுப்புத்தெரிவித்து பேசினர்.

ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவாளரான ஸ்ரீரெட்டி:

இந்நிலையில் சிலநாட்களுக்கு முன் ஸ்ரீரெட்டி, தற்போது சத்தம் இல்லாமல், தனது சொந்த ஊரான ஆந்திர மாநிலத்தில் உள்ள கிராமத்தில் அமர்ந்து, நிறைய வீடியோக்களை யூட்யூப் பக்கம் உருவாக்கி போட்டு வந்தார். அதில் சமையல், லைஃப் ஸ்டைல், ஃபேஷன் என எண்ணற்ற விஷயங்களை தமிழ், தெலுங்கு ரசிகர்களுக்குப் பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், உள்துறை அமைச்சர் அனிதா, சந்திரபாபு நாயுடுவின் மகன் நர.லோகேஷ் ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். ஸ்ரீரெட்டி தனது சமூக வலைதளப்பக்கமான ஃபேஸ்புக்கில் தொடர்ச்சியாக தெலுங்கு தேசம் கட்சியை விமர்சித்து வருகிறார். அவரை 6.1 மில்லியன் மக்கள் ஃபாலோ செய்கின்றனர்.

இந்நிலையில் கர்னூலைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி நாகராஜூ, தெலுங்கு தேசம் கட்சித்தலைவர்கள் மீது ஸ்ரீரெட்டி அவதூறு பரப்பி வருவதாக, 3ஆவது நகர போலீஸில் ஜூலை 20ஆம் தேதி புகார் செய்தார். அதன்பேரில் ஸ்ரீரெட்டி மீது கடப்பா மற்றும் ஸ்ரீரெட்டி மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

அதன்பின், நடிகை ஸ்ரீரெட்டி தன்னை ஜெகன் மோகன் ரெட்டியின் தீவிர ஆதரவாளராகக் காட்டிக்கொண்டார். அவ்வப்போது ஜெகன் மோகன் ரெட்டியை அண்ணா என்று கூறி, பதிவுகள் இடத்தொடங்கினார்.

மதப்பிரார்த்தனைகளால் டென்ஷன் ஆன ஸ்ரீரெட்டி:

இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் இட்ட பதிவில், ’’உங்களில் எத்தனை பேர் சத்தமாக ஒலி எழுப்பக் கூடும் கடிகாரங்களாலும் மதப் பிரார்த்தனைகளாலும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளீர்கள். சிறப்பு நாட்களில் அதை ஏற்றுக்கொள்ளலாம்.

ஒவ்வொரு நாளும் இப்படி ஐந்து, ஆறு முறை ஒலிப்பதை யார் நிறுத்துவது. பக்தி நம் இதயங்களில் இருக்க வேண்டும். பிரார்த்தனைகள் நம் இதயத்தில் இருந்து வரவேண்டும். பிரார்த்தனைகள் ஒருவரை வெளியில் காட்டுவதற்காக அல்ல. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சில விருப்பங்கள் இருக்கும்.

எந்த ஒரு தனிமனித உரிமையையும் சீர்குலைக்க எந்த மதத்திற்கும் உரிமை இல்லை. இந்தியாவில் இந்த வகையான சித்திரவதைய அனுபவிக்க முடியும். வேறு எந்த நாடுகளிலும் இப்படி இருந்தது கிடையாது.

இந்த ஒலிபெருக்கியினால் மாணவர்கள், நோயாளிகள், இரவுப் பணியை செய்யும் அனைவரும், ஒவ்வொரு வயதினரும் ஒவ்வொரு இடையூறினை அனுபவிக்கிறார்கள்’’ என நடிகை ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.